India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பூமிக்கு தன்னை கடவுள் அனுப்பியதாகவும், தான் பயாலாஜிகளாகப் பிறந்திருக்க வாய்ப்பில்லை என்றும் பிரதமர் தெரிவித்திருந்தார். இது குறித்து பேசிய ராகுல் காந்தி, கடவுள் எப்படிபட்ட நபரை பூமிக்கு அனுப்பியுள்ளார்? கடவுளால் அனுப்பப்பட்டவர் பெரும் பணக்காரர்கள் 22 பேருக்காக மட்டும் வேலை செய்கிறார் என்றார். கொரோனாவால் மக்கள் இறந்துக் கொண்டிருந்தபோது, டார்ச் லைட் அடிக்கச் சொன்னவர்தான் மோடி எனவும் விமர்சித்தார்.
தங்கத்தை பல்வேறு வழிகளில் சேமிக்க முடியும். தங்கத்தை ஆபரணமாக வாங்கலாம். ஆனால், அதற்கு செய்கூலி, சேதாரம், ஜிஎஸ்டி செலுத்த வேண்டும். தங்க நாணயம் அல்லது தங்கக் கட்டி வாங்கலாம். இதற்கும் செய்கூலி, ஜிஎஸ்டி உண்டு. ரிசர்வ் வங்கி வெளியிடும் தங்கப் பத்திரங்களை வாங்கலாம். இதற்கு ஆண்டுக்கு 2.5% வட்டி கிடைக்கும். Goldbees உள்ளிட்ட Gold ETFஐ ஒரு யூனிட் ₹62க்கு வாங்க முடியும்.
கோடை விடுமுறைக்கு பின், வழக்கமாக ஜூன் 1 (அ) 2ஆம் தேதியில் பள்ளிகள் திறக்கப்படும். இந்த ஆண்டு வாக்கு எண்ணிக்கை ஜூன் 4இல் நடைபெற உள்ளதால், பள்ளிகள் திறப்பு தேதி இதுவரை அறிவிக்கப்படவில்லை. மே 25க்கு பிறகு, வெயிலின் தாக்கம் அதிகரிக்கக்கூடும் என கூறப்படுவதால், பள்ளிகள் திறப்பு மேலும் தள்ளிப்போக வாய்ப்புள்ளதாக தெரிகிறது. இதனால், ஜூன் 10இல் பள்ளிகள் திறக்கப்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
பிஹாரின் சரண் தொகுதியில் 5ஆவது கட்ட வாக்குப்பதிவின் போது, பாஜக மற்றும் ஆர்ஜேடி தொண்டர்கள் மத்தியில் மோதல் வெடித்தது. இதில், ஒருவர் உயிரிழந்த நிலையில், இருவர் படுகாயம் அடைந்தனர். இந்நிலையில், அத்தொகுதியின் ஆர்ஜேடி வேட்பாளரும், லாலு பிரசாத்தின் மகளுமான ரோகினி ஆச்சார்யா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் வாக்குச்சாவடிக்கு சென்றபோது, இரு தரப்பும் மோதிக் கொண்டதாக கூறப்படுகிறது.
மோடி இன்னும் சில நாள்களில் முன்னாள் பிரதமராக மாறி விடுவார் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், மோடிக்கு உதவுவதற்காக தேர்தல் பல கட்டமாக நடத்தப்படுவதாகவும், கடந்த 2 மாதங்களாக நாட்டில் பிரசாரத்தை தவிர வேறு எந்த திட்டமும் செயல்படுத்தப்படவில்லை என்றும் குற்றம் சாட்டினார். வெப்பமான சூழலிலும் தேர்தல் ஆணையம் பல கட்ட தேர்தலை நடத்துவதாக அவர் விமர்சித்தார்.
பேருந்தில் ஏறிய காவலர் ஒருவர் டிக்கெட் எடுக்க முடியாது என்று ரகளையில் ஈடுபட்ட வீடியோ வைரலானதை தொடர்ந்து, சம்பந்தப்பட்ட காவலரை விசாரிக்க நெல்லை எஸ்.பி உத்தரவிட்டார். இதனையடுத்து, அவர் சென்னை ஆயுதப்படையில் வேலை செய்யும் விருதுநகரைச் சேர்ந்த ஆறுமுகபாண்டி எனத் தெரியவந்தது. இந்நிலையில், அவரிடம் விசாரணை நடத்தியபோது திடீரென மயங்கி விழுந்ததால் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சிவகாசியில் 150க்கும் அதிகமான பட்டாசு ஆலைகள், நாளை முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அடிக்கடி வெடி விபத்து நடப்பதால் சிவகாசியில் உள்ள ஆலைகளில் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். அவர்களது நடவடிக்கையை கண்டித்து வேலை நிறுத்தம் செய்வதாக தமிழன் பட்டாசு, கேப் வெடி உற்பத்தியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. இதனால், ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பாதிப்படையும் சூழல் உருவாகியுள்ளது.
டெல்லியில் கருணாநிதி பிறந்த நாள் விழாவை நடத்த திமுக திட்டமிட்டுள்ளது. இந்த விழாவில் INDIA கூட்டணி தலைவர்கள் பங்கேற்கும் பொருட்டு, அனைவருக்கும் அழைப்பிதழ் அனுப்பப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. வாக்கு எண்ணிக்கைக்கு முந்தைய நாள் (ஜூன் 3) இந்த விழா நடப்பதால், இந்த நிகழ்ச்சி முக்கியத்துவம் பெற்றுள்ளது. தேர்தல் முடிவு வெளியான பிறகு, ஜூன் 2ஆவது வாரத்தில் கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா கொண்டாடப்பட உள்ளது.
தனுஷின் ‘ராயன்’ படத்தின் முதல் பாடலான “அடங்காத அசுரன்…” சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், இப்படத்தின் “வாட்டர் பாக்கெட்…” பாடல் நாளை மாலை 6 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இப்பாடல், கானா பாடலாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளதால், எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இப்படம் ஜூன் 17ஆம் தேதி வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
என்னை காயப்படுத்த எனது பெற்றோரை துன்புறுத்த வேண்டாம் என கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். ஆம் ஆத்மி எம்பி ஸ்வாதி மாலிவால் தாக்கப்பட்ட விவகாரத்தில் கெஜ்ரிவாலின் உதவியாளர் கைது செய்யப்பட்டார். இது தொடர்பாக விசாரிக்க கெஜ்ரிவாலின் பெற்றோருக்கும் போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். இது குறித்து பேசிய கெஜ்ரிவால், “உங்கள் சண்டை என்னோடுதான், எனது பெற்றோரை விட்டுவிடுங்கள்” எனக் கூறியுள்ளார்.
Sorry, no posts matched your criteria.