news

News May 21, 2024

17 வயது சிறுமியுடன் 70 வயது முதியவர் உல்லாசம்

image

சினிமா ஆசையில் சென்னை வந்த 17 வயது சிறுமியை விபசாரத்தில் ஈடுபடுத்திய நதியா (37) என்ற புரோக்கர் கைது செய்யப்பட்டுள்ளார். அச்சிறுமியிடம் சென்னையைச் சேர்ந்த 70 வயது முதியவர், பஞ்சாப்பில் இருந்து விமானத்தில் வரும் சிங் உள்ளிட்ட பலர் உல்லாசம் அனுபவித்து வந்துள்ளனர். அவர்கள் மீது போக்சோ வழக்கு பதியப்பட்டுள்ளது. மேலும், நதியாவுக்கு துணையாக இருந்த சகோதரி, அவரது கணவர், நேபாள பெண் கைது செய்யப்பட்டுள்ளனர்.

News May 21, 2024

ஆடை விமர்சனத்தை நினைவுக்கூர்ந்த மோடி

image

மோடி 250 ஜோடி ஆடைகளை வைத்திருப்பதாக குஜராத் முன்னாள் முதல்வர் அமர்சிங் சவுத்ரி முன்பு விமர்சித்திருந்தார். இதை தற்போது நினைவுக்கூர்ந்த பிரதமர், ₹250 கோடி கொள்ளையடித்தவர் வேண்டுமா அல்லது 250 ஆடை வைத்திருப்பவர் வேண்டுமா என மக்களிடம் கேட்டதாகவும், குஜராத் மக்கள் தன்னை தேர்ந்தெடுத்ததாகவும் கூறினார். மேலும், சவுத்ரியின் கணக்கு தவறு எனவும், தன்னிடம் 25 – 50 ஆடைகளே இருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

News May 21, 2024

ரயிலில் முதல் வகுப்பில் பயணித்த நாய்

image

9 ஆண்டுகள் ராணுவத்தில் பணியாற்றிய நாய் மேருவை கௌரவிக்கும் விதமாக ரயிலில் முதல் வகுப்பில் அதற்கு பெர்த் ஏற்பாடு செய்திருந்தது இந்திய ராணுவம். எல்லையில் பணியாற்றிவிட்டு ஓய்வு பெற்ற மேரு, மீரட்டில் உள்ள நாய்கள் காப்பகத்துக்கு ரயிலில் அனுப்பி வைக்கப்பட்டது. மேருவின் இத்தனை ஆண்டுகால அர்ப்பணிப்பை பாராட்டுவதாக இந்திய ராணுவம் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளது.

News May 21, 2024

காங்கிரஸ் 40 இடங்களில் கூட வெற்றிப் பெறாது: அமித்ஷா

image

ஜூன் 4ஆம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு ராகுல் காந்தி காங்கிரசை கண்டுபிடிக்கும் யாத்திரை செல்வார் என்று அமித்ஷா கூறியுள்ளார். ஹிசாரில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் பேசிய அவர், “காங்கிரஸ் கட்சி 40 இடங்களில் கூட வெற்றிப் பெறாது. இந்திய ஒற்றுமை யாத்திரை சென்ற ராகுல் ஜூன் 4ஆம் தேதிக்கு பிறகு காங்கிரஸ் கட்சியைத் தேடுவார். பைனாகுலர் கொண்டு பார்த்தாலும் காங்கிரசைக் கண்டுபிடிக்க முடியாது” என்றார்.

News May 21, 2024

200 பேருக்கு எய்ட்ஸ் நோயைப் பரப்பிய பாலியல் தொழிலாளி

image

அமெரிக்காவில் எய்ட்ஸ் நோய் இருப்பது தெரிந்தும் 211 பேருடன் உறவு கொண்டதாக பாலியல் தொழிலாளி வாக்குமூலம் அளித்துள்ளார். லிண்டா என்ற பெயர் கொண்ட அவருக்கு 2022 ஜனவரி மாதத்தில் எய்ட்ஸ் நோய் உறுதியானது. அதனைப் பொருட்படுத்தாமல், அடுத்த 5 மாதங்களுக்கு அவர் 211 பேருடன் பாலியல் உறவு கொண்டிருக்கிறார். இதனால், லிண்டாவுடன் தொடர்பில் இருந்தவர்கள் மருத்துவ பரிசோதனை செய்துக் கொள்ள போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.

News May 21, 2024

தனியார் பயிற்சி மையங்களுக்கான விதிகள்

image

ஓட்டுநர் பயிற்சி உரிமம் வழங்குவதற்கான தனியார் ஓட்டுநர் பயிற்சி மையத்திற்கு குறைந்தபட்சம் 1 ஏக்கர் நிலம் இருக்க வேண்டும். 4 சக்கர வாகனங்களுக்கு, ஓட்டுநர் மையத்தில் கூடுதலாக 2 ஏக்கர் நிலம் தேவை. தனியார் ஓட்டுநர் பயிற்சி மையத்தில் உரிய சோதனை வசதிகள் இருக்க வேண்டும். பயிற்சியாளர்கள் குறைந்தபட்சம் உயர்நிலைப் பள்ளி அல்லது டிப்ளமோ மற்றும் குறைந்தது 5 ஆண்டுகள் ஓட்டுநர் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

News May 21, 2024

ஜூன் 10ஆம் தேதி பள்ளிகள் திறப்பு?

image

ஜூன் 4ஆம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியானதும் ஜூன் 7ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஜூன் 7 வெள்ளிக்கிழமை என்பதால், சனி, ஞாயிறு விடுமுறை அளிக்க வேண்டும். இதனால், ஜூன் 10ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் அரசுப் பள்ளிகளைத் திறக்கலாம் என பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் முடிவு எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதே தேதியில் தான் தனியார் பள்ளிகளும் திறக்கப்படவுள்ளது.

News May 21, 2024

கஜினி படத்தில் சல்மான் கான்?

image

2005ஆம் ஆண்டு இந்தியில் வெளியாகி பெருவெற்றி பெற்ற திரைப்படம் ‘கஜினி’. இப்படத்தில் முதலில் சல்மான் கானைதான் நடிக்க வைக்க இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் முயற்சி செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், சல்மான் கான் கோவக்காரர் என்பதாலும் இந்தி தெரியாமல் முருகதாஸால் அவரை சமாளிக்க முடியாது என்பதாலும் அமீர் கானை நடிக்க வைத்ததாக சக நடிகர் பிரதீப் ராவத் நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார்.

News May 21, 2024

112 வயது எல்லாம் ஒரு தடையா?

image

நாடாளுமன்றத் தேர்தலின் ஐந்தாம் கட்ட வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது. இதில், 112 வயதான ’காஞ்சன்பென் பாதுஷா’ என்ற மூதாட்டி நேரில் சென்று வாக்களித்தார். அவரிடம் தபால் வாக்குகளைப் பெற தேர்தல் ஆணையம் முயற்சிகள் மேற்கொண்ட போதிலும், நேரில் வந்து வாக்களிப்பதாகக் கூறியிருந்தார். “நானே வெளியே வருகிறேன். இள வயதினர் வரக்கூடாதா?” என்று காஞ்சன்பென் அனைவரையும் வாக்களிக்க வலியுறுத்தினார்.

News May 21, 2024

பாஜகவினர் நுழைய தடை விதித்த விவசாயிகள்

image

ஹரியானாவில் 60-க்கும் மேற்பட்ட கிராமங்களில், ‘பாஜகவினருக்கு நுழைய தடை’ என்று அறிவிப்பு பலகைகள் தொங்கவிடப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சில மாதங்களுக்கு முன் விவசாயிகள் போராட்டம் நடத்த டெல்லி சென்றபோது, மத்திய அரசு எல்லையில் ராட்சத தடுப்புகளை அமைத்து அவர்கள் தடுத்தது. இதனால் கோபமடைந்த விவசாயிகள் பாஜக வேட்பாளர்களுக்கு நூதன முறையில் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

error: Content is protected !!