news

News May 19, 2024

அடுத்தகட்ட பயிற்சிக்கு இந்திய வீரர்கள்

image

NCA எனும் தேசிய கிரிக்கெட் அகாடமி, வீரர்கள் சிலரை அடுத்தகட்ட பயிற்சிக்காக தேர்வு செய்துள்ளது. ஷ்ரேயஸ், இஷான், முஷீர், மயங்க், உம்ரான், ஆவேஷ், குல்தீப் சென், ஹர்ஷித், கலீல், அசுடோஷ், தேஷ்பாண்டே, ரயான் பராக், சாய் சுதர்ஷன், சாய் கிஷோர், படிக்கல், ப்ரித்திவி ஷா ஆகியோர் High Performance பயிற்சியை மேற்கொள்ளவுள்ளனர். இதன் அடிப்படையில்தான் வீரர்கள் சர்வதேசப் போட்டிக்கு தேர்வு செய்யப்படுவார்கள்.

News May 19, 2024

தென்மேற்கு பருவமழை தொடங்கியது

image

அந்தமான் பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தொடங்கியதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வழக்கமாக, மே 22 முதல் 25ஆம் தேதிக்குள் தொடங்கும் பருவமழை, இந்த ஆண்டு 3 நாட்களுக்கு முன்னதாகவே தொடங்கியிருக்கிறது. இம்மாத இறுதியில் கேரளாவில் பருவமழை தொடங்கும் என்றும், படிப்படியாக அது நாடு முழுவதும் மழையைக் கொடுக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News May 19, 2024

விஜய் ஆண்டனி மகளின் தற்கொலைக்கு காரணம்?

image

திரைப்பிரபலங்கள் பலரைப் பற்றி பேசி புயலைக் கிளப்பி வரும் RJ சுசித்ரா, விஜய் ஆண்டனி மகள் மீராவின் தற்கொலை பற்றியும் பேசியிருக்கிறார். விஜய் ஆண்டனியைப் போலவே மீராவும் ப்ளாஸ்டிக் சர்ஜரி செய்துகொள்ள விரும்பியதாகவும், அதனை விஜய் ஆண்டனி ஏற்கவில்லை என்றும் சுசித்ரா கூறியிருக்கிறார். இதனால், மனம் உடைந்துதான் மீரா தற்கொலை செய்துகொண்டார் என்று சுசித்ரா பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

News May 19, 2024

தாய்லாந்து ஓபனில் இந்தியா பட்டம் வென்று அசத்தல்

image

தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டி பாங்காக்கில் நடைபெற்றது. இதில், ஆண்கள் இரட்டையர் பிரிவில் இறுதிப் போட்டியில் இந்தியாவின் சாத்விக், சிராக் ஷெட்டி ஜோடி, சீனாவின் சென் போ யாங், லியு யி ஜோடியை எதிர்கொண்டது. ஆட்டத்தின் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய இந்திய வீரர்கள், 21 – 15, 21 -15 என்ற நேர் செட் கணக்கில் சீன ஜோடியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றனர்.

News May 19, 2024

ஆசை காட்டி கூட்டணி பேச்சு நடத்திய பாஜக: EX மினிஸ்டர்

image

மத்திய அமைச்சர், ஆளுநர் உள்ளிட்ட பதவிகளை வழங்குவதாக ஆசை காட்டி அரசியல் கட்சிகளிடம் பாஜக பேச்சுவார்த்தை நடத்தியதாக ஆர்.பி.உதயக்குமார் விமர்சித்துள்ளார். அண்ணாமலையின் பேச்சுகள் அரைவேக்காட்டுத்தனமானது என்பது மக்களுக்கே தெரியும் என சாடிய அவர், அதிமுக உடன் கூட்டணி குறித்து பேசிய கட்சிகளை பாஜக கடத்திச் சென்று பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

News May 19, 2024

உடல் எடையை குறைப்பது எப்படி?

image

ஆரோக்கியமான உடலைக் கொண்ட எவராக இருந்தாலும் உடல் எடையைக் குறைப்பதற்கு ஒரே வழிதான் உண்டு. உடலில் கலோரி குறைபாட்டை ஏற்படுத்துவதுதான் அந்த வழி. அதற்கு நாம் செலவிடும் கலோரிகள், உட்கொள்ளும் கலோரிகளை விட அதிகமாக இருக்க வேண்டும். ஆகவே, தேவையான அளவு மட்டுமே சாப்பிட்டு, போதுமான காலம் உடற்பயிற்சி செய்தால் மட்டுமே உடல் எடை குறையும். மற்ற முறைகள் அனைத்தும் ஏமாற்று வேலை.

News May 19, 2024

பூண்டு விலை தாறுமாறாக உயர்ந்தது

image

வரத்து குறைந்ததால், காய்கறிகளின் விலை தாறுமாறாக அதிகரித்துள்ளது. ஒரு கிலோ பீன்ஸ் ₹240, பீட்ரூட் ₹70, சின்ன வெங்காயம் ₹75, முட்டைகோஸ் ₹65, கேரட் ₹90, மிளகாய் ₹100, முருங்கைக்காய் ₹80, இஞ்சி ₹200 உருளைக்கிழங்கு ₹80, கத்தரிக்காய் ₹75, தக்காளி ₹48க்கு விற்பனையாகிறது. இதில், உச்சகட்டமாக பூண்டு கிலோ ₹400க்கு விற்கப்படுவதால், பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

News May 19, 2024

மழையால் காய்ச்சல் பரவுகிறதா?

image

தமிழ்நாட்டில் தற்போது பரவலாக மழை பெய்து வரும் நிலையில், சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை காய்ச்சலால் பாதிக்கப்படுகின்றனர். குறிப்பாக, மதுரையில் 3 நாள்களில் 15 சிறார்கள் உட்பட 40 பேர் காய்ச்சலால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால், மருத்துவமனைகளில் காய்ச்சலுக்கான தனி வார்டுகளை உருவாக்கவும், காய்ச்சல் போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனே மருத்துவரை அணுகவும் சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. .

News May 19, 2024

RCBஇன் விடாமுயற்சிக்கு விடை கிடைக்குமா?

image

ஒவ்வொரு ஆண்டும் ‘ஈ சாலா கப் நமதே’ என்ற முழக்கத்தோடு IPL போட்டிகளில் களம் இறங்கும் RCB அணி, தொடர் தோல்விகளை மட்டுமே பரிசாக பெற்றுள்ளது. மற்ற அணி ரசிகர்களால் ட்ரோல் செய்யப்படும் RCB, இம்முறை ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியதையே கொண்டாடி வருகிறது. ஒருவேளை, காயம்பட்ட சிங்கமாய் RCB கோப்பையை வென்றால், அதன் விடாமுயற்சிக்கு மற்ற அணி ரசிகர்களும் நிச்சயம் மதிப்பளிப்பார்கள் என்பதில் சந்தேகம் இல்லை.

News May 19, 2024

திமுகவிலிருந்து நீக்கப்படுவாரா சிவாஜி கிருஷ்ணமூர்த்தி?

image

குஷ்பு குறித்து அவதூறான கருத்துக்களை தெரிவித்த திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி கட்சியில் இருந்து நிரந்தரமாக நீக்கப்பட்டார். ஆனால், தேர்தலின்போது திமுக அவரை மீண்டும் கட்சியில் இணைத்தது. தற்போது, ராதிகா குறித்து மோசமாக பேசி மீண்டும் சர்ச்சையில் சிக்கியிருந்தாலும், இதுவரை கட்சியில் இருந்து நீக்கப்படவில்லை. இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருவதால், விரைவில் நீக்கப்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

error: Content is protected !!