India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
வெயில் காலங்களில் அதிகளவில் கிடைக்கும் நுங்கு பல்வேறு மருத்துவ குணங்களை கொண்டுள்ளது. பனை நுங்கிற்கு கொழுப்பைக் கட்டுப்படுத்தி உடல் எடையைக் குறைக்கும் ஆற்றல் உண்டு. நுங்கில் உள்ள நீரானது வயிற்றை நிரப்பி பசியைத் தூண்டுவதோடு, மலச்சிக்கல் மற்றும் வயிற்றுப்போக்கு ஆகியவற்றிற்கு மருந்தாக பயன்படுகிறது. அம்மை நோயைத் தடுத்து உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியைத் தந்து உடலை சுறுசுறுப்பாக வைத்திருக்கும்.
அதிகாரப் பசியில் இருக்கும் பிரதமர் மோடிக்கு இந்திய மகள்களின் பாதுகாப்பை விட பாலியல் குற்றவாளிகளின் பாதுகாப்பே முக்கியமாக இருப்பதாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் விமர்சித்துள்ளார். இது குறித்து தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், பாலியல் புகாரில் சிக்கியுள்ள பிரஜ்வல் ரேவண்ணா, பிரிஜ் பூஷண் சிங் போன்றவர்களுக்கு மோடி அடைக்கலம் தருவதாக குற்றம்சாட்டி பாஜக அரசை கடுமையாக சாடினார்.
நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து சிஎஸ்கே வெளியேறிவிட்டதால், தோனி அடுத்ததாக என்ன செய்யப் போகிறார் என்ற கேள்வி எழுந்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும், ஓய்வுகுறித்த கேள்விக்கு மீண்டும் விளையாடுவேன் என்று தன்னம்பிக்கையுடன் பதிலளிப்பார் தோனி. ஆனால், நேற்றைய போட்டியில் தோல்வியடைந்ததால் பேட்டி ஏதும் கொடுக்காமலே சென்றார் தோனி. CSK ரசிகர்கள், அவர் அடுத்த ஆண்டும் விளையாட வேண்டும் என்று விரும்புகின்றனர்.
பள்ளிகள் திறப்பது தொடர்பாக பள்ளிக்கல்விதுறை அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டம் வரும் 27ஆம் தேதி நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது. கோடை வெப்பம் காரணமாக ஜூன் 2ஆவது வாரம் பள்ளித் திறப்பு தள்ளிப்போகும் என கூறப்பட்ட நிலையில், தற்போது பரவலாக மழை பெய்கிறது. இதனால், தேர்தல் முடிவு வெளியான பிறகு, ஜூன் 7 அல்லது 10ஆம் தேதி பள்ளிகளை திறப்பது குறித்து இந்த ஆலோசனைக் கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்படவுள்ளது.
35 வயதைக் கடந்திருக்கும் விராட் கோலியின் விளையாட்டு இன்னமும் ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறது. 16 ஆண்டுகளாக பெங்களூரு அணிக்காக மட்டுமே விளையாடிவரும் கோலி, நடப்பு தொடரிலும் 708 ரன்கள் குவித்து முதலிடத்தில் இருக்கிறார். ‘கிங்’ என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் கோலி, இந்தமுறை RCB அணிக்கு கோப்பையை வென்றுத் தருவாரா?
சர்ச்சைகளுக்கு பெயர் போன இந்தி நடிகை பூனம் பாண்டேவின் குளியலறை வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகியது. விளம்பரத்திற்காக அவரே அந்த வீடியோவை திட்டமிட்டு வெளியிட்டு இருப்பார் என விமர்சித்தனர். ஆனால், அதனை தனது முன்னாள் காதலன்தான் செல்ஃபோனில் இருந்து எடுத்து, பொதுத்தளத்தில் வெளியிட்டார் என பூனம் தற்போது கூறியுள்ளார். இந்த குற்றச்சாட்டு பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
சென்னை அணியை வீழ்த்தி ப்ளே-ஆஃப் சுற்றுக்குள் நுழைந்த பெங்களூரு அணியின் கேப்டன் டுப்ளசியை நட்சத்திர வீரர் விராட் கோலி முத்தமிட்டார். சாண்ட்னரின் கேட்ச்சை டுப்ளசி அசாத்தியமாக பிடித்த பின்னர் ஓடிவந்த கோலி, முதுகின் மேல் ஏறிக் கொண்டு முத்தமிட்டார். இந்த நிகழ்வு காண்போரை உருக வைத்தது. பின்னர், போட்டி முடிந்தபின் தனது மனைவி அனுஷ்காவுக்கு ப்ளேன் கிஸ் பறக்கவிட்டார் கோலி.
தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை பெய்யவிருக்கும் மாவட்டங்களின் பட்டியலை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, ராமநாதபுர, சிவகங்கை, புதுக்கோட்டை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை மற்றும் கடலூர் மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத் தேர்தலின் ஐந்தாம் கட்ட வாக்குப்பதிவு நாளை (மே 20) நடைபெறவுள்ளது. உத்தர பிரதேசம், மகாராஷ்டிரா, மேற்கு வங்கம், பிஹார் உள்ளிட்ட 8 மாநிலங்களில் 49 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ராகுல் காந்தி, ராஜ்நாத் சிங், ஸ்மிரிதி இரானி உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் நாளை களம் காண்கின்றனர். இதற்கான பிரசாரம் நேற்று மாலையுடன் ஓய்வடைந்தது.
வேலை, கல்வி, வணிகம் போன்ற காரணங்களுக்காக வெளிநாடு, வெளி மாநிலங்களுக்கு புலம்பெயரும் தமிழர்களுக்கு, அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தவுள்ளது. 18-55 வயது வரை உள்ள தமிழர்கள் http://nrtamils.tn.gov.in-இல் ஒருமுறை பதிவு கட்டணமாக ₹200 செலுத்தி உறுப்பினர் அட்டை பெற்றால், காப்பீட்டுத் தொகை ₹5,00,000, ₹10,00,000 பெறலாம் என அரசு அறிவித்துள்ளது. முழு விவரங்களை <
Sorry, no posts matched your criteria.