India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தனிப்பட்ட விவகாரங்கள் அனைத்தையும் ‘ஸ்டார் ஸ்போர்ட்ஸ்’ சேனல் ஒளிபரப்புவதாகவும், கிரிக்கெட் வீரர்களின் வாழ்வில் தனிமையே இல்லாமல் போய்விட்டதாகவும் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா குற்றம்சாட்டியிருந்தார். இதனைத் தொடர்ந்து, ”SHAME ON STAR SPORTS” என்று X தளத்தில் ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். ரோஹித் சொன்னது குறித்த உங்களது கருத்து என்ன?
சென்னையில் முதல்வர் ஸ்டாலின் வீட்டிற்கு மதுபோதையில் சென்ற இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர். போலீசாரின் விசாரணையில், சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் தண்ணீர் கேன் போடும் தொழில் செய்து வரும் சந்தோஷ் என்பதும், மதுபோதைக்கு தான் அடிமையாகி விட்டதால், என்னை போன்று வேறு யாரும் குடிக்கு அடிமையாகிவிடக் கூடாது என்பதால் டாஸ்மாக் கடைகள் மூட முதல்வரிடம் நேரில் வலியுறுத்த வந்தேன் எனவும் அவர் கூறியுள்ளார்.
தமிழ்நாட்டில் முற்பகல் 10 மணி வரை மழை பெய்யவிருக்கும் மாவட்டங்களின் பட்டியலை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.
தினசரி வாழ்க்கையில் எப்போதும் நேர்மறை எண்ணங்களோடு இருப்பது அவசியம். அதிலும் காலை நேரத்தை புத்துணர்ச்சியோடு தொடங்கினால், நாள் முழுவதும் சிறப்பானதாக அமையும். அந்த வகையில், அதிகாலையில் எழும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். சீக்கிரம் எழுவதால் பள்ளி, கல்லூரி, அலுவலகங்களுக்கு செல்ல அவசரமாகப் புறப்பட வேண்டிய தேவை ஏற்படாது. முடிந்த வரையில் எளிமையான உடற்பயிற்சிகள் செய்வதை வழக்கமாக்கி கொள்ளலாம்.
மக்களவைத் தேர்தலைத் தொடர்ந்து, உள்ளாட்சித் தேர்தல், 2026இல் சட்டப்பேரவை தேர்தல் வரவுள்ளதால், தற்போதே கட்சியை வலுப்படுத்த திமுக திட்டமிட்டுள்ளது. திமுகவை பொறுத்தவரை பெரும்பாலும் அமைச்சர்கள், MLAக்கள் மாவட்டச் செயலாளர்களாக இருக்கின்றனர். இதனால், உதயநிதியின் நம்பிக்கைக்குரிய இளைஞரணி மாவட்டச் செயலாளர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் மாவட்டங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க திட்டமிட்டப்பட்டுள்ளது.
இலவச & கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் இன்றுடன் (மே20) நிறைவு பெறுகிறது. கல்வி வாய்ப்பு மறுக்கப்பட்ட, நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கு தமிழகம் முழுவதும் உள்ள தனியார் பள்ளிகளில் 25% சீட் ஒதுக்கப்படும் (85,000-க்கும் அதிகமான இடங்கள்). எனவே, விருப்பமுள்ள மாணவர்களின் பெற்றோர் <
சென்னையில், வீட்டின் கூரை மீது தவறி விழுந்த குழந்தையின் தாயார் நேற்று தற்கொலை செய்துகொண்டார். குழந்தையை சரியாகக் கவனிக்கவில்லை என்ற விமர்சனம் தாங்காமல் மனமுடைந்து அவர் தூக்குப் போட்டுக் கொண்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. தெரியாமல் நடைபெற்ற தவறுக்கு இப்படி ஒருவரை குற்ற உணர்ச்சிக்கு ஆளாக்கி சாகத் தூண்டுவது சரியா? புறணி பேசுபவர்கள் சற்று சிந்திக்க வேண்டும்.
மக்களவைத் தேர்தலின் 5ஆம் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது. இதில், ரேபரேலி தொகுதியில் ராகுல் காந்தி களம் காண்கிறார். அமேதியில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி ராணி, லக்னோவில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், மும்பை வடக்கில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், ஜம்மு காஷ்மீரின் பாரமுல்லாவில் தேசிய மாநாட்டு கட்சித் தலைவர் உமர் அப்துல்லா, பிஹாரின் ஹாஜிபூரில் LJP சார்பில் சிராக் பாஸ்வான் களம் காண்கின்றனர்.
நடப்பு ஐபிஎல் தொடரில் கடைசி போட்டிக்கு முந்தைய போட்டியில் PBKS அணியை வீழ்த்தி புள்ளிப்பட்டியலில் 4ஆவது இடத்தில் இருந்த SRH 2ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. அதேபோல், கடைசி போட்டி மழையால் ரத்தானதால் KKR 20 புள்ளிகளுடன் முதலிடத்திலும், RR 17 புள்ளிகளுடன் 3ஆவது இடத்திலும், RCB 4ஆவது இடத்திலும் உள்ளன. இதனால், மே 22ஆம் தேதி நடைபெறவுள்ள Eliminator போட்டியில் KKR – SRH அணிகள் மோதுகின்றன.
சோம பிரதோஷம் அன்று மனமுருகி பக்தர்கள் வேண்டுவதை ஆதிசிவன் அருளுவான் என்பது
சைவக்குறவர்களின் வாக்கு. அத்தகைய மகிமை வாய்ந்த பிரதோஷ நாளான இன்று நஞ்சுண்ட இறைவனுக்கு விரதமிருந்து, கோயிலுக்குச் சென்று நந்தித் தேவருக்கு சிறப்பு வழிபாடு செய்து, அவரின் கொம்புகளின் வழியாகவே சிவனை தரிசித்து, தேவாரம் பாடி, நெய் விளக்கேற்றி வணங்கினால் புண்ணிய நதிகளில் நீராடிய பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.
Sorry, no posts matched your criteria.