news

News May 21, 2024

CSK கட்சியை தொடங்குவது உறுதி

image

காமெடி நடிகர் கூல் சுரேஷ் சிஎஸ்கே என்ற பெயரில் கட்சியை தொடங்க உள்ளதாகவும், 2026 சட்டசபை தேர்தலில் போட்டியிட இருப்பதாகவும் அண்மையில் கூறியிருந்தார். இந்நிலையில், இன்று
தான் CSK கட்சியை தொடங்குவது உறுதி என்று அவர் கூறியுள்ளார். விஜய் விருப்பம் தெரிவித்தால் தமிழக வெற்றிக் கழகத்துடன் சிஎஸ்கே கட்சி பயணிக்கும் என்றார். மேலும், இது தவெகவிற்கு கூடுதல் பலமாக அமையும் என்றும் அவர் தெரிவித்தார்.

News May 21, 2024

34 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

image

ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், தி.மலை, கிருஷ்ணகிரி, தருமபுரி, கள்ளக்குறிச்சி, ஈரோடு, நீலகிரி, கோவை, திருப்பூர், சேலம், நாமக்கல், திருச்சி, கரூர், மதுரை, பெரம்பலூர், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், மயிலாடுதுறை, நெல்லை, தேனி, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர், திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, திண்டுக்கல், ராமநாதபுரம், குமரியில் இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளது.

News May 21, 2024

சிம்புவுக்கு ஜோடியாகும் கியாரா, ஜான்வி?

image

சிம்பு நடிக்கும் ‘STR48’ படத்தில், அவருக்கு ஜோடியாக பாலிவுட் நடிகைகள் கியாரா அத்வானி மற்றும் ஜான்வி கபூரும் நடிக்க உள்ளதாக இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளது. படத்திற்கான ப்ரீ புரடக்ஷன் பணிகள் தற்போது நிறைவடைந்துள்ள நிலையில், ஜூலை மாதம் படப்பிடிப்பைத் தொடங்க படக்குழு திட்டமிட்டுள்ளது. இதில், சிம்பு இரட்டை வேடத்தில் நடிக்க உள்ளதாகவும், பிரம்மாண்ட பொருட்செலவில் படமாக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.

News May 21, 2024

யார் இந்த வி.கே.பாண்டியன்? (3)

image

பிஜேடியுடன் கூட்டணி அமையாததற்கு வி.கே.பாண்டியன் தான் காரணம் என பாஜக முக்கிய தலைவர்களே கூறிய நிலையில், நேற்றைய பரப்புரையில் பிரதமரின் பேச்சில் அது அனலாக தெறித்தது. மோடி, வி.கே.பாண்டியனின் பெயரை கூறவில்லையே தவிர, பரப்புரை முழுவதும் அவரை வசை பாடினார். பிஜேடியின் அடுத்த முகமாக அவர் முன்னிலைப்படுத்தப்பட அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படும் நிலையில், தற்போது அவர் விமர்சனத்தை எதிர்கொண்டு வருகிறார்.

News May 21, 2024

யார் இந்த வி.கே.பாண்டியன்? (2)

image

யாரையும் எளிதில் நம்பாத நவீன் பட்நாயக், வி.கே.பாண்டியன் மீது மிகுந்த நம்பிக்கை வைத்தார். அதிகாரியான அவர் அரசியலுக்கு வர வேண்டும் என நினைத்தார். அவரின் விருப்பத்தை புரிந்துகொண்ட பாண்டியனும், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் விருப்ப ஓய்வு பெற்று, பிஜேடியில் இணைந்தார். கட்சியில் இணைந்த உடன் தேர்தலுக்கான வேலைகளில் தீவிரம் காட்டிய அவர், பாஜகவுடன் கூட்டணியை ஏற்படுத்த முயன்ற நிலையில், அது தோல்வி அடைந்தது.

News May 21, 2024

யார் இந்த வி.கே.பாண்டியன்? (1)

image

புரி ஜெகந்நாதர் கோயிலின் பொக்கிஷ அறை சாவி தமிழ்நாட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக, தமிழகத்தை தேர்ந்த முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி வி.கே.பாண்டியனை மறைமுகமாக பிரதமர் மோடி நேற்று விமர்சித்திருந்தார். 2000 ஆம் ஆண்டு பஞ்சாப் கேடர் அதிகாரியான வி.கே.பாண்டியன், ஒடிசா மாநில ஐஏஎஸ் அதிகாரி சுஜாதாவை மணமுடித்த பின்பு, அம்மாநில பணிக்கு மாறினார். 2011இல் முதல்வர் நவீன் பட்நாயக்கின் உதவியாளர் ஆனார்.

News May 21, 2024

கருவின் பாலினத்தை அறிவித்தால் கடும் நடவடிக்கை

image

கருவின் பாலினம் அறிவது, அறிவிக்கும் செயலில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு எச்சரித்துள்ளது. கருவின் பாலினத்தை ஸ்கேன் செய்யும் மையங்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளது. யூடியூபர் இர்ஃபானின் வீடியோவை பார்த்து பலர் அதை பகிர்ந்துள்ளதாகவும், இத்தகைய செயலால் தமிழகம் மட்டுமின்றி, இந்திய அளவில் பெண் குழந்தைகள் பிறப்பு விகிதம் குறையும் எனவும் கவலை தெரிவித்தது.

News May 21, 2024

4 விக்கெட்களை இழந்து திணறும் SRH

image

KKR-க்கு எதிரான முதல் Qualifier போட்டியில், SRH பேட்ஸ்மேன்கள் திணறி வருகின்றனர். தொடக்க ஆட்டக்காரர்கள் ஹெட்(0), அபிஷேக்(3), நிதீஷ்(9), ஷாபாஸ்(0) ஆகியோர் அடுத்தடுத்து அவுட் ஆகினர். ஹைதராபாத் அணி 5 ஓவர்களில் 39 ரன்கள் எடுத்து 4 விக்கெட்டுகளை இழந்துள்ளது. இது அந்த அணி அதிக ரன்கள் அடிக்கும் என்ற ரசிகர்களின் எதிர்பார்ப்பை ஏமாற்றமடைய செய்துள்ளது.

News May 21, 2024

எதிர்க்கட்சிகளால் ஜீரணிக்க முடியவில்லை

image

இந்திய நாட்டின் மக்களே தன்னுடைய வாரிசுகள் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சிகள் எப்போதெல்லாம் ஓரணியில் சேர்கிறார்களோ அப்போதெல்லாம் நாட்டில் வகுப்புவாதம், சாதிவாதம், வாரிசு அரசியல் முன்னிலைப்படுத்தபடுவதாக கூறிய அவர், மக்கள் பாஜகவை மீண்டும் தேர்ந்தெடுப்பதை எதிர்க்கட்சிகளால் ஜீரணிக்க முடியவில்லை என்றார். பிஹார் மக்களுக்கு எதிராக தமிழக தலைவர்கள் பேசி வருவதாகவும் குற்றம் சாட்டினார்.

News May 21, 2024

பம்ப் செட் விலை 7% வரை உயர்வு

image

மூலப்பொருள்களின் விலை உயர்வால் பம்ப் செட்கள் 7% வரை விலை உயர்த்தப்பட்டுள்ளதாக இந்திய பம்ப் செட் உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் அறிவித்துள்ளனர். இந்திய பம்ப் தொழில் 10%க்கும் அதிகமான வளர்ச்சியைக் கண்டுள்ளது. இந்நிலையில், செம்பு, இரும்பு, இதர பொருட்களின் விலை அதிகரிப்பால், பம்ப்செட் உற்பத்தி செலவு 10%க்கும் மேலாக அதிகரித்துள்ளது. இதையொட்டி, பம்ப் செட்கள் விலை 5-7% வரை உயர்த்தப்பட்டுள்ளது.

error: Content is protected !!