India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஐபிஎல் ப்ளே-ஆஃப் போட்டிகள், நாளை முதல் தொடங்க உள்ளது. 3 லீக் போட்டிகள் மழையால் ரத்து செய்யப்பட்ட நிலையில், ப்ளே-ஆஃப் போட்டிகளில் மழை பெய்தால் என்ன ஆகும் என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். முடிந்த வரை கூடுதல் நேரம் கொடுக்கப்பட்டு போட்டிகளை அன்றைய தினமே முடிக்க முயற்சிக்கப்படும். இல்லையென்றால், ரிசர்வ் டே வழங்கப்படும். இந்த சீசனில் இருந்து அனைத்து ப்ளே-ஆஃப் போட்டிகளுக்கும் ரிசர்வ் டே உள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே பட்டாசு குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அத்திப்பள்ளம் பகுதியில் வேல்முருகன் என்பவருக்கு சொந்தமான அந்த குடோனில் இன்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில், கார்த்திக் (27) என்ற இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த மற்றொரு தொழிலாளி உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
KKR-SRH இடையேயான ஐபிஎல் Qualifier 1 போட்டி, நாளை இரவு 7.30 மணிக்கு அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற உள்ளது. இப்போட்டியில் வெற்றி பெறும் அணி இறுதிப் போட்டிக்கும், தோல்வி அடையும் அணி Qualifier 2 போட்டிக்கும் செல்லும். தோல்வி அடையும் அணி, எலிமினேட்டர் சுற்றில் வெற்றி பெறும் அணியுடன் வரும் 26ஆம் தேதி மோதும். பலம் வாய்ந்த இரு அணிகள் மோதவுள்ளதால், விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.
சத்தீஸ்கரில் லோடு வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 17 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த 25-30 பேர் கொண்ட குழுவினர், கவர்தா அருகே லோடு வாகனத்தில் வந்துக்கொண்டிருந்தபோது, 20 அடி ஆழமுள்ள பள்ளத்தில் வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளான. இதில் 17 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், படுகாயமடைந்த மேலும் பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் 30 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழை பெய்யக் கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் தொடங்கிய பிறகு, பல்வேறு மாவட்டங்களில் கோடை மழை பெய்து வருகிறது. இந்நிலையில், சேலம், கோவை உள்பட 30 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக் கூடும் எனக் கூறியுள்ள வானிலை ஆய்வு மையம், சில இடங்களில் தண்ணீர் தேங்கி போக்குவரத்து பாதிக்கும் என எச்சரித்துள்ளது.
நடிகர் கமல்ஹாசனின் 4 படங்கள் அடுத்தடுத்து வெளியாகவுள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ‘கல்கி 2898 AD’ படம் வரும் ஜூன் 27ஆம் தேதியும், ஷங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘இந்தியன் 2’ படம் ஜூலை 12ஆம் தேதியும் வெளியாகவுள்ளது. இதனைத் தொடர்ந்து, மணிரத்னம் இயக்கி வரும் ‘தக் லைஃப்’ படம் இந்தாண்டு இறுதியிலும், ‘இந்தியன் 3’ படம் 2025 ஜனவரி மாதத்திலும் வெளியிட படக்குழுக்கள் திட்டமிட்டுள்ளது.
சிலந்தி ஆற்றின் குறுக்கே கேரள அரசு அணை கட்டுவதை வேடிக்கை பார்க்கும் திமுக அரசு, தமிழக விவசாயிகள் குறித்து எந்த கவலையும் இல்லை என அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார். ஆட்சிக்கு வந்தவுடன் 1,000 தடுப்பணைகள் கட்டுவோம் என வாக்குறுதி கொடுத்த திமுக, கடந்த 3 ஆண்டு கால ஆட்சியில், ஒரு செங்கல்லை கூட எடுத்து வைக்கவில்லை. மேலும், கேரள அரசு அணை கட்டுவதை திமுக அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
மக்களவைத் தேர்தலுக்கான 5ஆம் கட்ட வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பிற்பகல் 3 மணி நிலவரப்படி, 47.53% வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. பிஹார் – 45.33%, ஜம்மு காஷ்மீர் – 44.90%, ஜார்கண்ட் – 53.90%, லடாக் – 61.26%, மகாராஷ்டிரா – 38.77%, ஒடிஷா – 48.95%, மேற்கு வங்கம் – 62.72%, உ.பி. – 47.55% வாக்குகள் பதிவாகியுள்ளன.
ஆழ்கடலுக்கு சென்ற மீனவர்கள் வரும் 23ஆம் தேதிக்குள் கரை திரும்பும்படி வானிலை மையம் உத்தரவிட்டுள்ளது. தென்மேற்கு வங்கக்கடலில் 22ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக இருப்பதால், இன்று முதல் 24ஆம் தேதி வரை குமரிக்கடல், மன்னார் வளைகுடா, தமிழக கடலோரப் பகுதி, தென்மேற்கு-தென்கிழக்கு வங்கக்கடலில் 65 கி.மீ. வேகத்தில் சூறாவளி வீசும், ஆதலால் அங்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தியுள்ளது.
இந்திய வங்கித் துறையின் நிகர லாபம் ₹3 லட்சம் கோடியைத் தாண்டியுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக X தளத்தில் பதிவிட்டுள்ள அவர், ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் கொள்கையால் நஷ்டத்தில் இருந்த வங்கித் துறை, தற்போது முன்னேற்றம் கண்டுள்ளதாகக் கூறியுள்ளார். இதன் மூலம், ஏழைகள் மற்றும் விவசாயிகளுக்கு வங்கிக் கடன் கிடைப்பதை மேம்படுத்த உதவும் எனவும் பிரதமர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.