news

News May 6, 2024

இ-பாஸ் நடைமுறை அமலுக்கு வந்தது

image

ஊட்டி, கொடைக்கானல் செல்ல இ-பாஸ் எடுக்கும் நடைமுறை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது. இதனை இணையதளம் மூலம் பெறுவதற்கான பதிவும் தொடங்கியுள்ளது. நாளை (மே 7) முதல் ஜுன் 30ம் தேதி வரை ஊட்டி, கொடைக்கானல் செல்ல இ-பாஸ் கட்டாயம் என ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. http://epass.tnega.org என்ற இணையதளத்தின் வாயிலாக இதற்கு விண்ணப்பிக்கலாம். பேருந்துகளில் செல்லும் சுற்றுலாப் பயணிகள் இ-பாஸ் பெற வேண்டிய தேவை இல்லை.

News May 6, 2024

முதல் இடத்தைப் பிடித்தது கொல்கத்தா

image

லக்னோ அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் வெற்றிபெற்றதன் மூலம் புள்ளிப் பட்டியலில் முதல் இடம் பிடித்துள்ளது கொல்கத்தா அணி. ராஜஸ்தான் மற்றும் கொல்கத்தா ஒரே புள்ளிகள் (16) பெற்றிருந்தாலும் ரன் ரேட் அடிப்படையில் KKR முதல் இடத்தில் உள்ளது. இருப்பினும் KKR அணியை விட RR ஒரு போட்டி குறைவாகவே விளையாடியுள்ளது. மூன்றாவது இடத்தில் CSK, 4- SRH, 5-LSG, 6-DC, 7-RCB, 8-PBKS, 9-GT, 10-MI அணிகள் உள்ளன.

News May 6, 2024

இன்றைய தலைப்புச் செய்திகள்

image

* இன்று மாலை வரை கடலில் இறங்க வேண்டாம் என இந்திய கடல்சார் தகவல் மையம் எச்சரித்துள்ளது.
* இ-பாஸ் முறையால் சுற்றுலாப் பயணிகளுக்கு எந்த தொந்தரவும், அச்சமும் ஏற்பட வாய்ப்பில்லை என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
* 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகிறது.
* தமிழகத்தில் உள்ள அரசு கலை & அறிவியல் கல்லூரிகளில் சேர இன்று முதல் விண்ணப்பிக்கலாம்.

News May 6, 2024

இன்று காலை 9:30க்கு தேர்வு முடிவுகள் வெளியாகிறது

image

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகிறது. இன்று காலை 9:30 மணிக்கு www.tnresults.nic.in, www.dge.tn.gov.in ஆகிய இணையதளங்களில் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும். தேர்வர்கள் தங்களது பதிவெண், பிறந்த தேதியை பதிவு செய்து தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். கடந்த மார்ச் 1 – 22 வரை நடைபெற்ற இத்தேர்வை சுமார் 8 லட்சம் மாணவர்கள் எழுதியது குறிப்பிடத்தக்கது.

News May 6, 2024

நாளை மூன்றாம் கட்டத் தேர்தல்

image

நாடு முழுவதும் நாளை (மே 7) 12 மாநிலங்களைச் சேர்ந்த 95 தொகுதிகளுக்கு மூன்றாம் கட்டத் தேர்த நடைபெறுகிறது. இந்த தேர்தலில் நட்சத்திர வேட்பாளர்களாக அமித் ஷா, டிம்பிள் யாதவ் (முலாயம் சிங் யாதவின் மருமகள்), ஜோதிர் ஆதித்ய சிந்தியா, பிரகலாத் ஜோஷி, சிவராஜ்சிங் சவுகான், திக் விஜய்சிங், ஆதிர்ரஞ்சன் சவுத்திரி ஆகியோர் போட்டியிடுகின்றனர். இதைத்தொடர்ந்து மே 13ஆம் தேதி நான்காம் கட்டத் தேர்தல் நடைபெறுகிறது.

News May 6, 2024

நாடு முழுவதும் மோடி எதிர்ப்பு அலை

image

மக்களவைத் தேர்தலில் பாஜகவின் தோல்வி உறுதியாகிவிட்டதாக கர்நாடக முதல்வர் சித்தராமையா கூறியுள்ளார். பிற்படுத்தப்பட்டோர், தலித்துகளுக்கு எதிராக இஸ்லாமியர்களைத் திருப்பிவிடும் வேலையை பாஜக செய்வதாகக் விமர்சித்த அவர், நாடு முழுவதும் மோடி எதிர்ப்பு அலை அதிகரித்துள்ளதாகக் கூறியுள்ளார். மேலும், சிறுபான்மையினர் இடஒதுக்கீட்டை காங்., பறித்ததாக மோடி பச்சையாக பொய் பேசுகிறார் என சாடியுள்ளார்.

News May 6, 2024

IPL: மும்பை vs ஹைதராபாத் இன்று மோதல்

image

ஐபிஎல்லில் இன்று நடைபெறும் போட்டியில் மும்பை மற்றும் ஹைதராபாத் அணிகள் மோத உள்ளன. ஏற்கெனவே பிளே ஆஃப்க்கு முன்னேறும் வாய்ப்பை இழந்துள்ள MI அணிக்கு இன்றைய போட்டி சம்பிரதாய ஆட்டமாகவே இருக்கும். ஐபிஎல்லில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெளிப்படுத்திவரும் SRH அணி இந்த போட்டியில் வெற்றிபெற்றால் பட்டியலில் CSK அணியை பின்னுக்குத் தள்ளி 3ஆவது இடத்தைப் பிடிக்கும். இன்று எந்த அணி வெற்றிபெறும்?

News May 6, 2024

தேர்தலுக்காக விமானப்படை வீரர்கள் மீது தாக்குதல்

image

ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் நேற்றுமுன்தினம் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் விமானப்படை வீரர் ஒருவர் உயிரிழந்தார். இந்நிலையில் இது தீவிரவாத தாக்குதல் அல்ல, தேர்தலுக்காக பாஜக நடத்தும் நாடகம் என பஞ்சாப் முன்னாள் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி விமர்சித்துள்ளார். தேர்தல் நடைபெறும்போதெல்லாம் இத்தகைய நாடகத்தை பாஜக அரங்கேற்றிவருவதாகக் கூறிய அவர், இந்த தாக்குதலில் எந்த உண்மையும் இல்லை என்றார்.

News May 6, 2024

இன்றைய நல்ல நேரம்

image

▶மே – 6, சித்திரை – 23 ▶கிழமை – திங்கள் ▶நல்ல நேரம்: 9:00 AM – 10:30 AM, 4:30 PM – 5:30 PM ▶கெளரி நல்ல நேரம்: 1:30 AM – 2:30 AM, 7:30 PM – 8:30 PM ▶ராகு காலம்: 7:30 AM – 9:00 AM ▶எமகண்டம்: 10:30 AM – 12:00 PM ▶குளிகை நேரம்: 1:30 PM – 3:00 PM ▶பிறை: தேய்பிறை ▶சூலம்: கிழக்கு ▶பரிகாரம்: தயிர் ▶திதி: திதித்துவம்

News May 6, 2024

பாஜக 101% வெற்றிபெறும்

image

ரேவண்ணா கைது செய்யப்பட்டது கர்நாடக மக்களவைத் தேர்தலில் எதிரொலிக்காது என கர்நாடக முன்னாள் முதல்வரும் பாஜக பிரமுகருமான எடியூரப்பா கூறியுள்ளார். காங்கிரஸ் கட்சியில் பிரதமர் வேட்பாளர் இல்லாதது பெரும் பின்னடைவு எனக் கூறிய அவர், ராகுல் காந்தியின் பேச்சு பெரிதாக எடுபடவில்லை என்றார். மேலும், மக்களவைத் தேர்தலில் கர்நாடகாவில் பாஜக 101% வெற்றிபெறும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!