India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
2024ஆம் ஆண்டு சுதந்திர தின விழாவில் வழங்கப்படும் அரசு விருதுகளுக்கு சிறந்த சமூக சேவகர், சிறந்த தொண்டு நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. சமூக சேவகருக்கு ₹50,000 மற்றும் சான்று, தொண்டு நிறுவனத்திற்கு ₹1 லட்சம் ரொக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கப்படுகிறது. இவ்விருதுக்கான விண்ணப்ப விவரங்கள் 21ஆம் தேதி முதல் https://awards.tn.gov.inilஇல் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
சண்டிகரில் நடந்த நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், இந்தியாவில் பணத்துக்குப் பஞ்சமில்லை, நாட்டுக்காக நேர்மையாக பணியாற்றும் தலைவர்களுக்கே பற்றாக்குறை நிலவுவதாக தெரிவித்தார். ₹600 கோடியுடன் சந்தைக்கு சென்று திரும்பியபோது ₹1,150 கோடி இருந்தது, அந்த அனுபவம் நாட்டில் பணத்துக்குப் பஞ்சமில்லை என்பதை கற்றுக் கொடுத்தது என்று அவர் கூறினார்.
மகா விஷ்ணுவின் கூர்ம அவதாரமான ஆமை சின்னத்தை வீட்டில் வைப்பதால் பல்வேறு நன்மைகள் கிடைப்பதாக வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது. அதனை பொருத்தமான இடத்தில் வைத்தால் நல் அதிர்ஷ்டத்தையும், நேர்மறை அதிர்வுகளையும் வழங்கும் என ஐதீகம் நிலவுகிறது. மர ஆமை, உலோக ஆமை என எதை வைத்தாலும் அதை ஒரு நீர் கிண்ணத்திலோ (அ) ஒரு சிறிய நீரூற்றுக்குள்ளோ வைத்து வணங்கும் வீட்டில் லட்சுமி கடாக்ஷம் பெருகும் என விஷ்ணுபுராணம் கூறுகிறது.
*பிரதமர் மோடி ஒய்வு பெறுமாறு அமித் ஷா மறைமுகமாக சொல்கிறார் – ப.சிதம்பரம்
*மக்களுக்கு அதிக அதிகாரம் அளிப்பதே காங்கிரசின் கொள்கை – பிரியங்கா காந்தி
*2023-24 நிதியாண்டில், தமிழ்நாடு ₹59,655 கோடி மதிப்பிலான ஜவுளி ரகங்களை ஏற்றுமதி செய்துள்ளது.
*உலக பாரா தடகள போட்டியில் இந்தியா 12 பதக்கங்களை வென்று புதிய சாதனை படைத்தது.
*மஞ்சுமெல் பாய்ஸ் பட நிறுவனத்துக்கு இளையராஜா நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
RR-க்கு எதிரான நேற்றைய ஐபிஎல் போட்டியில், 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் RCB அணி தோல்வி அடைந்தது. இதனால் ப்ளே-ஆஃப் சுற்றில் இருந்து RCB அணி வெளியேறியது. லீக் போட்டிகளில் தொடர் தோல்விகளை சந்தித்து வந்த RCB அணி, கடைசி 6 போட்டிகளில் வெற்றி பெற்று ப்ளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது. மிகப்பெரிய ரசிகர்களை பட்டாளத்தை கொண்ட RCB அணி, ஒருமுறை கூட ஐபிஎல் கோப்பையை வெல்லாதது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
✍இழிவான நீண்ட நெடிய வாழ்க்கையை விட, பெருமைக்குரிய குறுகிய வாழ்க்கையை வாழ விரும்புங்கள். ✍நீங்கள் வெல்லும் ஒரு போர் நீங்கள் செய்த எல்லாத் தவறுகளையும் இல்லாமல் செய்துவிடுகிறது. ✍ ஆபத்துக்களை எதிர்கொள்ளாமல், உயர்ந்த லட்சியங்களை ஒருபோதும் அடைய முடியாது.✍உண்மையான காதல் ஒருபோதும் மகிழ்ச்சியான முடிவைக் கொண்டிருக்காது. ✍முயற்சி செய்பவருக்கு சாத்தியமற்றது என்று எதுவுமில்லை.
இளைஞர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற யமஹா மோட்டார்ஸ் நிறுவனம் FZS எப்.ஐ. வெர்ஷன் 4.0 டி.எல்.எஸ். என்ற புதிய மாடல் மோட்டார் சைக்கிளை அறிமுகம் செய்துள்ளது. 149 சி.சி. திறன் பியூயல் இன்ஜெக்ஷன் என்ஜின், ஷாக் அப்சார்பர், டிஸ்க் பிரேக், புளூடூத் இணைப்பு & டிராக்ஷன் கண்ட்ரோல் வசதிகளை கொண்ட இதன் விலை ₹1,29,700. ஏற்கனவே நான்கு வண்ணங்களில் கிடைத்து வந்த இந்த மாடல் இனி 6 வண்ணங்களில் கிடைக்கும்.
உக்ரைன் மீது அணு ஆயுத தாக்குதல் ஒத்திகை மிக விரைவில் தொடங்கப்படும் என்று ரஷ்யா அறிவித்துள்ளது. ரஷ்யா அணு ஆயுத தாக்குதலை நடத்தினால், அது 1945ஆம் ஆண்டில் நடந்த ஹிரோஷிமா & நாகசாகி பேரழிவைவிட மிகவும் மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும் என்று போரியல் வல்லுநர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். ரஷ்யாவின் அணுகுண்டு தாக்குதல் தொடர்பான இந்த அறிவிப்பு சர்வதேச அளவில் அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது.
2023-24 நிதியாண்டில், தமிழ்நாடு ₹59,655 கோடி மதிப்பிலான ஜவுளி ரகங்களை உலக சந்தைக்கு ஏற்றுமதி செய்திருப்பது மத்திய அரசின் தரவுகளின் வாயிலாக தெரியவந்துள்ளது. ஆயத்த ஆடை, கைத்தறி, பருத்தி & செயற்கை நூலிழை, துணி ரகங்களை உள்ளடக்கிய நாட்டின் ஜவுளி ஏற்றுமதியில், தமிழகம் தொடர்ந்து முதலிடத்தைத் தக்கவைத்துள்ளது. குஜராத் ₹44,106 கோடி, மஹாராஷ்டிரா ₹33,122 கோடி மதிப்பிலான ஜவுளி ரகங்களை ஏற்றுமதி செய்துள்ளன.
▶மே – 23 ▶வைகாசி – 10
▶கிழமை: வியாழன் ▶திதி: பௌர்ணமி
▶நல்ல நேரம்: காலை 10:30 – 11:30 வரை
▶கெளரி நேரம்: காலை 12:00 – 01:00 வரை, மாலை 06:30 – 07:30 வரை
▶ராகு காலம்: நண்பகல் 01:30 – 03:00 வரை
▶எமகண்டம்: காலை 06:00 – 07:30 வரை
▶குளிகை: காலை 09:00 – 10:30 வரை
▶சூலம்: தெற்கு ▶பரிகாரம்: தைலம்
▶சந்திராஷ்டமம்: ரேவதி
Sorry, no posts matched your criteria.