India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஜம்மு-காஷ்மீரில் தீவிரவாத அச்சுறுத்தல் இன்னும் உள்ளது, அது முடிவுக்கு வரவில்லை என்று தேசிய மாநாட்டு கட்சித் தலைவரும், முன்னாள் முதல்வருமான பரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார். சோபியான், அனந்த்நாக்கில் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் உள்ளிட்ட 2 பேர் தீவிரவாதிகளால் கொல்லப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்த அவர், இச்சம்பவம் குறித்து சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டுமென்றும் வலியுறுத்தினார்.
தமிழகத்தில் 19 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, நீலகிரி, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, வேலூர், ஈரோடு, சேலம், நாமக்கல், கோவை, திருப்பூர், கரூர், மதுரை, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.
சேலத்தில் இபிஎஸ் தனது 70ஆவது பிறந்தநாளை அண்மையில் கொண்டாடியபோது, அதிமுகவின் முக்கியத் தலைவர்கள் பலரும் நேரில் வாழ்த்து தெரிவித்தனர். ஆனால், வேலுமணி, செங்கோட்டையன் உள்ளிட்ட முன்னாள் அமைச்சர்கள் யாரும் சேலம் செல்லவில்லை. தொலைபேசியிலும் வாழ்த்து தெரிவிக்கவில்லை. பிறகு, எக்ஸ் பக்க பதிவில் வேலுமணி வாழ்த்து தெரிவித்த போதிலும், அவர்களிடையே விரிசல் ஏற்பட்டிருப்பதாக அக்கட்சியினர் பேசி வருகின்றனர்.
ஹைதராபாத்துக்கு எதிரான இன்றைய ஐபிஎல் போட்டியில், பஞ்சாப் வீரர் பிரப்சிம்ரன் அரை சதம் கடந்தார். தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடி வந்த அவர், 6 Four, 4 Six என விளாசி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினார். இது அவரது 3ஆவது ஐபிஎல் அரைசதம் ஆகும். முழுக்க முழுக்க இந்திய வீரர்களை கொண்டு களமிறங்கியுள்ள பஞ்சாப் அணி, பலம் வாய்ந்த ஹைதராபாத்தை வீழ்த்துமா என்று பொறுத்திருந்து பார்ப்போம். யார் வெற்றி பெறுவார்?
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், தோனி குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் உருக்கமாக பதிவிட்டுள்ளார். அதில், தோல்வி விளிம்பில் சிஎஸ்கே இருக்கையில் வந்த தோனியை பார்த்தவுடன், இது தான் கடைசி போட்டி என்று உள்ளுக்குள் வருந்தியதாகவும், ஆனால் அவர் அடித்த கடைசி சிக்சரை பார்த்து ஓய்வு இல்லை என உறுதி செய்ததாகவும், சாம்ராஜ்யங்கள் சரியலாம், சாகாவரம் கொண்ட படைத்தலைவன் மடிவதில்லை என பதிவிட்டுள்ளார்.
ரேஷன் கடைகளில் மாதம் 2.20 கோடி கார்டுதாரர்களுக்கு பொருட்கள் வழங்கப்படுகிறது. இப்பொருட்கள் 50கி சாக்கு பைகளில் அனுப்பப்படுகிறது. இந்த பைகளை ₹20 வரை கூட்டுறவு சங்கங்கள் விற்கின்றன. இது அவர்களுக்கு வாடகை உள்ளிட்ட செலவுகளை சமாளிக்க உதவியது. ஆனால், தற்போது பிளாஸ்டிக் பை மூலம் அனைத்து கடைகளுக்கும் பொருட்கள் அனுப்பப்படுகிறது. இது ஒரு பை ₹3 மட்டுமே விலை போவதால் கடை ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
ஆரணியில் நடந்த காங்கிரஸ் கூட்டத்தில் பேசிய செல்வ பெருந்தகை, பிற கட்சிகளிடம் தொகுதிக்காக எவ்வளவு நாள்தான் கையேந்தி நிற்பது, இந்நிலை மாறி, பிற கட்சிகளுக்கு தொகுதி ஒதுக்கீடு செய்யும் நிலைக்கு காங்கிரஸ் உயர வேண்டுமென பேசியதாக கூறப்படுகிறது. இந்த வீடியோவை யாரோ திமுக மேலிடத்துக்கு அனுப்பி வைக்க, அதை கண்டு அவர்கள் கோபமடைந்து, காங்கிரஸ் மேலிடத்திடம் புகார் கூறியதாக சொல்லப்படுகிறது.
பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள ‘தங்கலான்’ திரைப்படம், வரும் ஜூன் மாதம் வெளியாகவுள்ளதாக இணையத்தில் தகவல் கசிந்துள்ளது. பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதால், புரமோஷனுக்கான வேலைகளை இந்த மாத இறுதியில் தொடங்க உள்ளதாகவும், பல்வேறு நகரங்களில் புரமோஷன் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. படத்தின் வெளியீடு தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று தெரிகிறது.
SRH-க்கு எதிரான இன்றைய ஐபிஎல் போட்டியில், பஞ்சாப் அணி புதிய சாதனை படைத்துள்ளது. டி20 உலகக் கோப்பைத் தொடருக்காக வெளிநாட்டு வீரர்கள் நாடு திரும்பியதால், PBKS அணி உள்ளூர் வீரர்களுடன் களமிறங்குகிறது. தென்னாப்பிரிக்க வீரர் ரிலீ ரோசோவ் மட்டும் அணியில் இடம்பெற்றுள்ளதால், ஐபிஎல் வரலாற்றில் ஒரே ஒரு வெளிநாட்டு வீரருடன் களமிறங்கும் முதல் அணி என்ற பெருமையை பெற்றது பஞ்சாப் அணி. SRH-ஐ வீழ்த்துமா பஞ்சாப்?
தமிழகத்தில் ஒவ்வொரு பள்ளி மாணவர்களின் விவரங்களும் EMIS தளத்தின் மூலம் ஆன்லைனில் பராமரிக்கப்படுகிறது. இந்தாண்டு முதல் இத்தளம் மூலம் மாணவர்களின் மதிப்பெண், பள்ளி சார்ந்த தகவல்கள் பெற்றோருக்கு SMS மூலம் தெரியப்படுத்தப்பட உள்ளது. இதற்காக பெற்றோரின் செல்போன் எண்களை சரி பார்க்க OTP அனுப்பப்படுகிறது. ஆனால், பெற்றோரோ, ஆசிரியர்களிடம் OTP சொல்ல அச்சமடைகின்றனர். இதனால், இப்பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.