news

News May 22, 2024

நடிகர் ஷாருக்கான் மருத்துவமனையில் அனுமதி

image

பாலிவுட் நடிகரும், KKR அணி உரிமையாளருமான ஷாருக்கான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிகழ்வு ரசிகர்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. IPL குவாலிஃபயர் 1இல் நேற்று KKR-SRH அணிகள் மோதின. அகமதாபாத்தில் நடந்த போட்டியை ஷாருக்கான் நேரில் கண்டு ரசித்தார். அப்போது, வெப்பம் காரணமாக அவருக்கு ஹீட் ஸ்ட்ரோக் ஏற்பட்டுள்ளது. இதனால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சைக்குப் பிறகு டிஜ்சார்ஜ் ஆனார்.

News May 22, 2024

வெப்ப அலையால் ஆர்.சி.பி பயிற்சி ரத்து

image

ஆர்.சி.பி அணியின் பயிற்சி ஆட்டம் ரத்தானதற்கு குஜராத் கிரிக்கெட் சங்கம் விளக்கமளித்துள்ளது. 2ஆவது எலிமினேட்டர் போட்டிக்கு பெங்களூர் அணி தயாராகி வரும் நிலையில், கோலியின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால், இன்றைய பயிற்சி ஆட்டம் நிறுத்தப்பட்டதாக மே.வங்க நாளிதழில் செய்தி வெளியானது. இதனை மறுத்துள்ள நிர்வாகிகள், வீரர்கள் வெப்பத்தால் பாதிக்கக்கூடாது என்பதற்காக இந்த ஏற்பாடு செய்யப்பட்டதாக கூறினர்.

News May 22, 2024

வாகனங்களில் ஸ்டிக்கர்: உயர்நீதிமன்றம் உத்தரவு

image

வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்டியிருக்கும் மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்ட தமிழக அரசு விதித்த தடையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் இந்த இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மருத்துவ அவசரத்துக்காக செல்லும் மருத்துவர்களுக்கு ஸ்டிக்கர் ஒட்ட விலக்கு அளிக்கலாமே? என்ற நீதிபதிகள் வழக்கை ஜூன் 14ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

News May 22, 2024

பெங்களூரு அணி பேட்டிங்

image

ஐபிஎல் எலிமினேட்டர் போட்டியில் இன்று பெங்களூரு, ராஜஸ்தான் அணிகள் மோதுகின்றன. அகமதாபாத் மைதானத்தில் டாஸ் வென்ற RR அணி கேப்டன் சஞ்சு சாம்சன் பந்துவீச்சை தேர்வு செய்தார். இரு அணிகளும் பேட்டிங், பந்துவீச்சு, ஃபீல்டிங்கில் சம பலத்துடன் உள்ளன. இந்தப் போட்டியில் வெற்றி பெறும் அணி, நாளை மறுநாள் நடைபெற உள்ள குவாலிஃபயர்-2 போட்டியில் ஹைதராபாத் அணியை எதிர்கொள்ளும்.

News May 22, 2024

சொகுசு கார் விபத்து: 25 வயது வரை வாகனம் ஓட்ட தடை

image

மகாராஷ்டிராவில் மதுபோதையில் சொகுசு கார் ஓட்டி இருவரது உயிரிழப்புக்கு காரணமான சிறுவன், 25 வயது வரை வாகனம் ஓட்ட தடை விதிக்கப்பட்டுள்ளது. அதுவரை அவருக்கு ஓட்டுநர் உரிமம் வழங்கப்படாது என அம்மாநில போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை இவ்விபத்து நடந்த 15 மணி நேரத்தில் அச்சிறுவன் ஜாமின் பெற்றது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து, சிறுவனின் தந்தை கைது செய்யப்பட்டார்.

News May 22, 2024

வெள்ள அபாய எச்சரிக்கை

image

தமிழகத்தில் பெய்து வரும் கனமழையால், முக்கிய ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்த நிலையில், ஈரோடு பவானி ஆறு, நெல்லை தாமிரபரணி, குமரி கோதையாற்றின் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நீரோட்டம் அதிகமாக இருப்பதால், ஆறுகளில் இறங்கி குளிக்கவோ, செல்ஃபி எடுக்கவோ வேண்டாம் என பொதுமக்களுக்கு மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

News May 22, 2024

மாதந்தோறும் 300 புதிய பேருந்துகள்

image

திமுக ஆட்சியில் மாதந்தோறும் 300க்கும் மேற்பட்ட புதிய பேருந்துகள் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படுவதாக அமைச்சர் சிவசங்கர் கூறியுள்ளார். முந்தைய அரசு போக்குவரத்துத்துறைக்கு ஆண்டுக்கு ₹2,349 கோடி மட்டுமே ஒதுக்கியதாகவும், தற்போது ஆண்டுக்கு ₹7,375 கோடி ஒதுக்கீடு செய்யப்படுவதாகவும் கூறினார். மேலும், பேருந்துகளை பராமரிப்பதில் தனி கவனம் செலுத்தி, தடை இல்லா சேவை வழங்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

News May 22, 2024

மன்னிப்பு கடிதம் வழங்கிய இர்ஃபான்

image

கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை அறிவித்த விவகாரத்தில் யூடியூபர் இர்ஃபான் மன்னிப்பு கடிதம் வழங்கினார். சென்னை DMS வளாகத்தில் உள்ள மருத்துவ மற்றும் ஊரக நலப் பணிகள் இயக்குநரை நேரில் சந்தித்த அவர், தனது மன்னிப்பு கடிதத்தை வழங்கினார். இதைத் தொடர்ந்து அவரை எச்சரித்து அனுப்பிய மருத்துவத்துறை, அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது என தெரிவித்துள்ளது.

News May 22, 2024

முற்றுகை தேதியை கூறினால் 10 பேருக்கு உணவு: அண்ணாமலை

image

பாஜக அலுவலகத்தை முற்றுகையிடும் தேதியை கூறினால், போராட்டத்திற்கு வரும் 10 காங்கிரஸாருக்கு உணவு வழங்குவதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார். போராட்டத்தில் பங்கேற்க வரும் நபர்களுக்கு திமுக, காங்கிரஸ் செய்த துரோகங்கள் குறித்த புத்தகமும் வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளார். ஒடிஷாவில் தமிழ்நாடு பற்றி மோடி தெரிவித்த கருத்துக்கு எதிராக பாஜக அலுவலகத்தை முற்றுகையிட போவதாக செல்வப்பெருந்தகை கூறியிருந்தார்.

News May 22, 2024

அம்பாசிடர் காரில் வலம் வரும் புதுச்சேரி முதல்வர்

image

வாகனங்கள் மீது அலாதி பிரியம் கொண்ட புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி, ஆரம்ப காலத்தில் அரசியல் பணிகளுக்கு யமஹா RX 100 பைக்கில் தான் அதிகம் செல்வார். சமீப காலமாக காரை மட்டுமே அதிகமாக பயன்படுத்தி வந்த அவர், மக்களவைத் தேர்தலின் போது தனது புதுப்பிக்கப்பட்ட RX 100 பைக்கில் வந்து வாக்கு செலுத்தினார். இந்நிலையில், 1997ம் ஆண்டு தான் வாங்கிய அம்பாசிடர் காரை பழுது நீக்கி, மீண்டும் பயன்படுத்த தொடங்கியுள்ளார்.

error: Content is protected !!