India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மக்களவைத் தேர்தலுக்கான 5ஆம் கட்ட வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்றது. இதில், பல்வேறு அரசியல் தலைவர்களும், திரைப் பிரபலங்களும் ஆர்வமுடன் தங்களது வாக்குகளை செலுத்தினர். அந்தவகையில், மும்பையில் உள்ள வாக்குச்சாவடியில் நடிகைகள் ஐஸ்வர்யா ராய், தமன்னா, சுகானா கான், நடிகர்கள் அமிதாப்பச்சன், ஷாருக்கான், ரன்பீர் கபூர் ஆகியோர் தங்களது ஜனநாயகக் கடமையை ஆற்றினர்.
மக்களவைத் தேர்தலுக்கான 5ஆம் கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்தது. மாலை 5 மணி நிலவரப்படி, 56.68% வாக்குகள் பதிவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், அதிகபட்சமாக மேற்கு வங்கத்தில் 73.00% வாக்குகளும், குறைந்தபட்சமாக மகாராஷ்டிராவில் 48.66% வாக்குகளும் பதிவாகியுள்ளன. பிஹார் – 52.35%, ஜம்மு காஷ்மீர் – 54.21%, ஜார்கண்ட் – 61.90%, லடாக் – 67.15%, ஒடிஷா – 60.55%, உ.பி. – 55.80% வாக்குகள் பதிவாகியுள்ளன.
இந்தாண்டு வெளியான பெரும்பாலன மலையாளப் படங்களுக்கு, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளன. மஞ்சுமெல் பாய்ஸ்- ரூ.241 கோடியும், ஆடுஜீவிதம், பிரேமலு, ஆவேஷம் ஆகிய 3 படங்கள் தலா ரூ.100 கோடிக்கும் மேலும் வசூலித்துள்ளன. கடந்த ஜனவரி மாதம் முதல் தற்போது வரை (139 நாள்கள்), உலகம் முழுவதும் மலையாளப் திரைப்படங்கள் மொத்தமாக ரூ.1,000 கோடி வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உங்களுக்கு பிடித்தப் படம் எது?
சவுக்கு சங்கரை 2 நாள்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்து மதுரை மாவட்ட போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இவ்வழக்கு விசாரணைக்காக கோவையில் இருந்து பெண் காவல் துறையினரின் பாதுகாப்புடன் மதுரைக்கு அவர் அழைத்து செல்லப்பட்டார். இதில், 7 நாள்கள் அவரை காவலில் எடுத்து விசாரிக்க கோரிக்கை வைக்கப்பட்ட நிலையில், 2 நாள்கள் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவிட்டது.
மக்களவைத் தேர்தலுக்கான 5ஆம் கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்தது. 5 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்களில் மொத்தம் 49 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கிய நிலையில், அரசியல் தலைவர்கள், முக்கியப் பிரமுகர்கள், மக்கள் என பல்வேறு தரப்பினர் ஆர்வத்துடன் சென்று வாக்களித்தனர். இதனால் மாலை 5 மணி வரை 56% வாக்குகள் பதிவாகியிருந்தது. 6ஆம் கட்ட வாக்குப் பதிவு மே 25இல் நடைபெறவுள்ளது.
ஈரான் அதிபர் இப்ராஹிம் ரெய்சி ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்ததை அடுத்து, நாடு முழுவதும் நாளை ஒருநாள் துக்கம் அனுசரிக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பான சுற்றறிக்கையில், நாளை ஒருநாள் மட்டும் தேசியக் கொடியை அரைக் கம்பத்தில் பறக்கவிட அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், அரசு சார்பில் நாளை நடத்தப்பட இருந்த அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புயல் என்ற வார்த்தையானது, கிரேக்க வார்த்தையான சைக்ளோஸ் என்பதிலிருந்து உருவானது ஆகும். 1800களில் புயலுக்கு கத்தோலிக்க மதத் தலைவர்களின் பெயர்கள் வைக்கும் பழக்கம் இருந்தது. 1953க்கு பிறகு புயலுக்கு பெண்களின் பெயர்கள் வைக்கப்பட்டன. பிறகு 1979இல் ஆண்களின் பெயர்களும் சேர்க்கப்பட்டன. மணிக்கு 62 கி.மீ.க்கும் மேல் வேகத்தில் புயல் வீசினால், அதற்கு சிறப்பு பெயர் வைக்கும் நடைமுறை தற்போது உள்ளது.
தமிழகத்தில் அதி கனமழைக்கான ரெட் அலெர்ட் வாபஸ் பெறப்பட்டது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்றும், நாளையும் சில மாவட்டங்களில் அதி கனமழை பெய்யக் கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருந்த சூழலில், காற்றின் திசை மாறுபாடு காரணமாக தற்போது வாபஸ் பெறப்பட்டுள்ளது. அதே வேளையில் நாளை வரை ஒரு சில மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
தன் மீதான தாக்குதல் சம்பவத்திற்கு பிறகு, ஆம் ஆத்மி எம்.பி ஸ்வாதி மாலிவால் பாஜகவில் இணையவுள்ளதாக சில பேச்சுக்கள் அடிபட்டன. இது குறித்த கேள்விக்கு பதிலளித்த பாஜக தேசியத் தலைவர் நட்டா, மாலிவாலை இதுவரை தான் சந்தித்தது கிடையாது எனவும், அவர் மனதில் என்ன இருக்கிறது என தனக்குத் தெரியாது என்றும் கூறினார். மேலும், இதுபோன்ற பேச்சுக்கள் பிரச்னையை மடைமாற்றும் வேலை என அவர் குற்றம் சாட்டினார்.
சட்டக்கல்லூரி மாணவி ஜிஷா கொலை வழக்கில் குற்றவாளிக்கு மரண தண்டனையை உறுதி செய்து கேரள ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2016இல் அம்மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இதில் குற்றவாளி எனக் கண்டறியப்பட்ட, அசாமைச் சேர்ந்த புலம்பெயர் தொழிலாளி அமீருல் இஸ்லாமிற்கு கீழமை நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது. இதனை எதிர்த்த மேல்முறையீட்டு மனுவை நிராகரித்த ஐகோர்ட், தண்டனையை உறுதி செய்தது.
Sorry, no posts matched your criteria.