India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
2008இல் தொடங்கி ஐபிஎல் தொடர் நடைபெற்று வருகிறது. இதுவரை நடைபெற்ற போட்டிகளில், 226 போட்டிகளுக்கு தோனி தலைமை தாங்கியுள்ளார். சிஎஸ்கே, ரைசிங் புனே சூப்பர் ஜெயின்ட்ஸ் அணிகளுக்கு அவர் கேப்டனாக இருந்துள்ளார். இதற்கடுத்து, அதிகபட்சமாக மும்பை அணிக்கு ரோஹித் சர்மா 158 போட்டிகளுக்கு கேப்டனாக இருந்துள்ளார். 2024 ஐபிஎல் தொடரில்தான் 2 பேரும் கேப்டன் பதவியிலிருந்து விடுவிக்கப்பட்டனர்.
ரசிகர் மன்றம் மூலம் நற்பணிகளை செய்து வந்த விஜய், சில மாதத்துக்கு முன்பு த.வெ.க. எனும் கட்சியை ஆரம்பிப்பதாக அறிக்கை வெளியிட்டார். இதையடுத்து, கட்சி நிர்வாகிகள் குறித்த அறிவிப்பையும் அறிக்கை மூலம் தெரியப்படுத்தினார். மேலும், அவ்வப்போது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். இதை கண்ட எதிர்க்கட்சியினர், விஜய் லெட்டர் பேடில் அரசியல் கட்சி நடத்துகிறாரா? என கேட்கின்றனர். கவனிப்பாரா விஜய்?
நடப்பு ஐபிஎல் தொடரில், சென்னை சூப்பர் கிங்ஸ் வீரரான தோனிக்கு ரசிகர்கள் மிகப்பெரிய வரவேற்பு அளித்துள்ளனர். சென்னை, வான்கடே, சின்னசாமி, தரம்சாலா போன்ற அனைத்து மைதானங்களிலும், CSK மற்றும் தோனிக்கென்று தனி ரசிகர் படையே உள்ளது. ரசிகர்கள் காட்டும் அளவு கடந்த அன்பு தான், CSK அணியின் மிகப்பெரிய பலம். CSK அணி, இந்தாண்டு பிளே-ஆப்புக்கு முன்னேறவில்லை என்றாலும், ரசிகர்கள் மனதளவில் இடம்பிடித்துள்ளது.
கடந்த நவம்பர், டிசம்பரில் பருவமழை காலத்தில் பெய்த பெருமழையால் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. பல பகுதிகளில் ஆற்று வெள்ளம் ஊருக்குள் புகுந்தது. இந்நிலையில் தற்போது மீண்டும் வானிலை மையம் தென்மாவட்டங்களுக்கு அதி கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் தென்மாவட்ட மக்கள் மனதில் மீண்டும் பழைய மழை பாதிப்புகள் நிழலாடத் துவங்கியுள்ளன.
உத்தர பிரதேச மாநிலம் பாஸ்தியில் பகுஜன் சமாஜ் கட்சி பிரசார கூட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சித் தலைவரும், முன்னாள் முதல்வருமான மாயாவதி பங்கேற்று பேசினார். அப்போது அவர், உத்தர பிரதேசத்தில் சமாஜ்வாதி கட்சி ஆட்சியில் இருந்தபோது, தலித்துகள், ஆதிவாசி மக்களுக்கான இடஒதுக்கீட்டை ரத்து செய்ததாகவும், ஆதலால் அக்கட்சியை மன்னிக்கக் கூடாது, மக்களவைத் தேர்தலில் அக்கட்சிக்கு வாக்களிக்கக் கூடாது என்றார்.
பஞ்சாப், ஹைதராபாத் அணிகளுக்கு இடையேயான லீக் போட்டி நடைபெறுகிறது. இதில் முதலில் பேட் செய்த பஞ்சாப் அணி 215 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது. இதையடுத்து ஹைதராபாத் அணி தனது பேட்டிங்கை தொடங்கியது. டிராவிஸ் ஹெட், அபிசேக் சர்மா ஆகியோர் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். அதிர்ச்சியளிக்கும் வகையில், அர்ஸ்தீப் வீசிய முதல் ஓவர் முதல் பந்திலேயே டிராவிஸ் ஹெட் போல்ட் ஆனார்.
வேலூர் திமுக ஒன்றிய செயலாளர் ஞானசேகரின் மகன் சரண், நண்பர்களுடன் வெங்கடாபுரம் அங்கன்வாடி மையத்தில் போதையில் புகைபிடித்தபடி கேங்க்ஸ்டர் தோரணையில் கத்திகளுடன் ரீல்ஸ் எடுத்து வெளியிட்டிருந்தார். இதுகுறித்த புகாரின்பேரில், பொது இடத்தில் தவறாக நடந்துகொண்டதற்காக ரூ.10, ரூ.200 மற்றும் ரூ.1,000 அபராதம் விதிப்பதற்கான ஐ.பி.சி 510, 290, 448 ஆகிய சாதாரண பிரிவுகளின்கீழ் போலீஸ் வழக்குப்பதிவு செய்துள்ளது.
PBKS-SRH இடையேயான ஐபிஎல் போட்டியில், ஹைதராபாத் அணிக்கு 215 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த பஞ்சாப் அணி, தொடக்கம் முதலே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தது. பிரப்சிம்ரன்- 71, அதர்வா டெய்ட்- 46, ரிலீ ரோசோவ்-49 ஆகியோர் சிறப்பாக விளையாடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இதனால் 20 ஓவர்கள் முடிவில், பஞ்சாப் அணி 214/5 ரன்கள் குவித்தது.
அரசியல் ஆலோசகரான பிரசாந்த் கிஷோர் கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவுக்கு தேர்தல் பணி செய்தார். பிறகு எந்த அரசியல் கட்சிக்கும் இனி பணி செய்யப் போவதில்லை என அவர் அறிவித்தார். இந்நிலையில் அண்மையில் சென்னை வந்த அவரிடம் திமுக தரப்பில் அடுத்த சட்டப்பேரவைத் தேர்தலுக்கு பணியாற்ற கோரிக்கை வைக்கப்பட்டதாகவும், இதற்கு நீண்ட யோசனைக்கு பிறகு அவர் ஒப்புக் கொண்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
கிரிக்கெட் வீரர்களின் வாழ்க்கையில் மீடியாக்கள் எல்லை மீறுவதாக ரோஹித் ஷர்மா குற்றம் சாட்டியுள்ளார். தனது X பக்கத்தில் பதிவிட்ட அவர், தனது உரையாடலைப் பதிவு செய்ய வேண்டாமென தனியார் சேனலிடம் கேட்டுக் கொண்ட போதிலும் அது ஒளிபரப்பப்பட்டது என்றும், இது தனியுரிமையை மீறும் செயல் என்றும் தெரிவித்துள்ளார். மேலும், இது கிரிக்கெட் வீரர்களுக்கும் ரசிகர்களுக்குமிடையே உள்ள நம்பிக்கையை உடைக்கும் என குறிப்பிட்டார்.
Sorry, no posts matched your criteria.