news

News May 20, 2024

அடுத்த 5 நாட்களுக்கு கனமழை

image

தமிழ்நாட்டில் மே 24ஆம் தேதி வரை கனமழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. குறிப்பாக, இன்று நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், புதுக்கோட்டை, தஞ்சை மாவட்டங்களில் மிக கனமழையும் குமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, ராமநாதபுரம், விருதுநகர், மதுரை, சிவகங்கை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் கனமழையும் பெய்யும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

News May 20, 2024

மே 22ஆம் தேதி காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகிறது

image

தென்மேற்கு வங்கக் கடலில் மே 22ஆம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகக் கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அது வடகிழக்காக நகர்ந்து மே 24ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெறக் கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மே 24ஆம் தேதி வரை தமிழகத்தில் கன அல்லது மிக கனமழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

News May 20, 2024

2 மாதங்கள் அவகாசம் கேட்கும் தோனி

image

ஓய்வு பெறுவது குறித்து முடிவெடுக்க, சிஎஸ்கே நிர்வாகத்திடம் தோனி 2 மாதங்கள் அவகாசம் கேட்டிருப்பதாக ’டைம்ஸ் ஆஃப் இந்தியா’ செய்தி வெளியிட்டுள்ளது. அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடருக்கு முன் முழு ஏலம் நடைபெறவுள்ளது. இதனால், தோனியை தக்க வைப்பது குறித்து சிஎஸ்கே நிர்வாகம் தோனியிடம் ஆலோசனை செய்துள்ளது. அப்போது, இரண்டு மாதங்களில் முடிவை தெரிவிப்பதாக தோனி கூறியிருக்கிறார். மீண்டும் விளையாடுவாரா தோனி?

News May 20, 2024

அரசியல் செயல்பாடுகளை தொடங்கிய விஜய்!

image

மக்களுக்கு சட்ட உதவிகளை வழங்க காவல்நிலையங்களை கணக்கிட்டு தலா 2 வழக்கறிஞர்களை நியமிக்க தமிழக வெற்றிக் கழகம் திட்டமிட்டுள்ளது. இக்கட்சியின் சார்பில் ஏற்கெனவே சட்ட ஆலோசனை மையம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், காவல்நிலையத்திற்கு செல்லும் பொதுமக்களுக்கு தவெக வழக்கறிஞர்கள் அணியினர் சட்ட உதவிகளை வழங்குவார்கள் எனத் தெரிகிறது. இந்த வாரத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

News May 20, 2024

நடிகை ஐஸ்வர்யா ராய்க்கு அறுவை சிகிச்சை

image

நடிகை ஐஸ்வர்யாராய் ராய், கையில் அறுவை சிகிச்சை செய்து கொள்ள உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. கடந்த வாரம் ஏற்பட்ட விபத்து ஒன்றில், அவரது மணிக்கட்டில் எலும்பு முறிவு ஏற்பட்டது. ஆனால், பிரான்சில் நடைபெற்ற ‘கேன்ஸ்’ திரைப்பட விழாவில் பங்கேற்க வேண்டும் என்பதால், கையில் கட்டுடன் கலந்து கொண்டார். விழாவை முடித்துவிட்டு நாடு திரும்பியதும், விரைவில் அறுவை சிகிச்சை செய்யவுள்ளதாகத் தெரிகிறது.

News May 20, 2024

அதிமுகவில் எந்த குழப்பமும் இல்லை: எஸ்.பி.வேலுமணி

image

அதிமுகவில் ஓபிஎஸ் மற்றும் சசிகலாவை இணைக்க வாய்ப்பு இல்லை என முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுகவில் குழப்பம் நிலவுவதைப் போன்ற பிம்பத்தை சிலர் உருவாக்க முயற்சிப்பதாகவும், ஆனால் இபிஎஸ் தலைமையில் அதிமுக வெற்றி பெறும் எனவும் தெரிவித்தார். மேலும், தங்களிடம் கலந்தாலோசித்தே இபிஎஸ் எந்த முடிவையும் எடுப்பதாகவும் அவர் கூறினார்.

News May 20, 2024

மீண்டும் கார் விலையை உயர்த்தியது மஹிந்திரா

image

மஹிந்திரா கார் நிறுவனம், தங்களது ஸ்கார்பியோ N மற்றும் தார் மாடல்களின் விலை மீண்டும் ₹25,000 மற்றும் ₹10,000 ஆக உயர்த்தியுள்ளது. கடந்த ஜனவரி மாதம் ஸ்கார்பியோ மாடல்களின் விலை ₹40,000 வரையும், தார் மாடல்களின் விலை ₹35,000 வரை உயர்த்தப்பட்டுள்ள நிலையில், தற்போது மீண்டும் விலையை உயர்த்தியுள்ளது. கூடுதலாக, பொலேரோ N4, N8 மாடல்களின் விலையை ₹5,000 மற்றும் ₹14,000 ஆக உயர்த்தியிருக்கிறது.

News May 20, 2024

ஜனநாயக கடமையாற்றிய பிரபலங்கள் (2)

image

நாடாளுமன்றத் தேர்தலுக்கான 5ஆம் கட்ட வாக்குப்பதிவு, விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில், அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் என பலரும் ஆர்வத்துடன் தங்களது வாக்கை செலுத்தி வருகின்றனர். அந்த வகையில், நடிகர்கள் மாதவன், சுனில் ஷெட்டி, ஹேம மாலினி, கிரிக்கெட் வீரர்கள் சூர்யகுமார் யாதவ், ரஹானே உள்ளிட்ட பலரும் தங்கள் ஜனநாயக கடமையை ஆற்றினர். 11 மணி நிலவரப்படி, 23.66% வாக்குகள் பதிவாகி உள்ளன.

News May 20, 2024

‘இந்தியன் 2’ OTT உரிமத்தை கைப்பற்றியது நெட்ப்ளிக்ஸ்

image

கமல் நடித்துள்ள ‘இந்தியன் 2’ படத்தின் OTT உரிமையை, நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. ஷங்கர் இயக்கியுள்ள இப்படம், வரும் ஜூலை 12ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ளதாக படக்குழு நேற்று அறிவித்தது. படத்திற்கான புரமோஷன் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதோடு, படத்தின் முதல் பாடல் மே 22ஆம் தேதி வெளியாகவுள்ளது. நீண்ட இடைவெளிக்கு பிறகு 2ஆம் பாகம் வெளியாகவுள்ளதால், எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

News May 20, 2024

வெளிநாடு, மாநிலங்களில் வசிக்கும் தமிழர்களுக்கு

image

வேலை, கல்வி, வணிகம் காரணங்களுக்காக வெளிநாடு, வெளிமாநிலங்களில் வசிக்கும் தமிழர்களின் நலன் காக்க அரசு பல்வேறு நலத் திட்டங்களை செயல்படுத்தவுள்ளது. இதன்படி, வெளிமாநில, வெளிநாடுகளில் இறக்கும் அயலகத் தமிழர்களின் குடும்பத்திலுள்ள மகன்/மகளுக்கு கல்வி உதவித்தொகை 10-12 வகுப்புக்கு ₹3000, தொழிற்பயிற்சி கல்விக்கு ₹4000, பொறியியல்உள்ளிட்ட பட்டயப் படிப்புக்கு ₹5000, திருமண உதவித்தொகை ₹20,000 வழங்கப்படவுள்ளது.

error: Content is protected !!