India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
வாடிக்கையாளர்களை தக்கவைக்க வாட்ஸ்அப் செயலியில் பல்வேறு அம்சங்கள் தொடர்ந்து அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில், AI தொழில்நுட்பத்தின் உதவியுடன் பயனாளர்கள் தனித்துவமான profile photo உருவாக்கும் அம்சத்தை வாட்ஸ்அப் செயலி சோதித்து வருகிறது. பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக தனது புகைப்படங்களை profileஇல் வைக்க விரும்பாத பயனாளர்களுக்கு இந்த அம்சம் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் வெயில் அதிகரித்து வருவதால், மின்சார பயன்பாடு தொடர்ந்து உச்சத்தை எட்டி வருகிறது. நேற்று வரலாற்று உச்சமாக 235.06 ஜிகா வாட் மின் தேவை பதிவாகியுள்ளது. அதற்கு முன்னதாக, கடந்த செப்டம்பர் மாதம் 243.27 ஜிகா வாட் அதிகபட்ச மின் தேவையாக இருந்தது. பகல் நேரங்களில் சராசரி மின் தேவை 235 ஜிகா வாட்டாக இருக்கும் சூழலில், அடுத்த மாதம் இது 240 ஜிகா வாட்டாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அபுதாபியில் நடந்த நிகழ்ச்சியில் ஐக்கிய அரபு அமீரக கலாசாரம் மற்றும் சுற்றுலாத்துறை சார்பில் நடிகர் ரஜினிகாந்துக்கு கோல்டன் விசா வழங்கப்பட்டது. ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிக்க விரும்பும் வர்த்தகர்கள், விளையாட்டு வீரர்கள், திரைப் பிரபலங்கள் உள்ளிட்டோர் அமீரகத்தை சேர்ந்த நிறுவனம் அல்லது தனி நபர் ஆதரவு இல்லாமல் 10 ஆண்டுகள் வரை வசிக்கும் வகையில் கோல்டன் விசா வழங்கப்பட்டு வருகிறது.
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தனது உதவியாளரை பாதுகாக்க முயற்சிப்பதாக ஸ்வாதி மாலிவால் குற்றம்சாட்டியுள்ளார். தாக்குதல் சம்பவம் நடந்தபோது தான் வீட்டில் இல்லை என கெஜ்ரிவால் கூறியிருந்த நிலையில், அவர் வீட்டில் இருந்ததாக மாலிவால் கூறினார். அத்துடன், இவ்விவகாரம் தொடர்பாக இதுநாள் வரை தனக்கு கெஜ்ரிவாலிடம் இருந்து எந்த அழைப்பும் வரவில்லை என்றும், அவர் தன்னை நேரில் சந்திக்கவில்லை எனவும் தெரிவித்தார்.
பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த புகாரில், குஜராத்தைச் சேர்ந்த மீனவர் ஒருவரை தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். போர்பந்தரைச் சேர்ந்த ஜதீன் சரானியா என்பவர், இந்தியா குறித்த முக்கியத் தகவல்களை உளவு பார்த்து பாகிஸ்தானுக்கு வழங்கியதாக தெரிகிறது. இந்த விவகாரத்தில் அவரை அதிரடியாக கைது செய்த போலீசார், என்ன மாதிரியான தகவல்களை பாகிஸ்தானுக்கு அனுப்பினார் என விசாரித்து வருகின்றனர்.
டெல்லியில், 7 தொகுதிகளையும் பாஜக வெல்லும் என மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். INDIA கூட்டணி முற்றிலும் தோல்வி அடைந்துள்ளதாக கூறிய அவர், சிறையில் இருந்த கெஜ்ரிவால் பரப்புரை செய்வது பாஜகவுக்கு சாதகமாக மாறும் என்றார். டெல்லியில் கடந்த 2014 மற்றும் 2019இல் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் 7 இடங்களிலுமே பாஜக வென்றது. இந்த முறை பாஜக ஹாட்ரிக் வெற்றி பெறுமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
புதுக்கோட்டை வேங்கைவயல் கிராமத்தில், பட்டியலின மக்கள் உபயோகிக்கும் நீர்த்தேக்க தொட்டியில் மலம் கலந்த விவகாரம் தமிழகத்தை அதிர்ச்சி அடையச் செய்தது. இந்த வழக்கை CBCID விசாரித்து வரும் சூழலில், குற்றவாளியை அவர்கள் நெருங்கிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக பல்வேறு நபர்களிடம் பல கட்ட விசாரணை நடந்த நிலையில், காவலர் ஒருவரிடம் இன்று 5 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடந்தது குறிப்பிடத்தக்கது.
மாணவர் சேர்க்கை தொடர்பாக அரசு மற்றும் தனியார் கலை & அறிவியல் கல்லூரிகள் பின்பற்ற வேண்டிய நெறிமுறைகளை உயர்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. அதில், ‘தரவரிசைப் பட்டியல் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும். அரசுக் கல்லூரிகள் www.tngasa.in என்ற இணையதளத்திலும், அரசு உதவிபெறும் மற்றும் தனியார் கல்லூரிகள் தங்களது இணையதளத்திலும் மாணவர் சேர்க்கை, கட்டண விவரங்களை வெளியிட வேண்டும்’ எனக் கூறப்பட்டுள்ளது.
சென்னை, கிண்டி அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் (மகளிர்) 2024ஆம் ஆண்டிற்கான சேர்க்கை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விண்ணப்பதாரர் 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும். பயிற்சியில் சேரும் மாணவர்களுக்கு உதவித்தொகையுடன் இலவச பஸ் பாஸ், மிதிவண்டி, சீருடை உள்ளிட்டவை வழங்கப்படும். கூடுதல் விவரங்களுக்கு 044 2251 0001 தொலைபேசி எண் அல்லது www.skilltraining.tn.gov.in என்ற இணையதளத்தை அணுகலாம்.
கோலியை விடவும் அதிகளவிலான ரசிகர்கள் தோனியின் பக்கம் நிற்பதற்கான காரணம் குறித்து பிரபல வர்ணனையாளர் ஹர்ஷா போக்லே கூறியுள்ளார். இளம் வீரர்களை வழிநடத்துவதில், தோனியை விட கோலி மிகவும் பின்தங்கியுள்ளதே இதற்கு முக்கிய காரணம் என அவர் தெரிவித்துள்ளார். நேற்றைய போட்டியில், பெங்களூரு இளம் வீரர் யாஷ் தயாள் ஓவரில், ராஜஸ்தான் வீரர்கள் அடுத்தடுத்து பவுண்டரி அடித்த உடன், அவரை கோலி திட்டினார்.
Sorry, no posts matched your criteria.