India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கோவையில் மறைந்த அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. மலரவன் புகைப்படத்திற்கு இபிஎஸ் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். இதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் அதிமுக கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெறும் என நம்பிக்கை தெரிவித்தார். மேலும், வாக்கு எண்ணும் மையங்களில் சிசிடிவி கேமராக்கள் செயலிழந்து வருவதற்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம் சாட்டினார்.
ஐபிஎல் தொடருக்கான லீக் போட்டிகள் நேற்று நிறைவடைந்த நிலையில், கொல்கத்தா அணி புதிய சாதனை படைத்துள்ளது. KKR-RR இடையேயான நேற்றைய ஐபிஎல் போட்டி, மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது. இதன் மூலம், ஒரு ஐபிஎல் சீசனில் அதிக நெட் ரன் ரேட் (+1.428) கொண்ட முதல் அணி என்ற வரலாற்று சாதனையை கொல்கத்தா அணி படைத்துள்ளது. இதற்கு முன்பு, 2020இல் மும்பை இந்தியன்ஸ் அணியின் நெட் ரன் ரேட்டே (+1.107) அதிகமாக இருந்தது.
மக்களவைத் தேர்தலுக்கான 5ஆம் கட்ட வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. முற்பகல் 11 மணி நிலவரப்படி, தோராயமாக 23.66% வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி, பிஹார் – 21.11%, ஜம்மு காஷ்மீர் – 21.37%, ஜார்கண்ட் – 26.18%, லடாக் – 27.87%, மகாராஷ்டிரா – 15.93%, ஒடிஷா – 21.07%, மேற்கு வங்கம் – 32.70%, உ.பி. – 27.76% வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது.
மக்களவைத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு இந்திய பங்குச் சந்தை புதிய உச்சத்தை எட்டும் என பிரதமர் தெரிவித்துள்ளார். தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், 10 ஆண்டுகால பாஜக ஆட்சியில் பல்வேறு பொருளாதார சீர்திருத்தங்கள் செய்திருப்பதாகவும், தொழில்முனைவோருக்கு ஆதரவானக் கொள்கை முடிவுகளை எடுத்துள்ளதாகவும் கூறினார். தமது ஆட்சியில் பொதுத்துறை நிறுவனங்களின் லாபம் அதிகரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
தங்கத்தின் விலை வரலாறு காணாத உச்சத்தை எட்டியுள்ள நிலையில், நடுத்தர குடும்பத்தினருக்கு தங்க நகை எட்டாக் கனியாக மாறியுள்ளது. மொத்தமாக நகை வாங்க முடியாத சூழலில், அவர்கள் சிறுகச் சிறுக தங்கத்தைச் சேமிக்கலாம் என நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர். ஒரு கிராம் தொடங்கி தங்க நாணயங்களாக வாங்கி வைக்கலாம் எனவும், குறிப்பிட்ட கிராம் சேர்த்த பிறகு நகைகளாக மாற்றிக் கொள்ளலாம் எனவும் பரிந்துரைக்கின்றனர்.
பெங்களூரில் நேற்று இரவு முழுவதும் பண்ணை வீட்டில் பார்ட்டி நடந்தது. இந்த தகவலை அறிந்து சம்பவ இடத்தில் அதிகாலை 3 மணியளவில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் நடத்திய சோதனையில், கொக்கைன் உள்ளிட்ட போதைப்பொருள்கள் சிக்கியுள்ளன. இந்த பார்ட்டியில் நட்சத்திரங்கள், 25 இளம்பெண்கள் உள்பட 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டுள்ளனர். இந்த விவகாரம் பெரும் பேசுப்பொருளாக மாறியுள்ளது.
ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சி அளிப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், இந்தியா, ஈரான் இருதரப்பு உறவை வலுப்படுத்திய ரைசியின் பங்களிப்பு எப்போதும் நினைவுக்கூரப்படும் என்றும், துயரமான இத்தருணத்தில் அவரது குடும்பத்தார் மற்றும் ஈரான் மக்களுடன் இந்தியா துணை நிற்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
RCB-RR இடையேயான ஐபிஎல் எலிமினேட்டர் போட்டி, நாளை மறுநாள் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற உள்ளது. இதில் வெற்றி பெறும் அணி குவாலிபையர் 2 போட்டிக்கு முன்னேறும். தோல்வி அடையும் அணி தொடரில் இருந்து வெளியேறும். இதுவரை, மே மாதத்தில் நடைபெற்ற எந்தவொரு போட்டியிலும் RCB அணி தோற்றதும் இல்லை, ராஜஸ்தான் அணி வெற்றி பெற்றதும் இல்லை. இதனால், எந்த அணி வெற்றி பெறும் என ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.
தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் 12 செ.மீ., மழை பெய்திருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மதுரை தல்லாக்குளத்தில் 11 செ.மீ., திருச்சி மாவட்டம் புல்லம்பாடியில் 10 செ.மீ., புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் & அரியலூர் மாவட்டம் சுத்தமல்லி அணை ஆகிய பகுதிகளில் 8 செ.மீ., மழை பதிவாகியுள்ளது.
இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் மற்றும் அவரது மனைவி அக்ஷதா மூர்த்தியின் சொத்து மதிப்பு அந்நாட்டு மன்னர் சார்லசை விட அதிகமாகும். 2024ஆம் ஆண்டுக்கான கணக்கீட்டின்படி, ரிஷி சுனக் குடும்பத்தின் சொத்து மதிப்பு 651 மில்லியன் பவுண்டு (₹6,800 கோடி). மன்னர் சார்லசின் சொத்து மதிப்பு 610 மில்லியன் பவுண்டு (₹6,435 கோடி). ரிஷி சுனக் குடும்பத்திடம் இன்ஃபோசிஸ் நிறுவனப் பங்குகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.
Sorry, no posts matched your criteria.