India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
இந்தோனேசியாவின் பாலி தீவில் ஸ்டார்லிங்க் இணையச் சேவையை ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் சிஇஓ எலான் மஸ்க் தொடங்கி வைத்துள்ளார். இதன் மூலம், 17 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தீவுகளின் தொலைதூர பகுதிகளில் வசித்துவரும் 27 கோடி மக்களுக்கு குறைந்த கட்டணத்தில் அதிவேக இணையச் சேவை கிடைக்கும். சுகாதாரம் & கல்வித் துறைகளில் இணைப்பை மேம்படுத்த அந்நாட்டுடன், மஸ்க் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார்.
க்ரீன் டீயுடன் ஒப்பிடும்போது கருஞ்சீரகம் ஓமம் டீ 100 மடங்கு அதிக ஆக்ஸிஜனேற்ற பண்புகளைக் கொண்டுள்ளது. இந்த கருஞ்சீரகம் டீயை எப்படி தயார் செய்வதென பார்க்கலாம். ஒரு பாத்திரத்தில் கருஞ்சீரகம், ஓமம், வெந்தயம் சேர்த்து நீரூற்றி 2 நிமிடங்கள் லேசான சூட்டில் கொதிக்க வைத்து ஆறிய பின், வடிகட்டி தேன் கலந்து குடியுங்கள். இந்த டீயை குடிப்பதால், உடலில் தேங்கியிருக்கும் கெட்ட கொழுப்பு & நச்சுகளை வெளியேற்றும்.
பிரதமர் மோடியின் பாசிச முகம் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த அவரது பயோ பிக்கில் நடிகர் சத்யராஜ் நடிக்க வேண்டும் என்று செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். தொடர்ந்து பேசிய அவர், “பல படங்களில் வில்லனாக நடித்திருந்தாலும், புரட்சிகர எண்ணம் கொண்ட சத்யராஜ் உண்மையில் ஒரு ஹீரோதான். மோடியின் கதையில் சத்யராஜ் நடிக்கலாம். அது அவருடைய தொழில், அதில் எந்த தவறுமில்லை” எனக் கூறினார்.
இலவச & கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் இன்றுடன் (மே20) நிறைவு பெறுகிறது. கல்வி வாய்ப்பு மறுக்கப்பட்ட, நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கு தமிழகம் முழுவதும் உள்ள தனியார் பள்ளிகளில் 25% சீட் ஒதுக்கப்படும் (85,000-க்கும் அதிகமான இடங்கள்). எனவே, விருப்பமுள்ள மாணவர்களின் பெற்றோர் <
SRH அணியின் இளம்வீரர்களான அபிஷேக் ஷர்மா, நிதிஷ் ரெட்டி இருவரும் மிகச் சிறப்பாக விளையாடுவதாக அந்த அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் பாராட்டியுள்ளார். PBKS அணிக்கு எதிரான போட்டியில் SRH வென்றது குறித்து பேசிய அவர், “சுதந்திரமாக பேட்டிங் செய்ய வேண்டும் என்பதற்காக ஷர்மாவுக்கு பந்துவீச வாய்ப்பு வழங்க விரும்பவில்லை. வேகப்பந்து & சுழற்பந்து வீச்சாளர்களை அவர் சிறப்பாக எதிர்கொள்கிறார்” எனக் கூறினார்.
➤1498 – போர்ச்சுகீஸ் மாலுமி வாஸ்கோட காமா இந்தியா வந்தடைந்தார். ➤1570 – உலகின் முதலாவது நவீன நிலப்படத் தொகுப்பை நிலப்படவரைவியலாளர் ஆபிரகாம் ஓர்ட்டேலியஸ் வரைந்தார். ➤1845 – தென்னிந்திய சமூக சீர்திருத்த தந்தை அயோத்திதாசர் பிறந்த நாள். ➤1985 – கியூபாவுக்கான வானொலி சேவையை வாய்ஸ் ஆஃப் அமெரிக்கா ஆரம்பித்தது. ➤2002 – கிழக்குத் தீமோரின் விடுதலையை போர்த்துக்கல் அங்கீகரித்தது.
ஓட்டல் புக்கிங் உள்ளிட்ட சேவைகளை வழங்கி வரும் ஓயோ நிறுவனம், ₹8,430 கோடி மதிப்புள்ள ஐ.பி.ஓ வெளியிட செபியிடம் தாக்கல் செய்திருந்த ஆவணங்களைத் திரும்பப் பெற முடிவெடுத்துள்ளது. ஓயோ நிறுவனம் தனது கடன்களை (பைபேக் நடவடிக்கை வாயிலாக ₹1,620 கோடியை அடைத்தது) குறைத்திருப்பதால் அதன் நிதிநிலையில் பல மாற்றங்கள் ஏற்பட்டிக்கின்றன. இந்த கடன்கள் அனைத்தும் டாலர் கடன் பத்திரங்கள் வாயிலாக பெறப்பட்டவை ஆகும்.
மக்களவைத் தேர்தல் பணிகளில் சுணக்கம் காட்டிய கட்சி நிர்வாகிகளின் பட்டியலை திமுக, அதிமுக போல நாம் தமிழர் கட்சியும் சத்தமின்றி தயார் செய்திருக்கிறது. அத்துடன், ரகசியக் குழுக்கள் மூலமாக களத்தில் இருந்து ரிப்போர்ட் ஒன்றையும் சீமான் எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. அதில், நாதகவின் அமைப்பு முறையிலேயே ஒருசில மாற்றங்கள் கட்டாயம் கொண்டு வரவேண்டியுள்ளதை அடிக்கோடிட்டு காட்டப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.
நடப்பு ஐபிஎல் தொடரின் Qualifier 1 போட்டியில், KKR – SRH அணிகள் இன்று ஆடுகளத்தில் மோதவுள்ளதை முன்னிட்டு சிறப்பு போஸ்டர் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. ஸ்ரேயாஸ் & பேட் கம்மின்ஸ் இருவரும் பயணத்திற்கு தயாராக நிற்பது போல அப் போஸ்டர் வடிவமைக்கப்பட்டு உள்ளது. Qualifier 1இல் வெல்லும் அணி, மே 26ஆம் தேதி நடைபெறும் இறுதிப்போட்டிக்கும், தோற்கும் அணி Qualifier 2 போட்டிக்கும் செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது.
▶குறள் பால்: அறத்துப்பால் ▶இயல்: பாயிரவியல்
▶அதிகாரம்: கடவுள் வாழ்த்து ▶ எண்: 8
▶குறள்:
அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்
பிறவாழி நீந்தல் அரிது.
▶பொருள்: அறக்கடலாகவே விளங்கும் சான்றோரின் அடியொற்றி நடப்பவரால் மட்டுமே துன்பங்களை கடக்க முடியும். மற்றவர்களால் இந்த மனிதப் பிறவியில் ஏற்படும் துன்பங்களை எளிதாகக் கடக்க முடியாது.
Sorry, no posts matched your criteria.