news

News May 22, 2024

தேர்தல் முடிவுக்கு பிறகு INDIA கூட்டணியின் பிரதமர் தேர்வு

image

சண்டிகரில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், தேர்தல் முடிவுகள் வெளியானதும், INDIA கூட்டணி கட்சிகள் கலந்து பேசி, பிரதமரைத் தேர்வு செய்யும் என்றார். தேர்தலுக்குப் பிறகு பிரதமரைத் தேர்வு செய்யும் முறையை காங்கிரஸ் 2004இல் இருந்து தொடர்வதாகவும், இதுபோல்தான் மன்மோகன் தேர்வு செய்யப்பட்டு, 10 ஆண்டுகள் சிறப்பாக ஆட்சி செய்தார் என்றும் கார்கே குறிப்பிட்டார்.

News May 22, 2024

வங்கதேசத்தை வீழ்த்தியது USA

image

டி20 உலகக் கோப்பை தொடருக்கு முன்னோட்டமாக அமெரிக்காவை அவர்கள் மண்ணில் எதிர்கொண்டு விளையாடுகிறது வங்கதேசம். அதன் முதல் போட்டியில் வங்கதேசத்தை வீழ்த்தி அசத்தியிருக்கிறது அமெரிக்கா. யாரும் எதிர்பாராத வகையில், புதிய அணியாக களம் இறங்கும் அமெரிக்கா, வங்கதேசத்தை வீழ்த்தி ஆச்சரியப்படுத்தியிருக்கிறது. நியூசிலாந்து முன்னாள் வீரர் கோரி ஆண்டர்சன் தற்போது அமெரிக்காவுக்காக விளையாடுகிறார்.

News May 22, 2024

தெருநாய் கடித்து சிறுமி மரணம்

image

கர்நாடக மாநிலம் ராய்ச்சூர் பகுதியைச் சேர்ந்த கீரலிங்கா, தனது மனைவி மற்றும் 4 வயது மகள் லாவன்யாவுடன் வசித்துவந்தார். 15 தினங்களுக்கு முன் லாவன்யா சாலையில் விளையாடிக் கொண்டிருந்தபோது அவரை தெருநாய்கள் துரத்தித் துரத்திக் கடித்திருக்கின்றன. இதனால், படுகாயமடைந்த சிறுமி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். ஆனால், அது பலனளிக்காமல் நேற்று உயிரிழந்தார்.

News May 22, 2024

திரைப்படம் ஆகிறது எம்எஸ் சுப்புலட்சுமி வாழ்க்கை வரலாறு

image

பிரபல கர்நாடக பின்னணி பாடகியும், நடிகையுமான எம்எஸ் சுப்புலட்சுமி, பாரத ரத்னா உள்ளிட்ட பல்வேறு விருது பெற்றுள்ளார். 2004ஆம் ஆண்டில் சுப்புலட்சுமி மறைந்த நிலையில், அவரது வாழ்க்கையை மையமாக வைத்து திரைப்படம் எடுக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த படத்தில், எம்எஸ் சுப்புலட்சுமி கதாபாத்திரத்தில் நடிக்க நடிகைகள் நயன்தாரா, த்ரிஷா ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடப்பதாகவும் கூறப்படுகிறது.

News May 22, 2024

2024இல் மட்டுமல்ல, 2029லிலும் மோடிதான் பிரதமராவார்

image

மக்களவைத் தேர்தலில் பாஜக வென்றால், 2024இல் மட்டுமல்ல 2029ஆம் ஆண்டிலும் மோடிதான் பிரதமர் என்று அக்கட்சியின் மூத்த தலைவரும், பாதுகாப்பு துறை அமைச்சருமான ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், இதுவரை நடந்த 4 கட்ட தேர்தலிலேயே பாஜகவுக்கு பெரும்பான்மை பலம் கிடைத்து விட்டதாகவும், ஆதலால் இந்த முறை 400க்கும் மேற்பட்ட தொகுதிகளில் பாஜக வெல்வது உறுதி என்றும் கூறினார்.

News May 22, 2024

Bi-Direction மின் மீட்டர் கட்டணம் நிர்ணயம்

image

வீட்டில் சோலார் மின்சாரம் உற்பத்தி செய்வோர், அதன் உபரியை மின் வாரியத்திற்கு வழங்கலாம். அதேபோல, இரவு நேரங்களில் சூரிய ஒளி இல்லாதபோது மின் வாரியத்திடம் இருந்து மின்சாரம் பெற்றுக் கொள்ளலாம். இதனை கணக்கிட Bi-Directional மின் மீட்டர் பொருத்தப்படுகிறது. அதற்கான கட்டணத்தை ₹2,764ஆக நிர்ணயித்துள்ளது மின் வாரியம். மும்முனை இணைப்புக்கு ₹5,011 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

News May 22, 2024

சிவகார்த்திகேயன் மீது வடிவுக்கரசி குற்றச்சாட்டு

image

சிவகார்த்திகேயன் படத்தில் நடிக்க பலமுறை அவரிடம் வாய்ப்பு கேட்டதாகவும், ஆனால் தரவில்லை என்று மூத்த நடிகை வடிவுக்கரசி குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார். கருடன் பட இசை வெளியீட்டு விழாவில் சிவகார்த்திகேயன், வடிவுக்கரசி உள்ளிட்டோர் கலந்து கொண்டிருந்தனர். அப்போது பேசிய வடிவுக்கரசி, சிவகார்த்திகேயன் மீது குற்றச்சாட்டு தெரிவித்தார். இதைக்கேட்டு ஓடிவந்து அடுத்த படத்தில் வாய்ப்பு தருவதாக கூறிச் சென்றார்.

News May 22, 2024

ஸ்டெர்லைட் படுகொலையின் 6ஆம் ஆண்டு நினைவுதினம்

image

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக அறவழியில் போராடியவர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு படுகொலையின் 6ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. 13 அப்பாவி உயிர்கள் பறிபோக காரணமாக இருந்த 17 போலீசார், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டவர்கள் அதே மிடுக்கோடு பதவி, அதிகாரத்தோடு பவனி வரும் நிலையில், ஆட்சி மாறினாலும் காட்சி மாறாமல் தூத்துக்குடி மக்களோ நீதி வேண்டி போராடி வருகிறார்கள்.

News May 22, 2024

இன்று உருவாகிறது காற்றழுத்த தாழ்வுப் பகுதி

image

தென்மேற்கு வங்கக் கடலில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால் இன்று காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகக் கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மே 24ஆம் தேதி இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக் கூடும். இதனால், திருநெல்வேலி, தென்காசி, தேனி ஆகிய 3 மாவட்டங்களில் அதி கனமழை பெய்யும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

News May 22, 2024

விசாகத்தில் முருகனை வழிபட்டால் வாழ்வே மாறும்

image

வைகாசி மாதம் விசாக நட்சத்திர நாளில்தான் முருகப்பெருமான் அவதாரம் செய்ததாக சாஸ்திரங்கள் கூறுகின்றன. வைகாசி விசாக நன்னாளான இன்று (மே 22) அதிகாலையில் எழுந்து நீராடி, நாள் முழுவதும் விரதமிருந்து மாலையில் ஆலயம் சென்று வேல்முருகனுக்கு பால் அபிஷேகம் செய்து, 6 நெய் விளக்கேற்றி, செவ்வரளி மலர்மாலை சாற்றி, திருப்புகழ் பாடி வணங்கினால் தீராத நோய்களும் கடன் பிரச்னைகளும் நீங்கும் என்பது நம்பிக்கை.

error: Content is protected !!