news

News May 20, 2024

ஜனநாயக கடமையாற்றிய பிரபலங்கள்

image

மக்களவைத் தேர்தலுக்கான 5ஆம் கட்ட வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. லக்னோ தொகுதியில் உ.பி முன்னாள் முதல்வர் மாயாவதி, மும்பை வடக்கு தொகுதியில் மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் ஆகியோர் வாக்களித்தார். அதேபோல, ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ், தொழிலதிபர் அனில் அம்பானி, நடிகர் அக்‌ஷய் குமார், நடிகைகள் சான்யா மல்ஹோத்ரா, ஜான்வி கபூர் உள்ளிட்டோர் ஜனநாயக கடைமையாற்றினர்.

News May 20, 2024

கேஷிவ் மில்க் செய்வது எப்படி?

image

அரை லிட்டர் பாலில் ஏலக்காயை போட்டு நன்றாக காய்ச்சி, ஆறவைக்க வேண்டும். முந்திரி பருப்பை 2 மணி நேரம் சுத்தமான நீரில் ஊற வைத்து, நன்கு அரைக்க வேண்டும். ஆறவைத்த பாலுடன் முந்திரி, பிஸ்தா விழுது போட்டு, கலக்கி ஒரு பாத்திரத்தில் ஊற்றி அடுப்பில் மிதமான தீயில் கொதிக்க வைத்து கீழே இறக்க வேண்டும். தேன், குங்குமப்பூ, சிட்டிகை உப்பு சேர்த்து நன்றாகக் கலக்கி, குளிர வைத்தால் சுவையான கேஷிவ் மில்க் ரெடி.

News May 20, 2024

நிர்பயாவுக்கு நீதி கேட்டவர்கள் இன்று குற்றவாளிக்கு ஆதரவு

image

ஸ்வாதி மாலிவால் தாக்கப்பட்ட வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவாலின் உதவியாளர் விபவ் குமார் கைது செய்யப்பட்டதற்கு AAP கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து பேசிய ஸ்வாதி, அன்று பாதிக்கப்பட்ட நிர்பயாவுக்காக வீதிக்கு வந்த ஆம் ஆத்மியினர், இன்று சிசிடிவியை மறைத்த குற்றவாளியைக் காப்பாற்ற வீதிக்கு வந்துள்ளதாக விமர்சித்தார். மணீஷ் சிசோடியா இருந்திருந்தால் தனக்கு இவ்வளவு மோசமாக நடந்திருக்காது எனத் தெரிவித்தார்.

News May 20, 2024

ஈரான் அதிபர் ரைசி உயிரிழப்பு?

image

ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்ததாக அந்நாட்டு ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. ஆனால், அரசு தரப்பில் உறுதிப்படுத்தவில்லை. மூடுபனி காரணமாக ஈரான் அதிபர் சென்ற ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான நிலையில், அடர்ந்த வனம் மற்றும் மலைப் பகுதியில் சுமார் 17 மணி நேரம் கழித்து உடைந்த பாகங்கள் கண்டறியப்பட்டுள்ளது. இந்த விபத்தில் யாரும் உயிருடன் இருக்க வாய்ப்பில்லை என கூறப்படுகிறது.

News May 20, 2024

இன்று IPL இறுதிப் போட்டிக்கான டிக்கெட் விற்பனை

image

மே 26ஆம் தேதி, சென்னையில் நடைபெறவிருக்கும் ஐபிஎல் இறுதிப் போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று மாலை தொடங்கவுள்ளது. Rupay க்ரெடிட் கார்டு வைத்திருப்போருக்கு இன்று மாலை 6 மணிக்கும் மற்றவர்களுக்கு நாளை மாலை 6 மணிக்கும் டிக்கெட் விற்பனை தொடங்கவுள்ளது. பேடிஎம் இன்சைடர் இணையதளத்தில் ரசிகர்கள் டிக்கெட்டினை முன்பதிவு செய்யலாம். எந்த இரு அணிகள் இறுதிப் போட்டியில் விளையாடும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?

News May 20, 2024

எதேச்சதிகார பாஜக அரசை வீழ்த்த வேண்டும்: அகிலேஷ்

image

பாஜக அரசின் தவறான பொருளாதாரக் கொள்கைகளால் பணவீக்கம், வேலையில்லாத் திண்டாட்டம் உள்பட பல்வேறு பிரச்னைகளை மக்கள் அனுபவிப்பதாக சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பிரச்னைகளில் இருந்து விடுபட மக்களுக்கு தேர்தல் மூலம் வாய்ப்பு கிடைத்துள்ளதாகவும், அதைப் பயன்படுத்தி எதேச்சதிகார பாஜக அரசை வீழ்த்த வேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.

News May 20, 2024

விஜய் படத்தில் இணையும் அபர்ணா முரளி?

image

விஜய்யின் ‘G.O.A.T’ படத்தின் போஸ்ட் புரொடெக்‌ஷன் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்நிலையில், அவரது பிறந்த நாளான ஜூன் 22ஆம் தேதி அவரின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியாகும் எனக் கூறப்படுகிறது. இப்படத்தை ஹெச்.வினோத் இயக்கவுள்ளதாகவும், அபர்ணா முரளியை முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க படக்குழு பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் சினிமா வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

News May 20, 2024

ஃபரூக்காபாத் தொகுதியில் மறு வாக்குப்பதிவு

image

உத்தர பிரதேசத்தில் சிறுவன் ஒருவன் தாமரை சின்னத்திற்கு 8 முறை வாக்களித்த வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், சம்பவம் நடைபெற்ற ஃபரூக்காபாத் தொகுதியில் மறுவாக்குப்பதிவு நடத்த தேர்தல் அதிகாரி பரிந்துரைத்துள்ளார். தேர்தல் ஆணையம் இதுகுறித்து முடிவெடுக்கவுள்ளது. முன்னதாக, 8 வாக்குகள் பதிவு செய்த அச்சிறுவன், பாஜக பிரமுகர் அனில் சிங் தாக்கூரின் மகன் என்பது தெரிய வந்துள்ளது.

News May 20, 2024

முதல்வர் வீட்டிற்கு இளைஞர் சென்றது எப்படி?

image

முன் அனுமதி பெற்றவர்கள் மட்டுமே முதல்வர் ஸ்டாலின் வீட்டுக்கு செல்ல முடியும். இந்நிலையில் மதுவுக்கு அடிமையான சந்தோஷ், காவலர் ஒருவருக்கு சாப்பாடு வாங்கிக் கொடுப்பதாகக் கூறி அவரின் பைக்கை எடுத்துக் கொண்டு நேராக முதல்வர் வீட்டிற்கு சென்றுள்ளார். பைக்கில் போலீஸ் என ஸ்டிக்கர் ஒட்டப்பட்டதால், அங்கிருந்த இருந்த காவலர்கள் அவரைக் கண்டுகொள்ளவில்லை. பின்பு அவர் மீது மதுவாடை வந்ததால், போலீசார் கைது செய்தனர்.

News May 20, 2024

தயார் நிலையில் மீட்புப் படைகள்

image

அதி கனமழை அறிவிப்பால் தமிழகத்தின் தென் மாவட்டங்களில் பேரிடர் மீட்புப் படையினர் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர். வானிலை மையம் கன்னியாகுமரி, தென்காசி, திருநெல்வேலி, தேனி ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு இன்றும் நாளையும் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. 20 செ.மீ.,க்கு மேல் மழைப்பொழிவு இருக்கும் என்பதால், அசம்பாவிதம் ஏதும் நடைபெறாமல் இருக்க முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

error: Content is protected !!