news

News May 23, 2024

அன்னா ஹசாரேவை ஏமாற்றியவர் கெஜ்ரிவால்

image

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தனது அரசியல் குருவான அன்னா ஹசாரேவை ஏமாற்றியவர் என பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விமர்சித்துள்ளார். மேலும், ஹசாரேவை ஏமாற்றியவரால், மக்களின் நம்பிக்கையை எப்படி பெற முடியும் என்று கேள்வி எழுப்பிய அவர், வாக்குறுதிகள் எதையும் ஆம் ஆத்மி நிறைவேற்றவில்லை. INDIA கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் B-Team ஆக ஆம் ஆத்மி செயல்படுகிறது என்றும் சாடினார்.

News May 23, 2024

எங்கள் சுய மரியாதைக்காக விளையாடினோம்

image

இந்த ஐபிஎல் சீசனில் RCB கம்பேக் கொடுத்ததும், தொடர்ந்து 6 போட்டிகளில் வெற்றி ப்ளே-ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்ற விதமும், எப்போதும் மனதில் பசுமையான நினைவுகளாக இருக்கும் என RCB வீரர் விராட் கோலி நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார். போட்டிக்கு பின் பேசிய அவர், ஐபிஎல் சீசனின் முதல் பாதியில் மிகவும் மோசமாக விளையாடியதாகவும், அதன் பின் தங்கள் சுய மரியாதைக்காக விளையாடினோம் என்றும் தெரிவித்துள்ளார்.

News May 23, 2024

உக்ரைன் அணுஆயுதத் தாக்குதலுக்கு உள்ளானால்? (3/3)

image

1945இல் 2ஆம் உலகப் போரின்போது ஜப்பானின் ஹிரோஷிமா, நாகசாகி மீது அமெரிக்கா நடத்திய அணுகுண்டு தாக்குதலில் 2.26 லட்சம் பேர் மாண்டதாகப் புள்ளி விவரம் கூறுகிறது. இந்தத் தாக்குதலின் தீவிரம் உக்ரைனுக்கும், ரஷ்யாவுக்கும் நிச்சயம் தெரிந்திருக்கும். ஆதலால், இன்னொரு பேரழிவை மனித குலம் தாங்குமா? என சிந்தித்து, அமைதிப் பேச்சுவார்த்தை மூலம் பிரச்னைக்கு தீர்வு காண வேண்டுமென்பதே உலக நாடுகளின் வேண்டுகோளாகும்.

News May 23, 2024

உக்ரைன் அணுஆயுதத் தாக்குதலுக்கு உள்ளானால்? (2/3)

image

அணுஆயுதத் தாக்குதலால் உக்ரைனின் பொருளாதாரம் நாசமாவதோடு, பல நாடுகளின் பங்குச்சந்தைகள் வீழ்ச்சியடைய வாய்ப்புள்ளது. பெட்ரோலியப் பொருள்கள், தானிய வித்துகள், உரங்களின் விநியோகம் பாதிக்கப்பட்டு அவற்றின் விலை பலமடங்கு அதிகரிக்கும். கோதுமை, சூரியகாந்தி வித்து போன்றவற்றின் ஏற்றுமதியில் உலக அளவில் உக்ரைன் முக்கிய பங்கு வகிப்பதால், அங்கு பேரழிவு ஏற்படுவது உலகப் பொருளாதாரத்தையும் பாதிக்கும்.

News May 23, 2024

உக்ரைன் அணுஆயுதத் தாக்குதலுக்கு உள்ளானால்? (1/3)

image

உக்ரைனுடனான போரின் தீவிரம் மேலும் அதிகரித்தால், அணுஆயுதத் தாக்குதல் நடத்தப்பட வாய்ப்புள்ளதாகப் போரின் ஆரம்பம் முதல் பேசப்பட்டு வருகிறது. தற்போது அணுஆயுதத் தாக்குதலுக்கான ஒத்திகை நடப்பதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. உக்ரைன் அணுஆயுதத் தாக்குதலுக்கு உள்ளானால், லட்சக்கணக்கானோர் உயிரிழப்பதோடு, கதிர்வீச்சின் வீரியத்தால் பல நூறு ஆண்டுகளுக்கு எதிர்கால சந்ததியினர் ஊனத்தோடு பிறக்கும் நிலை உருவாகும்.

News May 23, 2024

“REMAL” புயல் உருவாகிறது

image

வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதி புயலாக வலுப்பெறும் என்று சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. காற்றழுத்த தாழ்வுப்பகுதி, தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக வலுப்பெற்றுள்ளது. இது வடகிழக்கு நோக்கி நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி, தீவிரப் புயலாக வலுப்பெறும் எனத் தெரிவித்துள்ளது. வங்கக்கடலில் உருவாகவுள்ள தீவிரப் புயலுக்கு “REMAL” என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

News May 23, 2024

வேளாண்மையில் சாதிக்கும் தமிழ்நாடு

image

முதல்வர் ஸ்டாலினின் சீர்மிகு திட்டங்களால் வேளாண்மை துறையில் இந்தியாவிலேயே தமிழ்நாடு முன்னணி மாநிலமாக திகழ்கிறது என தமிழக அரசு பெருமிதம் தெரிவித்துள்ளது. 24.50 லட்சம் விவசாயிகளுக்கு ₹4,366 கோடி பயிர்க் காப்பீட்டுத் தொகை, மழை வறட்சி பேரிடர்களால் பாதிக்கப்பட்ட 8 லட்சம் விவசாயிகளுக்கு ₹582 கோடி நிவாரணம், கரும்பு விவசாயிகளுக்கு ₹651 கோடி சிறப்பு ஊக்கத்தொகை வழங்கப்பட்டுள்ளது என அரசு தெரிவித்துள்ளது.

News May 23, 2024

கொல்கத்தா உயர்நீதிமன்றத் தீர்ப்புக்கு மம்தா எதிர்ப்பு

image

ஓபிசி சான்றிதழ் தொடர்பான கொல்கத்தா உயர் நீதிமன்றத் தீர்ப்பை ஏற்க மாட்டோம் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். 2010ஆம் ஆண்டுக்கு பிறகு வழங்கப்பட்ட ஓபிசி சான்றிதழ் செல்லாது என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இது பற்றி கருத்து தெரிவித்த மம்தா, உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய இருப்பதாகவும், அதேநேரத்தில் ஓபிசி இடஒதுக்கீடு தொடரும் என்றும் கூறியுள்ளார்.

News May 23, 2024

தோல்விக்கு பிறகு உருக்கமாகப் பேசிய தினேஷ் கார்த்திக்

image

RR-க்கு எதிரான போட்டிக்கு பிறகு ஓய்வை அறிவித்த தினேஷ் கார்த்திக், தோல்வி குறித்து உருக்கமாகப் பேசியுள்ளார். “தொடர்ந்து 6 போட்டிகளில் வென்ற போது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தோம். அதனால், இந்த வருடம் எங்களுக்கானது என்று நினைத்தோம். ஆனால், விளையாட்டைப் பொறுத்தவரை எல்லா போட்டிகளிலும் சரியான முடிவுகளை பெற முடியாது. சில கடினமான நாள்கள் இருக்கும். இது எங்களுக்கு கடினமான நாளாகிவிட்டது” எனக் கூறினார்.

News May 23, 2024

மோடியின் உயிருக்கு அச்சுறுத்தல்?

image

தேர்தல் நேரத்தில் பிரதமர் மோடிக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டிருப்பதால், அவரின் உயிருக்கு அச்சுறுத்தல் இருக்கிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது. கடந்த 2 நாள்களுக்கு முன் ஐஎஸ் அமைப்புடன் தொடர்புடைய இலங்கையைச் சேர்ந்த 4 பேர் அகமதாபாத்தில் கைது செய்யப்பட்டனர். அவர்கள் குஜராத்தில் தாக்குதல் நடத்தவும், பாஜக தலைவர்களை கொல்ல சதித்திட்டம் தீட்டியதும் விசாரணையில் தெரியவந்த நிலையில், கொலை மிரட்டல் வந்துள்ளது.

error: Content is protected !!