news

News May 19, 2024

CSK அணிக்கு எமனாகிய ஷிவம் தூபே

image

ஆர்சிபி – சிஎஸ்கே விளையாடிய விறுவிறுப்பான ஐபிஎல் போட்டியில் ஷிவம் தூபேவின் ஆட்டம் சிஎஸ்கே ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இலக்கை வேகமாக துரத்திக் கொண்டிருந்த வேளையில் அவர் களமிறங்கி 15 பந்துகளில் 7 ரன்கள் மட்டும் எடுத்து அவுட்டானார். அதோடு, நிதானமாக விளையாடி அரைசதம் கடந்த ரச்சின் ரவீந்திராவின் ரன் அவுட்டுக்கும் காரணமாக இருந்தார்.

News May 19, 2024

சிவப்பு எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்

image

தமிழகத்தில் தேனி, நெல்லை, குமரி ஆகிய 3 மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் அதி கனமழைக்கான ‘சிவப்பு’ எச்சரிக்கை விடுத்துள்ளது. வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, வருகிற 21ஆம் தேதி வரை மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் தெரிவித்துள்ளது. சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்ட மாவட்டங்களில் 21 செ.மீட்டருக்கும் அதிகமாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது.

News May 19, 2024

இறுதி வரை பயத்தைக் காட்டிய தல – தளபதி

image

சென்னை அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூரு அணி வெற்றி பெற்றிருந்தாலும், சிஎஸ்கே அணியின் வீரர்கள் இறுதிவரை போராடி ஆர்சிபி அணிக்கு பயத்தைக் காட்டினர். குறிப்பாக, ஏழாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த தல (தோனி), தளபதி (ஜடேஜா) இணைந்து 61 ரன்கள் குவித்தனர். இதனால், கடைசி ஓவர் வரை இரு அணி ரசிகர்களும் நகங்களை கடித்துக் கொண்டிருந்தனர். இறுதியாக 19.2ஆவது பந்தில் தோனி அவுட் ஆனார்.

News May 19, 2024

பிரச்னைகளுக்கு தீர்வு தரும் வழிபாடு

image

சென்னையை அடுத்த காட்டாங்கொளத்தூரில் உள்ள காளஹஸ்தீஸ்வரரை தரிசித்தால் ராகு, கேது தோஷங்கள் நீங்கும் என்பது ஐதீகம். முத்தியால்பேட்டையில் உள்ள மல்லிகேஸ்வரரும் மரகதாம்பிகையும் கர்ப்பப்பை கோளாறுகளை தீர்ப்பதில் நிகரற்றவர்களாக பக்தர்கள் கருதுகின்றனர். காஞ்சிபுரம் காந்தி ரோடு மூங்கில் மண்டபம் அருகே உள்ள வழக்கறுத்தீஸ்வரர் ஆலயத்தில் 16 வாரங்கள் விளக்கேற்றி வழிபட வழக்குகளில் வெற்றி கிட்டும்.

News May 19, 2024

கவர்னர் மாளிகை அதிகாரிகள் மீது வழக்கு பதிவு

image

மேற்கு வங்க ஆளுநர் ஆனந்த போஸ் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கவர்னர் மாளிகையில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் பெண் ஒருவர் கடந்த 2ஆம் தேதி போலீசில் புகார் அளித்தார். இது தொடர்பாக விசாரணை நடந்து வருகின்ற நிலையில், புகார் தெரிவித்த அந்த பெண் நீதிபதி முன்பு தனது வாக்குமூலத்தை பதிவு செய்தார். இதையடுத்து, கவர்னர் மாளிகை அதிகாரிகள் 3 பேர் மீது கொல்கத்தா போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

News May 19, 2024

அசாத்தியத்தை நிகழ்த்தி காட்டிய RCB

image

நடப்பு சீசனின் பெரும் பரபரப்பான போட்டியாக CSK Vs RCB இடையிலான மேட்ச் நடந்து முடிந்துள்ளது. மே 3 வரை ஆடிய 8 போட்டிகளில் வெறும் ஒரேயொரு போட்டியில் வென்று கடைசி இடத்தில் இருந்த RCB அணி, தொடர்ச்சியாக 6 போட்டிகளை வென்று புள்ளிப்பட்டியலில் 4ஆம் இடத்தை பிடித்து சிறந்த கம்பேக்கை கொடுத்துள்ளது. மீம்களில் கேலி செய்யப்பட்ட அந்த அணி யாரும் எதிர்பார்க்காத வகையில் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதிப் பெற்றிருக்கிறது.

News May 19, 2024

இன்றைய தலைப்புச் செய்திகள்!

image

*பெண்கள் முன்னேறுவதை பார்த்து பயப்படுகிறார் மோடி – ஸ்டாலின்
*ஊழல் வழக்கில் சிக்கியுள்ள ஸ்வாதி மாலிவாலை பாஜக மிரட்டியுள்ளது – ஆம் ஆத்மி
*அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்கு முன்பு 3ஆம் உலகப் போர் தொடங்கலாம் – டிரம்ப்
* இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு 64,415 கோடி டாலராக உயர்ந்துள்ளது – ஆர்பிஐ
*நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து CSK அணி வெளியேறியது.

News May 19, 2024

வட இந்தியர்களை திமுக அவமதிக்கிறது: வானதி

image

இந்தியா என்பது ஒரு நாடல்ல; மாநிலங்களின் ஒன்றியம் என்று இப்போதும் திமுக பிரிவினையை பேசி வருவதாக பாஜக மூத்த தலைவர் வானதி சீனிவாசன் குற்றஞ்சாட்டியுள்ளார். மாநிலங்களிடையே பிரிவினையை உருவாக்க பிரதமர் மோடி முயல்கிறார் என்று ஸ்டாலின் கூறியிருந்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேசிய அவர், உ.பி.,, பிஹார் மாநிலங்களை சேர்ந்த வட இந்தியர்களை திமுக அவமதிக்கிறது எனக் கூறினார்.

News May 19, 2024

அண்ணாவின் பொன்மொழிகள்

image

✍புகழை நாம் தேடிச் செல்லக்கூடாது; அதுதான் நம்மைத் தேடி வரவேண்டும். ✍ஊக்கத்தைக் கைவிடாதே; அதுதான் வெற்றியின் முதல் படிக்கட்டு. ✍ஒரு நல்ல நூலைப் போல சிறந்த நண்பனும், நெருக்கமான உறவினனும் வேறு யாருமில்லை. ✍சமத்துவம், சமர்தர்மம் போன்ற லட்சியங்களைப் பேசுவது சுலபம் சாதிப்பது கடினம். ✍கண்டனத்தைத் தாங்கிக்கொள்ளும் திடமனம் இல்லையென்றால், கடமையை நிறைவேற்ற முடியாது,

News May 19, 2024

முருக தரிசனத்திற்கு சிறப்பு ஏற்பாடு செய்த யோகி பாபு

image

தமிழ் திரையுலகின் நட்சத்திர ஜோடியான நயன்தாரா – விக்னேஷ் சிவன் தம்பதியினர் அண்மையில், திருச்செந்தூர் கோயிலில் தரிசனம் செய்தது அனைவரும் அறிந்ததே. நடிகர் யோகி பாபுதான் அவர்கள் முருக தரிசனம் செய்ய காரணமாக இருந்ததாகக் கூறப்படுகிறது. தீவிர முருக பக்தரான அவரே கோயில் நிர்வாகத்திடம் பேசி, தரிசனம் செய்ய சிறப்பு ஏற்பாடுகளும் செய்து கொடுத்துள்ளார். அவரது அன்பால் நயன்தாரா குடும்பம் திக்குமுக்காடி போயுள்ளது.

error: Content is protected !!