India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தேர்தல் முடிவுக்கு பின் முல்லைப் பெரியாறு அணை குறித்து பிரதமர் மோடியை சந்தித்து வலியுறுத்துவேன் என்று ராமதாஸ் கூறியுள்ளார். இது குறித்து பேசிய அவர், “காமராஜர் காலத்தில் தான் அணைகள் கட்டப்பட்டன. 57 ஆண்டுகளில் திமுக, அதிமுக ஆட்சியில் அணைகள் எதுவும் கட்டப்படவில்லை. திமுக ஆட்சியில் 41 அணைகள் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. அவற்றை அணைகள் என சொல்ல முடியாது. அதில், ஒரு டி.எம்.சி கொள்ளளவுகூட இல்லை” என்றார்.
▶குறள் பால்: அறத்துப்பால் ▶இயல்: பாயிரவியல்
▶அதிகாரம்: வான்சிறப்பு ▶ எண்: 12
▶குறள்:
துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉம் மழை.
▶பொருள்:
உண்பவருக்குத் தக்க உணவுப் பொருள்களை விளைவித்துத் தருவதோடு, பருகுவோருக்குத் தானும் ஓர் உணவாகவும் ஆகி, அரிய தியாகத்தைச் செய்கிறது மழை.
2023-24ஆம் நிதியாண்டின் 4ஆவது காலாண்டில், இந்தியாவின் ஹோட்டல் துறை 11.4% வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளதாக ஜே.எல்.எல். இந்தியா தெரிவித்துள்ளது. அதன் அறிக்கையில், மதிப்பீட்டுக் காலாண்டில், சென்னை நகரின் சராசரி தினசரி வருவாய் (ஏடிஆர்) 22% வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. திருமண நிகழ்வுகள், தொழில்முறைப் பயணம், மாநாடுகள் ஆகியவை அந்நகரில் அதிகரித்ததே இந்த வளர்ச்சிக்குக் காரணம் எனக் கூறப்பட்டுள்ளது.
ஆசிய வாலிபால் சேலஞ்ச் கோப்பை தொடரின் 2ஆவது லீக் போட்டியில் இந்திய மகளிர் அணி வெற்றி பெற்றுள்ளது. பிலிப்பைன்ஸில் ஆசிய வாலிபால் சேலஞ்ச் கோப்பை தொடர் நடந்து வருகிறது. அதன் 2ஆவது போட்டியில், 46ஆவது இடத்திலுள்ள சீன தைபே அணியுடன் இந்திய அணி (62) மோதியது. அதில், இந்திய அணி 3-0 (25-19, 25-13, 25-16) என்ற செட் கணக்கில் வென்று 3ஆவது லீக் போட்டிக்கு முன்னேறியுள்ளது.
வாக்குப்பதிவு விவரம் அடங்கிய படிவம் 17சி-ஐ பொதுவில் வெளியிடுவது தீங்குக்கு வழிவகுக்கும் என்று தலைமைத் தேர்தல் ஆணையம் (ECI) தெரிவித்துள்ளது. உச்சநீதிமன்றத்தில் ECI தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில், “வலைதளத்தில் வெளியிட்டால், 17சி படிவத்தை போன்ற போலி பிரதிகளை வஞ்சக நோக்கம் கொண்டவர்கள் உருவாக்கும் சாத்தியக்கூறுகள் உள்ளன. இது மக்கள் இடையே அவநம்பிக்கையை ஏற்படுத்தும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று (மே 24) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email – way2tamilusers@way2news.com -க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 11 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!
‘கல்கி 2898 ஏடி’ படத்தில் கமல்ஹாசனுடன் நடித்த அனுபவம் குறித்து நடிகர் பிரபாஸ் நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார். ‘கல்கி 2898 ஏடி’ புரோமோஷன் நிகழ்ச்சியில் பேசிய அவர், “கமல் சார் படத்தில் பயன்படுத்திய உடைகள் மாதிரியே எனக்கும் உடைகள் வாங்கித் தர வேண்டும் என்று என் பெற்றோரிடம் அடம் பிடித்திருக்கிறேன். அவருடன் நடித்தத் தருணங்களை என் வாழ்வின் பெருமையான தருணங்களாக மனதில் வைத்துக் கொள்வேன்” என்றார்.
INDIA கூட்டணி கட்சிகளின் தலைவர்களுக்கு இந்தியாவை விட தங்கள் வாக்கு வங்கிதான் முக்கியம் என்று பிரதமர் மோடி விமர்சித்துள்ளார். பிவானியில் நடந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசிய அவர், “நான் ஒடுக்கப்பட்டவர்களின் உரிமைகளுக்கான காவலாளியாக இருப்பேன். இது அரசியல் பேச்சு அல்ல, எனது வாக்குறுதி. நான் உயிருடன் இருக்கும் வரை தலித், பழங்குடியினர் இட ஒதுக்கீட்டை யாராலும் பறிக்க முடியாது” எனக் கூறினார்.
நஷ்டத்தில் இயங்கி வரும் பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ், ரூஸ்வெல்ட் ஓட்டல் உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்க அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பொருளாதார நெருக்கடியில் தவித்துவரும் பாகிஸ்தானில் பண வீக்கம் அதிகரித்து அத்தியாவசிய பொருட்களின் விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது. இதனை சமாளிக்க உலக வங்கி, ஐ.எம்.எஃப் போன்றவற்றிடம் இருந்து கடன்களை வாங்கி வருகிறது.
*மோடி இன்னும் சில நாள்களில் முன்னாள் பிரதமராக மாறி விடுவார் – மம்தா பானர்ஜி
*இந்துத்துவாவின் முகமாக அம்மையார் ஜெயலலிதா இருந்தார் – அண்ணாமலை
*மருந்து & மருத்துவப் பொருள்கள் ஏற்றுமதியில் உலகில் அளவில் இந்தியா 2ஆவது இடம் பிடித்துள்ளது.
*ஜெனீவா ஓபன் டென்னிஸ் தொடரில் ஜோகோவிச் காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
*நஷ்டத்தில் இயங்கும் நிறுவனங்களை தனியார் மயமாக்க பாகிஸ்தான் அரசு திட்டம்
Sorry, no posts matched your criteria.