news

News May 23, 2024

ரயிலில் எவ்வளவு லக்கேஜ் எடுத்து செல்லலாம்? (2/2)

image

ரயில் பயண தூரம், கூடுதல் எடையை தனித்தனியாக கணக்கிட்டு, கட்டணம் செலுத்தி, கையோடு அதிக லக்கேஜ் எடுத்து செல்லலாம். அதாவது 1-50 கி.மீ. வரை ஒரு கட்டணமும், அதன்பிறகு வேறு கட்டணமும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதை செலுத்தி, ஏசி பெட்டியில் 150 கிலோ லக்கேஜ், 2ஆம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டியில் 80 கிலோ லக்கேஜ், 2ஆம் வகுப்பு இருக்கை பெட்டியில் 70 கிலோ லக்கேஜ் எடுத்து செல்லலாம்.

News May 23, 2024

ரயிலில் எவ்வளவு லக்கேஜ் எடுத்து செல்லலாம்? (1/2)

image

ரயிலில் வெளியூர் செல்லும் பயணிகள் கட்டணமின்றியும், கட்டணம் செலுத்தியும் பேக், சூட்கேஸ் போன்ற லக்கேஜ் உடன் எடுத்து செல்ல சில விதிகள் உள்ளது. அதை தெரிந்து கொள்ளலாம். ஏசி பெட்டியில் பயணிப்போர், கட்டணமின்றி 70 கிலோ வரை லக்கேஜ் எடுத்து செல்லலாம். 2ஆம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டியில் 40 கிலோ வரையிலும், 2ஆம் வகுப்பு இருக்கை வசதி பெட்டியில் 35 கிலோ வரையிலும் லக்கேஜ் எடுத்து செல்லலாம்.

News May 23, 2024

இலவச சேர்க்கைக்கு “NO” சிபாரிசு

image

இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் அனைத்து தனியார் பள்ளிகளிலும் ஏழை மாணவர்களுக்கு 25% இடங்கள் ஒதுக்கப்படுகின்றன. இந்நிலையில் ஒவ்வொரு பள்ளியிலும் நிர்ணயிக்கப்பட்ட இடங்களை விட கூடுதல் விண்ணப்பங்கள் வந்தால், அதனைக் குலுக்கல் முறையில் மட்டுமே ஒதுக்கீடு செய்ய வேண்டும். மாறாக சிபாரிசு அடிப்படையில் ஒதுக்கக்கூடாது. மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

News May 23, 2024

ஐபிஎல்லில் அதிகப் போட்டிகளில் வென்ற முதல் 3 அணி

image

2008ஆம் ஆண்டு முதல் 2024ஆம் ஆண்டு வரை நடைபெற்ற ஐபிஎல் போட்டிகளில் மும்பை அணி 261 போட்டிகளில் விளையாடியுள்ளது. இதில் அந்த அணி 142 போட்டிகளில் வெற்றியும், 115 போட்டிகளில் தோல்வியும் அடைந்துள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 239 போட்டிகளில் விளையாடி 138இல் வெற்றி, 98இல் தோல்வி கண்டுள்ளது. கொல்கத்தா அணி 251 போட்டிகளில் விளையாடி 129இல் வெற்றியும், 117இல் தோல்வியும் அடைந்துள்ளது.

News May 23, 2024

OTT-இல் வெளியானது ‘ரத்னம்’

image

விஷால், பிரியா பவானி சங்கர் நடித்துள்ள ‘ரத்னம்’ திரைப்படம், இன்று அமேசான் பிரைமில் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியானது. இது சண்டக்கோழி, பூஜை படங்களைத் தொடர்ந்து, ஹரி-விஷால் கூட்டணியில் உருவான 3ஆவது படம் ஆகும். கடந்த ஏப்ரல் 26ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம், விமர்சனம் மற்றும் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது. அதிரடி ஆக்ஷன் நிறைந்த இந்தப் படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.

News May 23, 2024

மருந்து ஏற்றுமதியில் உலகில் இந்தியா 2ஆவது இடம்

image

மருந்து ஏற்றுமதியில் உலகில் இந்தியா 2ஆவது இடம் வகிப்பதாக ஜெ.பி. நட்டா தெரிவித்துள்ளார். மே.வங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், இந்தியாவில்தான் மிகக் குறைந்த விலையில் மருந்துகள் தயாரிக்கப்படுவதாகவும், இந்தியா மருந்து உற்பத்தி மையமாகத் திகழ்வதாகவும் கூறினார். ஆப்பிள் ஃபோன் உள்பட உலகின் 97% நிறுவனங்களின் மொபைல் போன்களின் உற்பத்தி இந்தியாவில் நடைபெறுவதாகவும் அவர் தெரிவித்தார்.

News May 23, 2024

பாஜக படுதோல்வி அடையும்: செல்வப்பெருந்தகை

image

மக்களவைத் தேர்தலில் பாஜக படுதோல்வி அடையும். எனவே, ஜூன் 4க்கு பிறகு கமலாலயத்தில் எத்தனை பேர் இருப்பார்கள் எனத் தெரிவித்தால் உணவு வழங்கத் தயார் என்று செல்வப்பெருந்தகை அண்ணாமலைக்கு பதிலடி கொடுத்துள்ளார். 2004 – 2014 வரை கமலாலயத்தில் ஒருவர் மட்டுமே இருந்த வரலாற்றை அண்ணாமலைக்கு நினைவூட்டுகிறோம். மோடி ஆட்சியில் 10 ஆண்டுகள் தமிழகம் வஞ்சிக்கப்பட்டது குறித்து புத்தகம் வழங்கத் தயார் எனவும் தெரிவித்தார்.

News May 23, 2024

காங்கிரசுக்கு முடிவு கட்டுகிறார் ராகுல்: ஆச்சார்ய பிரமோத்

image

காங்கிரசுக்கு முடிவு கட்டும் வேலையில் ராகுல் காந்தி ஈடுபட்டிருப்பதாக அக்கட்சியின் முன்னாள் எம்பி ஆச்சார்ய பிரமோத் சாடியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், ராகுல் காந்தி மகாபுருஷர் என்றும், அவர் எது வேண்டுமானாலும் பேசுவார் என்றும் கிண்டலடித்தார். காங்கிரசுக்கு முடிவு கட்டும் மகாத்மா காந்தியின் கனவை பாஜகவால் கூட செய்ய முடியவில்லை, ஆனால் ராகுல் காந்தி அதை செய்து வருகிறார் என்றும் அவர் கூறினார்.

News May 23, 2024

‘அரண்மனை 4’ திரைப்படம் ₹100 கோடி வசூல்

image

சுந்தர் சி இயக்கி நடித்துள்ள ‘அரண்மனை 4’ படம், உலகம் முழுவதும் ₹100 கோடி வசூலித்துள்ளதாகப் படக்குழு தெரிவித்துள்ளது. கடந்த மே 3ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம், ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. ₹40 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம், 19 நாட்களில் ₹100 கோடி வசூலித்துள்ளது. ‘கேப்டன் மில்லர்’ படத்துக்குப் பிறகு கோலிவுட்டில் இந்தாண்டு ₹100 கோடி வசூலித்த 2ஆவது படம் என்ற பெருமையைப் பெற்றது.

News May 23, 2024

ரேஷன் கடைகள் நேரத்தில் மாற்றம்

image

சென்னையில் காலை 8.30 மணி – 12.30 வரையும், பிற்பகல் 3 மணி முதல் இரவு 7 மணி வரையும், பிற மாவட்டங்களில் காலை 9 மணி முதல் பிற்பகல் 1 மணி வரையும், பிற்பகல் 2 முதல் மாலை 6 மணி வரையும் ரேஷன் கடைகள் செயல்படுகின்றன. மதியம் வழங்கப்படும் இடைவேளை நேரத்தில் ரேஷன் கடைகளில் முறைகேடு நடப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. இதனால், ரேஷன் கடைகளின் நேரத்தை விரைவில் மாற்ற கூட்டுறவு மற்றும் உணவுத் துறை முடிவு செய்துள்ளது.

error: Content is protected !!