India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
‘எலக்சன்’ படத்தின் திரைக்கதையை தன் நாவலிலிருந்து எடுத்து தன்னை ஏமாற்றிவிட்டதாக எழுத்தாளர் கவிப்பித்தன் குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது பேஃஸ்புக் பதிவில், “எனது மடவளி நாவலுக்கும் இப்படத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என இயக்குநர் தமிழால் சொல்ல முடியுமா? ஒப்பந்தத்தை ரத்து செய்த பிறகும் அதை அப்படியே இயக்குவது தான் ஒரு திரைப்பட இயக்குநருக்கான அறமா” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
உ.பியில் பிரதமர் மோடி போட்டியிடும் கியோட்டோ (வாரணாசி) தொகுதியில் மட்டுமே பாஜக வெற்றி பெறுமென பாக்க கணித்துள்ளதாக ராகுல் காந்தி கூறியுள்ளார். லக்னோவில் பேசிய அவர், “வாரணாசியை ஜப்பானின் அழகிய நகரமான கியோட்டோவாக மாற்றப் போவதாக மோடி முன்பு கூறியிருந்தார். ஆனால், இந்தத் தொகுதிக்கு அவர் ஒரு வளர்ச்சித் திட்டத்தையும் கொண்டுவரவில்லை, மக்கள் இன்னும் வறுமையிலேயே உள்ளனர்” எனக் கூறினார்.
இன்று (மே 20) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email – way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 11 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!
இந்திய நாடாளுமன்றத்தின் பாதுகாப்பு கட்டமைப்பு சி.ஆர்.பி.எஃப் வசமிருந்து மத்திய சி.ஐ.எஸ்.எஃப் பொறுப்பில் இன்று (மே 20) ஒப்படைக்கப்படவுள்ளது. இவ்வமைப்பில் 3.300 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். கடந்த 10 நாள்களாக சி.ஐ.எஸ்.எஃப் பணியாளர்கள் வளாகத்தில் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். தேர்தலுக்கு பின்னர் புதிய அரசு பதவியேற்கும்போது, அங்கு முழு அளவில் பாதுகாப்பு வழங்கப்படும் எனக் கூறப்படுகிறது.
உலகின் பல்வேறு நாடுகளில் முன்னணி ஆன்லைன் பேமெண்ட் தளமான இருக்கும் ஜிபே ஜூன் 4ஆம் தேதிக்கு பின் செயல்படாது என கூகுள் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஆனால், கூகுளின் இந்த முடிவு இந்தியப் பயனர்களுக்கு எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தப் போவதில்லை. காரணம் கூகுள் வாலட் பயன்பாட்டில் இல்லாத இந்தியாவிலும் சிங்கப்பூரிலும் ஜிபே ஆப் வேலை செய்யும் என கூகுள் நிறுவனம் விளக்கமளித்துள்ளது.
நாட்டின் முதல் பிரதமர் நேருவில் தொடங்கி ராஜிவ் & மன்மோகன் சிங் வரை அனைவரும் வறுமையை ஒழிக்கத் தவறிவிட்டதாக மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார். புவனேஸ்வரில் பேசிய அவர், “ஏழை மக்களின் கஷ்டங்களைப் புரிந்துகொண்டு, அதற்கு தீர்வளிக்கும் முதல் பிரதமர் மோடி தான். 25 கோடி மக்கள் வறுமைக் கோட்டில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர். அனைத்து மக்களுக்கும் கோவிட்-19 தடுப்பூசிகளை இலவசமாக வழங்கினார்” என்றார்.
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் படத்தின் திரைக்கதை விவாதத்தில் ரஜினிகாந்த் பங்கேற்றுள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதற்காக த.செ.ஞானவேல் – எஸ்.ஆர்.கதிர் கூட்டணியில் உருவாகிவரும் ‘வேட்டையன்’ படத்தில் தான் சம்பந்தப்பட்ட காட்சிகளைச் சீக்கிரம் நடித்து, முடித்து சென்னை திரும்பியுள்ளார். மற்றவர்களுக்கான காட்சிகளையும் 10 நாள்களுக்குள்ளேயே முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இன்று (மே 20) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email – way2tamilusers@way2news.com -க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 11 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!
ராகுல் காந்தி மாவோயிஸ்ட் தொனியில் தொழிலதிபர்களுக்கு எதிராக பேசி வருவதாக பிரதமர் மோடி விமர்சித்துள்ளார். ஜார்க்கண்ட் பிரசாரக் கூட்டத்தில் பேசிய அவர், “ராகுலின் பேச்சுக்கள் காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் ஒவ்வொரு தொழிலதிபரையும் முதலீடு செய்யும் முன் 50 முறை சிந்திக்க வைக்கும். புதுமையான முறையில் பணம் பறிக்க ராகுல் சொல்வதை INDIA கூட்டணி கட்சிகள் ஆதரிக்கின்றனவா” எனக் கேள்வி எழுப்பினார்.
▶ஒரு நாளைக்கு 5 கிராம் உப்பு மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும்.
▶பதப்படுத்தப்பட்ட உணவுகளை அறவே தவிர்க்க வேண்டும்.
▶பேக்கரி உணவுகளை குறைவாக எடுத்துக் கொள்வது நல்லது.
▶காஃபினேட் உள்ள குளிர்பானங்களை குடிப்பதை தவிர்க்க வேண்டும். ▶வாரத்திற்கு 150 நிமிடங்களாவது கட்டாயம் உடற்பயிற்சி செய்ய வேண்டும்.
Sorry, no posts matched your criteria.