news

News May 21, 2024

OTT-இல் வெளியாகும் ‘ரத்னம்’

image

விஷால், பிரியா பவானி சங்கர் நடித்துள்ள ‘ரத்னம்’ திரைப்படம், வரும் மே 23ஆம் தேதி அமேசான் பிரைமில் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாகவுள்ளது. இது, சண்டக்கோழி, பூஜை படங்களைத் தொடர்ந்து, ஹரி-விஷால் கூட்டணியில் உருவான 3ஆவது படம் ஆகும். கடந்த ஏப்ரல் 26ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம், விமர்சனம் மற்றும் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. இந்தப் படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.

News May 21, 2024

பள்ளிச் சிறுமிகளை பாலியல் தொழிலுக்கு தள்ளிய பெண்

image

சென்னையில் பெண் ஒருவர் பள்ளிச் சிறுமிகளை பாலியல் தொழிலுக்கு தள்ளிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வளசரவாக்கத்தில் உள்ள ஒரு லாட்ஜில் நடந்த சோதனையில் சிறுமிகள் மீட்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து விசாரணையில், நதியா (37) என்ற பெண் தனது மகளுடன் படிக்கும் ஏழைச் சிறுமிகளை குறிவைத்து பகுதிநேர வேலை வாங்கி தருவதாக பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியது தெரியவந்தது. இதையடுத்து, அப்பெண் கைது செய்யப்பட்டார்.

News May 21, 2024

IPL: உங்களுக்குத் தெரியுமா?

image

நடப்பு ஐபிஎல் தொடருக்கான பிளே-ஆப் சுற்றுக்கு தேர்வாகியுள்ள 4 அணிகளிலும், தமிழக வீரர்கள் 4 பேர் இடம்பெற்றுள்ளனர். கொல்கத்தாவில் வருண் சக்கரவர்த்தி, பெங்களூருவில் தினேஷ் கார்த்திக், ஹைதராபாத்தில் நடராஜன், ராஜஸ்தானில் அஷ்வின் என 4 தமிழக வீரர்கள் உள்ளதால், எந்த அணி கோப்பையை வெல்லப் போகிறது என ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர். இன்று நடைபெறும் முதல் Qualifier போட்டியில், KKR-SRH அணிகள் மோதுகின்றன.

News May 21, 2024

Qualifier 1: ஹைதராபாத் அணி பேட்டிங்

image

KKR-SRH இடையேயான முதல் Qualifier போட்டி, இன்னும் சற்று நேரத்தில் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் தொடங்க உள்ளது. டாஸ் வென்ற ஹைதராபாத் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. இந்தப் போட்டியில் வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதிப் போட்டிக்கும், தோல்வி அடையும் அணி 2ஆவது Qualifier சுற்றுக்கும் செல்லும். பலம் வாய்ந்த இரு அணிகள் மோதவுள்ளதால், போட்டி நிச்சயம் விறுவிறுப்பாக இருக்கும்.

News May 21, 2024

திடீரென குடிப்பதை நிறுத்தினால் என்ன ஆகும்?

image

எவ்வளவு மது அருந்தினாலும் அது உறுப்புகளை பாதிப்பதோடு, உடல்நலக் கோளாறும் ஏற்படுத்துகிறது. சிலர் பல்வேறு காரணங்களுக்காக திடீரென குடிப்பழக்கத்தை நிறுத்துகிறார்கள். இதனால் மன உளைச்சல், கோபம், குழப்பம் போன்ற பிரச்சனைகள் ஏற்படுவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். இது Withdrawal Syndrome என்று அழைக்கப்படுகிறது. எனவே, குடும்ப உறுப்பினர்களின் உதவியுடன் படிப்படியாக குடியை நிறுத்த பரிந்துரைக்கப்படுகிறது.

News May 21, 2024

தமிழகத்திற்கு 2.5 டி.எம்.சி தண்ணீர் திறக்க உத்தரவு

image

தமிழ்நாட்டுக்கு 2.5 டி.எம்.சி தண்ணீர் திறக்க கர்நாடகத்துக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இன்று நடைபெற்ற அந்த கூட்டத்தில், தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். வினீத் குப்தா தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், பிப்ரவரி, மார்ச், ஏப்ரல், மே மாதம் கர்நாடகம் தர வேண்டிய 2.5 டி.எம்.சி தண்ணீரை தமிழகத்துக்கு வழங்க உத்தரவிடப்பட்டது.

News May 21, 2024

பயிற்சியாளர் பதவிக்கு ஹர்பஜன் சிங் ஆர்வம்

image

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவி மீது ஆர்வம் இருப்பதாக ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், கிரிக்கெட் தனக்கு நிறைய கொடுத்துள்ளது என்றும், வாய்ப்பு கிடைத்தால் பயிற்சியாளர் பணியை மகிழ்ச்சியுடன் செய்வேன் என்றும் கூறினார். மேலும், வீரர்களுக்கு டெக்னிக்கல் திறனை சொல்லிக் கொடுப்பதை விட, குழுவாக எப்படி செயல்பட வேண்டும் என்பது பற்றி பயிற்சி அளிக்க வேண்டும் எனக் குறிப்பிட்டார்.

News May 21, 2024

வேட்டையாடுபவர்களை பிடிக்க உதவும் AI கேமராக்கள்

image

வேட்டையாடுபவர்களை பிடிக்க, AI தொழில்நுட்பம் கொண்ட கேமராக்கள் உதவுவதாக வனத்துறை அதிகாரி சுசாந்தா நந்தா தெரிவித்துள்ளார். காடுகளில் வேட்டையாட வருபவர்களை, இந்த வகை கேமராக்கள் உடனடியாக புகைப்படம் எடுத்து அனுப்பும் என்றும், இதனால் வேட்டையாடுபவர்கள் உடனடியாக பிடிபடுவார்கள் என்றும் தெரிவித்துள்ளார். மேலும், இந்த கேமராக்கள் மூலம் ஒடிசாவில் சிக்கிய 2 பேரின் புகைப்படங்களையும் அவர் பகிர்ந்துள்ளார்.

News May 21, 2024

‘தக் லைஃப்’ படப்பிடிப்பு 50% நிறைவு

image

கமல்ஹாசன் நடித்துள்ள ‘தக் லைஃப்’ படத்தின் படப்பிடிப்பு 50% முடிவடைந்துவிட்டதாக இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளது. துல்கர் சல்மானும், ஜெயம் ரவியும் படத்தில் இருந்து விலகியதைத் தொடர்ந்து, நடிகர் சிம்பு இப்படத்தில் இணைந்தார். இதனால், மணிரத்னம் படத்தின் கதையை மாற்றியதாகவும், இது முழுக்க முழுக்க கமல்-சிம்புவின் படமாக இருக்கும் எனவும் கூறப்படுகிறது. இப்படத்தில், நடிகர் சிம்பு கமலுக்கு மகனாக நடிக்கிறார்.

News May 21, 2024

RCB ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட வாட்சன்

image

முன்னாள் ஆஸி., கிரிக்கெட் வீரர் ஷேன் வாட்சன், RCB ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார். நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், 2016ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டியில் RCB அணிக்கு தன்னுடைய சிறந்த ஆட்டத்தை கொடுத்திருக்க வேண்டும் என்றும், ஆனால் அந்த சீசனில் தான் மிகவும் மோசமாக விளையாடியதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், இதற்காக RCB ரசிகர்கள் அனைவரும் தன்னை மன்னிக்க வேண்டும் என உருக்கமாக பேசியுள்ளார்.

error: Content is protected !!