India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கோலி, ரோஹித்துடன் இணைந்து ஒப்பனராக டி20 உலகக் கோப்பையில் களமிறங்க வேண்டும் என ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார். கோலி போன்று ஆட்டத்தை மாற்ற கூடிய வீரர் ஓப்பனிங்கில் இறங்குவது அணிக்கு நல்லது என்ற அவர், இடது கை பேட்ஸ்மேன்கள் பற்றாக்குறையால் தேர்வுக்குழுவினர் ஜெய்ஸ்வாலை தேர்வு செய்திருக்கலாம் என்றார். கோலியை டி20 உலகக் கோப்பையில் இருந்து கழற்றி விட பலரும் காரணம் தேடியதாக அவர் குற்றம் சாட்டினார்.
விளையாட்டு மேம்பாட்டு ஆணைய விடுதி மாணவர் சேர்க்கைக்கான தேர்வுகள் மே 24ஆம் தேதி முதல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கனமழை எச்சரிக்கை காரணமாக மே 20 முதல் 25வரை மாநில அளவில் நடைபெற இருந்த இத்தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்ட நிலையில், தற்போது மே 24 முதல் 30ஆம் தேதி வரை நடைபெறும் எனக் கூறப்பட்டுள்ளது. tntalent.sdat.in, sdat.tn.gov.inஇல் தேர்வு குறித்த மேலும் விவரங்களை அறியலாம்.
சிலிண்டர் பயனாளர்களின் உண்மைத் தன்மையை அறிய E-KYC கட்டாயம் என மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சகம் சமீபத்தில் அறிவித்திருந்தது. இந்த நிலையில், மே 30-க்குள் E-KYC அப்டேட் செய்யாவிட்டால் சிலிண்டர் இணைப்பு ரத்து செய்யப்படும் என கேஸ் ஏஜென்சிகள் குறுஞ்செய்தி அனுப்பி வருகின்றன. இது குறித்து மத்திய அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடாத நிலையில், கேஸ் ஏஜென்சிகள் தனித்து செயல்படுவதாக புகார் எழுந்துள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள தொட்டபெட்டா சிகரத்தை, சுற்றுலாப் பயணிகள் பார்வையிட நாளை முதல் அனுமதி வழங்கப்பட உள்ளது. பராமரிப்புப் பணிகள் காரணமாக தொட்டபெட்டா சிகரத்திற்கு செல்ல கடந்த ஒரு வாரமாக வனத்துறை தடை விதித்திருந்தது. இந்த நிலையில், பணிகள் அனைத்தும் முடிந்துவிட்டதால் நாளை காலை முதல் சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
யூடியூபர் சவுக்கு சங்கரின் நீதிமன்ற காவல் ஜூன் 5 வரை நீட்டித்து மதுரை மாவட்ட போதைப் பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பெண் காவலரை இழிவாக பேசிய புகாரில் கைது செய்யப்பட்டு, கோவை மத்திய சிறையில் வைக்கப்பட்டுள்ள அவருக்கு 2 நாள்கள் போலீஸ் காவல் முடிந்த நிலையில், இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, நீதிபதியிடம் போலீசார் தன்னை துன்புறுத்தவில்லை என அவர் கூறியுள்ளார்.
மெட்டா நிறுவனம் தனது பயனாளர்களின் வசதிக்காக, வாட்ஸ்அப்பில் அவ்வப்போது புதுப்புது அப்டேட்டுகளை வழங்கி வருகிறது. அந்த வகையில் தற்போது, டெலிட்டான மெசேஜை மீண்டும் வரவழைக்கும் புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதாவது வாட்ஸ்அப்பில் Delete For Everyone-க்கு பதிலாக Delete For Me எனக் கொடுத்துவிட்டால் அந்த மெசேஜை UNDO செய்து மீண்டும் வரவழைக்கலாம். உங்க வாட்ஸ்அப்-ஐ அப்டேட் செய்துவிட்டீர்களா?
ராகுலை செல்லூர் ராஜு பாராட்டியது அவருடைய தனிப்பட்ட கருத்து என அதிமுக எம்எல்ஏ ராஜன் செல்லப்பா தெரிவித்துள்ளார். அரசியல் ரீதியாக அவர் ராகுலை பாராட்டியதாக கருதவில்லை என்ற அவர், ராகுலை பற்றி அவர் கூறிய எதையும் ஏற்கவில்லை என்றார். முன்னதாக நேற்று ராகுலை பாராட்டி வீடியோ ஒன்றை X பக்கத்தில் செல்லூர் ராஜூ பதிவிட்டு இருந்தார். அதிமுக தரப்பில் எழுந்த விமர்சனங்கள் காரணமாக அதை தற்போது நீக்கியுள்ளார்.
எழுத்தாளர் பாஸ்கர் சக்தி இயக்கியுள்ள ‘வடக்கன்’ திரைப்படம் மே24 ஆம் தேதி வெளியாக இருந்தது. இதனிடையே, படத்தின் தலைப்புக்கு ஆட்சேபம் தெரிவித்த சென்சார் போர்டு உறுப்பினர்கள், அதனை மாற்றினால் மட்டுமே தணிக்கை சான்றிதழ் தர முடியும் என நிபந்தனை விதித்தனர். இதனால், படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டது. இந்நிலையில், படத்தின் டைட்டில் ‘ரயில்’ என மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
5ஆம் கட்ட வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில், தேர்தல் பரப்புரை தொடர்பாக பாஜக தலைவர் நட்டாவுக்கும், காங்., தலைவர் கார்கேவுக்கும் தேர்தல் ஆணையம் கடிதம் எழுதியுள்ளது. அதில், பாஜக நட்சத்திர பேச்சாளர்கள் சாதி, மத ரீதியாகவும், பிரிவினை ஏற்படுத்தும் விதமாக பரப்புரை செய்யக் கூடாது என்றும், அரசியலமைப்பு சட்டம் ரத்து செய்யப்படும் என்ற வகையில் காங்கிரஸ் பரப்புரை செய்யக் கூடாது எனவும் அறிவுறுத்தியுள்ளது.
RCB – RR அணிகளுக்கு இடையேயான எலிமினேட்டர் சுற்று இன்று நடைபெற உள்ளது. இந்நிலையில், கோலிக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதன் காரணமாக போட்டி நடைபெற உள்ள அகமதாபாத் மைதானத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி, RCB-யின் பயிற்சி ஆட்டமும், செய்தியாளர் சந்திப்பும் ரத்து செய்யப்பட்டது. முன்னதாக நேற்று அகமதாபாத்தில் 4 பயங்கரவாதிகள் பிடிபட்டதை தொடர்ந்து, அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.
Sorry, no posts matched your criteria.