India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மே 26ஆம் தேதி சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறும் ஐபிஎல் இறுதிப் போட்டிக்கான டிக்கெட் விற்பனை, நாளை மாலை 6 மணிக்கு தொடங்க உள்ளது. ரூபே (RuPay) கார்டு வைத்திருப்பவர்கள், இறுதிப் போட்டிக்கான டிக்கெட்டுகளை நாளை பெற்றுக் கொள்ளலாம் என்றும், மற்றவர்கள் நாளை மறுநாள் (மே 21) வாங்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பேடிஎம் ஆப், பேடிஎம் இன்சைடர் மற்றும் www.insider.in என்ற இணையதளத்தில் பெற்றுக் கொள்ளலாம்.
விஜயகாந்த் மறைவுக்கு பிறகு, தேமுதிகவுக்கு அதிக கடன் இருந்ததாகவும், அதை எப்படி அடைப்பது எனத் தெரியாமல் பிரேமலதா இருந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் மக்களவைத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்து தேமுதிக போட்டியிட்ட நிலையில், அக்கட்சிக்கு கிடைத்த நிதியை வைத்து, ஒட்டுமொத்த கடனையும் அடைத்து விட்டதாகவும், இதனால் அவர் பெரும் மகிழ்ச்சியில் உள்ளதாகவும் கூறப்படுகிறது.
மேற்குவங்க பாஜக எம்.பி குனார் ஹெம்ப்ராம், மக்களவைத் தேர்தலில் தனக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருந்தார். இந்நிலையில், அந்த நம்பிக்கை பொய்த்து போனதை அடுத்து, கடந்த மார்ச் மாதம் கட்சியில் இருந்து விலகினார். இந்நிலையில், இன்று அவர் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் அபிஷேக் பானர்ஜி முன்னிலையில் அக்கட்சியில் இணைந்துள்ளார்.
வீர் சவார்க்கரின் 5 பெருமை சொல்ல முடியுமா என INDIA கூட்டணிக்கு மோடி சவால் விட்டிருந்தார். இதற்கு நேச்சுரல் சலூன்கள் சிஇஓ குமாரவேல், சவார்க்கர் கோழை, காந்தி கொலைக்கு திட்டமிட்டவர், கருணை மனு நிபுணர், கோட்சேவை மூளை சலவை செய்து காந்தியை கொன்றவர், இந்துத்துவா மனநோயாளி என பதிவிட்டார். இதனால், சாவர்க்கர் ஆதரவாளர்கள் நேச்சுரல் சலூன்களை புறக்கணிக்கும்படி Xஇல் டிரெண்ட் ஆக்கி வருகின்றனர்.
17 ஐபிஎல் தொடர்களில் 10 வீரர்கள் அதிக ரன்களை குவித்துள்ளனர். அவர்களில் கோலி 251 போட்டிகளில் விளையாடி 7971 ரன்கள் குவித்து முதலாவதாக உள்ளார். இதில் 8 சதம், 55 அரைசதம் அடங்கும். தவான் (6769), ரோஹித் சர்மா (6628), வார்னர் (6565), சுரேஷ் ரெய்னா (5528), தோனி (5243), டி வில்லியர்ஸ் (5162), கிறிஸ் கெய்ல் (4965), உத்தப்பா (4952), தினேஷ் கார்த்திக் (4831) ஆகியோர் 2- 10 வரையிலான இடங்களில் உள்ளனர்.
ராஜஸ்தான் முன்னாள் அமைச்சரும், பரத்பூர் அரச குடும்ப உறுப்பினருமான விஸ்வேந்திர சிங், மனைவியும் முன்னாள் எம்பியுமான திவ்யா சிங், மகன் அனிருத்துக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார். அதில், அரண்மனை உள்ளிட்ட சொத்துக்களை மனைவி அபகரித்து கொண்டு விட்டதாகவும், சாப்பாடு தரவில்லை எனவும், அடித்து சித்ரவதை செய்வதாகவும் தெரிவித்துள்ளார். இதனை திவ்யா சிங்கும், அனிருத்தும் மறுத்துள்ளனர்.
பஞ்சாப்பிற்கு எதிரான இன்றைய ஐபிஎல் போட்டியில், ஹைதராபாத் அணி புதிய சாதனை படைத்துள்ளது. அபிஷேக் ஷர்மா, க்ளாஸனின் அதிரடியான ஆட்டத்தால் 14 சிக்சர்களை பதிவு செய்த ஹைதராபாத் அணி, நடப்பு ஐபிஎல் தொடரில் மொத்தமாக 160 சிக்சர்களை விளாசியுள்ளது. இதன் மூலம், பெங்களூரு அணியைத் (157 சிக்சர்கள்) தொடர்ந்து, ஐபிஎல் வரலாற்றில் ஒரு சீசனில் 150 சிக்சர்களை அடித்த 2ஆவது அணி என்ற புதிய மைல் கல்லை எட்டியுள்ளது.
ரஜினி ரசிகர்கள் மட்டுமல்லாமல் அனைத்து தரப்பு மக்களாலும் கொண்டாடி தீர்க்கப்பட்ட படம் ‘படையப்பா’. இதில், ரஜினியின் நடிப்பு, ஸ்டைல், ரம்யா கிருஷ்ணனின் கதாபாத்திரம் இன்றளவும் பேசப்படுகிறது. ரஹ்மான் இசையில் பாடல்கள் அனைத்தும் ஹிட் அடித்தன. தற்போது ரீரிலிஸ் படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைப்பதால், இப்படத்தை ரீரிலிஸ் செய்வது குறித்து ரஜினியுடன் தயாரிப்பாளர் தேனப்பன் பேச்சுவார்த்தை நடத்தியதாக தெரிகிறது.
காங்கிரஸ் கட்சிக்குள் அவுரங்கசீப் ஆவி புகுந்திருப்பதாக உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் விமர்சித்துள்ளார். அவுரங்கசீப் தனது சகோதரர், தந்தையை கொலை செய்ததாகவும், இந்து கோயில்களை இடித்ததாகவும், அவரின் ஆவிதான் காங்கிரஸ், சமாஜ்வாதி கட்சிகளுக்குள் புகுந்துள்ளதாகவும், இதனால் தான் குடும்ப வரி விதித்து, இந்துக்களின் சொத்துகளை முஸ்லிம்களுக்கு வழங்குவோம் என அக்கட்சிகள் கூறுவதாக தெரிவித்துள்ளார்.
மத்தியில் மீண்டும் ஆட்சியமைக்க முடியாது என்பது பாஜகவுக்கே தெரியும் என்று டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் சாடியுள்ளார். டெல்லியில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசிய அவர், ஆம் ஆத்மி தலைவர்களை தேடித் தேடி பாஜக கைது செய்வதாக கூறினார். மக்களவைத் தேர்தலில் பாஜகவை தோற்கடித்து மீண்டும் மத்தியில் ஆட்சிக்கு வர விடாமல் தடுத்தால், அக்கட்சியால் யாரையும் கைது செய்ய முடியாதென்றும் அவர் தெரிவித்தார்.
Sorry, no posts matched your criteria.