news

News May 19, 2024

புதிய சாதனை படைத்தார் அபிஷேக் ஷர்மா

image

PBKS-க்கு எதிரான ஐபிஎல் போட்டியில், SRH வீரர் அபிஷேக் ஷர்மா புதிய சாதனை படைத்துள்ளார். அதிரடியாக விளையாடி வந்த அவர் 5 Four, 6 Six என விளாசி அசத்தினார். இதன் மூலம், நடப்பு ஐபிஎல் தொடரில் அதிக சிக்சர்கள் (41 Six) அடித்த வீரர் என்ற பெருமையை அடைந்ததோடு, முதலிடத்தில் இருந்த விராட் கோலியை பின்னுக்குத் தள்ளினார். மொத்தமாக 66(28) ரன்கள் குவித்த அவர், தனது 3ஆவது ஐபிஎல் அரை சதத்தை பதிவு செய்தார்.

News May 19, 2024

அதிக மீட்டர் தூரம் சிக்சர் அடித்தவர்கள்

image

▶தோனி- 110 மீட்டர் vs பெங்களூரு
▶தினேஷ் கார்த்திக்- 108 மீட்டர் vs ஹைதராபாத்
▶ஹென்ரிக் க்ளாஸன்- 106 மீட்டர் vs பெங்களூரு
▶வெங்கடேஷ் ஐயர்- 106 மீட்டர் vs பெங்களூரு
▶நிகோலஸ் பூரன்- 106 மீட்டர் vs பெங்களூரு
▶ஹெட்மயர்- 106 மீட்டர் vs ஹைதராபாத்
▶இஷான் கிஷன்- 103 மீட்டர் vs ஹைதராபாத்
▶ஆண்ரே ரஸல்- 102 மீட்டர் vs ஹைதராபாத்
▶தோனி- 101 மீட்டர் vs லக்னோ
▶ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ்- 101மீட்டர் vs மும்பை

News May 19, 2024

ஈரான் அதிபரை தேடும் பணி தீவிரம்

image

விபத்தில் சிக்கிய ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி சென்ற ஹெலிகாப்டரை தேடும் பணி நடைபெறுகிறது. அஜர்பைஜான் கிழக்குப் பகுதியில் அதிபர் இப்ராஹிம் ரைசி, வெளியுறவு அமைச்சர் உள்ளிட்டோர் ஹெலிகாப்டரில் சென்றபோது எதிர்பாராதவிதமாக விபத்தில் சிக்கியுள்ளது. இதுதவிர வேறு தகவல் எதுவும் தெரியவில்லை. மோசமான வானிலை காரணமாக ஹெலிகாப்டரை தேடும் பணி தாமதமடைவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

News May 19, 2024

சென்னையில் ஆசிட் வீசி தாக்குதல்

image

சென்னை ஈக்காட்டுதாங்கல் மெட்ரோ ரயில் நிலையம் அருகே சாலையோரம் வசிக்கக்கூடிய மக்கள் மீது அடையாளம் தெரியாத நபர்கள் ஆசிட் வீசி தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில், குழந்தைகள் உள்பட 5க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். தொடர்ந்து, தாக்குதல் நடத்திய நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். ஆள்நடமாட்டம் அதிகமுள்ள இடத்தில் நடந்த இச்சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

News May 19, 2024

‘ஆளவந்தான்’ படம் OTT-இல் வெளியானது

image

நடிகர் கமல்ஹாசனின் ‘ஆளவந்தான்’ திரைப்படம், அமேசான் பிரைமில் வெளியாகியுள்ளது. சுரேஷ் கிருஷ்ணா இயக்கிய இப்படத்தில், கமல் இரட்டை வேடத்தில் நடித்திருப்பார். VFX, அனிமேஷன், கிராபிக்ஸ் என பல்வேறு புதுவிதமான முயற்சியில் உருவான இப்படத்திற்கு, அப்போது எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை. சில மாதங்களுக்கு முன், டிஜிட்டல் மெருகேற்றல் செய்து திரையரங்குகளில் மறுவெளியீடு செய்ததில் படம் நல்ல வரவேற்பை பெற்றது.

News May 19, 2024

நகைக்கடன் வாங்கியோருக்கு அதிர்ச்சி செய்தி

image

வங்கியில் நகைக் கடன் வைத்திருப்போர் அக்கடனை அடைக்க முடியாதபட்சத்தில், நகைகள் ஏலத்திற்கு செல்லாமல் இருக்க அதனை புதுப்பிப்பது வழக்கம். இந்நிலையில், வாடிக்கையாளர்கள் பெற்ற நகைக் கடன்கள் திருப்பிச் செலுத்தப்படுவதையும், கடன் முடிக்கப்படுவதையும் உறுதிசெய்யுமாறு வங்கிகள் தங்கள் கிளைகளுக்கு அறிவுறுத்தியுள்ளன. அத்துடன், கடனை புதுப்பிக்கவோ அல்லது மேம்படுத்தப்படவோ அனுமதிக்க கூடாது எனவும் கூறியுள்ளன.

News May 19, 2024

மழையால் போட்டி ரத்தானால் என்ன ஆகும்?

image

KKR-RR இடையேயான கடைசி லீக் போட்டி மழையால் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மழை நிற்கும் பட்சத்தில் ஓவர்கள் குறைக்கப்பட்டு போட்டி நடத்தப்படும். மழை நிற்கவில்லை என்றால், போட்டி ரத்து செய்யப்பட்டு இரு அணிகளுக்கும் தலா 1 புள்ளி வழங்கப்படும். அப்படியானால், SRH, RR அணிகள் 17 புள்ளிகளுடன் சமனில் இருக்கும். ஆனால், நெட் ரன் ரேட் அடிப்படையில், SRH 2ஆவது இடத்தையும், RR 3ஆவது இடத்தையும் பிடிக்கும்.

News May 19, 2024

முத்தக் காட்சியில் நடிக்கிறார் கீர்த்தி சுரேஷ்

image

தமிழ் நடிகைகள் பலரும் இந்தி திரைப்படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்த வரிசையில், கீர்த்தி சுரேஷும் தற்போது இணைந்துள்ளார். வருண் தவான் நடிக்கும் “பேபி ஜான்” படத்தில் அவருக்கு நடிக்க வாய்ப்பு வந்துள்ளது. அதில் முத்தக்காட்சி இருப்பதால், சம்மதம் கேட்கப்பட்டுள்ளது. அதற்கு கீர்த்தி சுரேஷ் சம்மதம் தெரிவித்தபிறகே ஒப்பந்தம் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

News May 19, 2024

RTE இலவச கல்வி சேர்க்கைக்கு நாளை கடைசி நாள்

image

கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் LKG முதல் 8ஆம் வகுப்பு வரையிலான சேர்க்கைக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாளாகும். இத்திட்டத்தின் கீழ் 25% இடங்கள் ஏழைக் குழந்தைகளுக்கு ஒதுக்கப்படும். தமிழகத்தில் 8,000க்கும் அதிகமான பள்ளிகளில் 1,10,000 இடங்கள் உள்ளன. இதில் சேர நாளைக்குள் (மே 20), rte.tnschools.gov.in என்ற தளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். மே 27இல் தகுதியானவர் விவரம் அறிவிக்கப்படும்.

News May 19, 2024

சித்தார்த்துடன் படம் பண்ணுவது நீண்ட நாள் ஆசை

image

‘சித்தார்த் 40’ படத்தின் படப்பிடிப்பு, வரும் ஜூன் மாதம் முதல் தொடங்க உள்ளதாக இயக்குநர் ஸ்ரீகணேஷ் தெரிவித்துள்ளார். சித்தார்த்துடன் இணைந்து படம் பண்ண வேண்டுமென்பது தனது நீண்ட நாள் ஆசை என்றும், ‘சித்தா’ படத்திற்கு வாழ்த்து தெரிவித்த போது, இருவரும் இணைந்து படம் பண்ணுவது குறித்து முடிவு செய்தோம் என்றும் கூறினார். மேலும், கதை மீது சித்தார்த்துக்கு நிறைய நம்பிக்கை இருப்பதாகவும் குறிப்பிட்டார்.

error: Content is protected !!