India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பி.எஸ்.சி நர்சிங், பி பார்ம் உள்ளிட்ட 19 மருத்துவ பட்டப்படிப்புகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என மருத்துவக்கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநர் அறிவித்துள்ளார். ஜூன் 21ஆம் தேதி மாலை 5 மணி வரை <
சேலம் தலைவாசல் காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ ராஜம்மாள் (84) உடல்நலக்குறைவால் இன்று காலமானார். 1980 மற்றும் 1984ஆம் ஆண்டுகளில் 2 முறை எம்எல்ஏவாக இருந்த அவர், கட்சியில் பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார். வயது மூப்பு காரணமாக கட்சிப் பணியில் இருந்து விலகி இருந்த அவர், உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். தொடர்ந்து, அவருக்கு காங்கிரஸ் நிர்வாகிகள் உட்பட பல்வேறு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
தமிழகத்தில் ரேஷன் கடைகளுக்கு 90 டன் தரமற்ற துவரம் பருப்புகள் அனுப்பப்பட்டது அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஒப்பந்த நிறுவனங்கள் வழங்கிய அந்த பருப்புகளை அவர்களுக்கே திருப்பி அனுப்ப முடிவு செய்த அவர்கள், பொருட்களின் தரத்தை ஆய்வு செய்த பிறகே மக்களுக்கு விநியோகிப்போம் எனக் கூறினர். தரமில்லாப் பொருட்களை அனுப்புவது தொடர்ந்தால் சம்பந்தப்பட்ட நிறுவனம் மீது நடவடிக்கை பாயும் எனவும் எச்சரித்தனர்.
மலேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடரின் 2ஆவது சுற்றில், பி.வி.சிந்து போராடி வெற்றி பெற்றார். தென்கொரிய வீராங்கனை சிங் யூ ஜின் உடனான இப்போட்டியில், அபாரமாக விளையாடி முதல் செட்டை கைப்பற்றினார் சிந்து. 2ஆவது செட்டில் தோல்வி அடைந்ததால், இருவரும் 1-1 என்ற செட் கணக்கில் சமனில் இருந்தனர். 3ஆவது செட்டில் கடும் போட்டி நிலவிய நிலையில், 21-14 என்ற புள்ளிக் கணக்கில் வென்று சிந்து காலிறுதிக்கு முன்னேறினார்.
பாஜக மூன்றாவது முறையாக மீண்டும் ஆட்சி அமைக்கும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் திட்டவட்டமாகக் கூறியுள்ளார். கடந்த 10 ஆண்டுகளில் பிரதமர் மோடி முன்னெடுத்த முயற்சிகளைப் பார்த்து பாஜகவைத் தேர்ந்தெடுக்க நாட்டு மக்கள் முடிவு செய்துள்ளதாகக் கூறிய அவர், மக்களுடைய எண்ணங்கள் சரியாக இருப்பதை அவர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களிப்பதன் மூலமே அறிந்து கொள்ளலாம் எனவும் தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் இன்று மதியத்திற்கு மேல் குமரி, நெல்லை, தென்காசி, கோவை, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என வானிலை மையம் ஆரஞ்சு அலர்ட் விடுத்துள்ளது. அதேபோல், விருதுநகர், மதுரை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் என மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக அங்கு இன்று மாலைக்கு பின் பரவலாக இடியுடன் கூடிய மழை பெய்யும் எனவும் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு ஜூன் 16இல் தொடங்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜூன் 14ஆம் தேதி நீட் தேர்வு முடிவுகள் வெளியாகும் நிலையில், 16 முதல் விண்ணப்பப் பதிவு தொடங்கப்பட உள்ளது. 9,050 மருத்துவ இடங்களுக்கான கலந்தாய்வு ஜூன் 20க்கு மேல் தொடங்க வாய்ப்புள்ளது. இதற்கு, tnmedicalselection.net/ என்ற இணையதளத்தின் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும்.
வி.கே. பாண்டியன் அருகில் இருப்பதை நவீன் பட்நாயக் விரும்புகிறாரா அல்லது அவரை வி.கே. பாண்டியன் தனது பிடியில் வைத்துள்ளாரா? என அசாம் முதல்வர் பிஸ்வா சர்மா கேள்வியெழுப்பியுள்ளார். முதல்வர் ஒருவர் சிறைபிடிக்கப்பட்டு இருந்தால், நாட்டுக்கு நல்லதல்ல என்றும், ஆதலால் நவீன் பட்நாயக்கிடம் உயர்நீதிமன்ற நீதிபதி ஒருவர் பேசி, அவர் மகிழ்ச்சியாக உள்ளாரா, இல்லையா என்ற உண்மையைக் கேட்க வேண்டும் என்றார்.
தமிழகத்தில் கொடைக்காணலில் நடந்த உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு மலையாளத்தில் அண்மையில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற திரைப்படம் ‘மஞ்சுமெல் பாய்ஸ்’. இப்படத்தின் இயக்குநர் சிதம்பரம் அடுத்ததாகத் தமிழ் படத்தை இயக்க இருப்பதாகத் தகவல் வெளியானது. இந்நிலையில், இப்படத்தை கோபுரம் ஃபிலிம்ஸ் தயாரிக்க உள்ளதும், தனுஷ் அதில் நடிக்க உள்ளதும் தற்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தமிழ்நாட்டில் கனமழை காரணமாக கடந்த 7 நாள்களில் 15 பேர் உயிரிழந்துள்ளனர் என பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 13 கால்நடைகள் உயிரிழந்துள்ளதாகவும், நெல், சோளம், பருப்பு, எள்ளு, கடலை உள்பட 4,385.40 ஹெக்டேர் பரப்பளவிலான விளைநிலங்கள் மழைநீரில் மூழ்கி சேதமடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது. மழையால் சேதமடைந்த வீடுகள், பயிர்களுக்கு அரசு உரிய இழப்பீடு வழங்க திட்டமிட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.