news

News May 24, 2024

இனி ரேஷன் கடை ஊழியர்கள் டிஸ்மிஸ்?

image

ரேஷன் கடைகளில் முறைகேடுகள் அதிகரித்துள்ளதால், குடும்ப அட்டைதாரர்களுக்கு சரியான முறையில் பொருள்கள் கிடைக்கவில்லை . இந்நிலையில், கடைகளில் ஆய்வுக்கு செல்லும் போது அடிக்கடி புகாருக்கு உள்ளாகும் ஊழியர்களின் விபரம் அடங்கிய பட்டியல் தயாரித்து, அவர்களைத் தொடர்ந்து கண்காணிக்கவும், முறைகேடுகளுக்கு துணைப்போகும் ரேஷன் கடை ஊழியர்களை நிரந்தர பணிநீக்கம் செய்யவும் அரசு முடிவு எடுத்துள்ளது.

News May 24, 2024

Qualifier 2: RR – SRH அணிகள் இடையே இன்று பலப்பரீட்சை

image

2024 ஐபிஎல் தொடரின் Qualifier 2 சுற்றில் RR – SRH அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன. இவ்விரு அணிகளும் இதுவரை 19 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் RR 9 முறையும், SRH 10 முறையும் வென்று இருக்கின்றன. இறுதிப்போட்டிக்கு முன்னேற இரு அணியிலும் அதிரடியாக விளையாடும் பேட்ஸ்மேன்கள் அணிவகுத்து நிற்பதால் சென்னை எம்.ஏ. சிதம்பரம் ஸ்டேடியத்தில் அனல் பறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

News May 24, 2024

தமிழ்நாட்டில் வெற்றிடத்தை பாஜக நிரப்பி வருகிறது

image

தென் மாநிலத்தில் 3ஆவது பெரிய கட்சியாக பாஜக உருவெடுக்கும் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நம்பிக்கை தெரிவித்துள்ளார். டெல்லியில் பிரசாரக் கூட்டத்தில் பேசிய அவர், “ஜெயலலிதாவின் மறைவால் தமிழ்நாட்டில் ஏற்பட்ட வெற்றிடத்தை பாஜக நிரப்பி வருகிறது. என்.டி.ஏ கூட்டணி தமிழகம், கர்நாடகம் & கேரளாவில் இரட்டை இலக்க தொகுதிகளிலும், தெலங்கானாவில் 9 இடங்களிலும் வெல்லும்” எனக் கூறினார்.

News May 24, 2024

புதிதாக 6 மருத்துவக் கல்லூரிகள் அமைக்க அனுமதி

image

தமிழகத்தில் புதிதாக 6 மருத்துவக் கல்லூரிகளை அமைக்க தேசிய மருத்துவ ஆணையம் அனுமதி அளித்துள்ளது. அதன் உத்தரவில், தென்காசி, அரக்கோணம், பெரம்பலூர், மயிலாடுதுறை, ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய 6 மாவட்டங்களில் கல்லூரிகள் தொடங்க அனுமதி வழங்கப்படுகிறது என்று கூறப்பட்டுள்ளது. அத்துடன், மத்திய அரசின் பங்களிப்புடன் அமைக்கப்படும் இந்த கல்லூரிகளுக்கான 25 ஏக்கர் நிலத்தை அடையாளம் காணவும் அறிவுறுத்தியுள்ளது.

News May 24, 2024

இன்றைய தலைப்புச் செய்திகள்!

image

*ஜனநாயகத்தை காக்கும் போரில் டெல்லி மக்கள் பங்கேற்க வேண்டும் – சோனியா காந்தி
*தென் மாநிலத்தில் 3ஆவது பெரிய கட்சியாக பாஜக உருவெடுக்கும் – அண்ணாமலை
*2023-24ஆம் நிதியாண்டின் 4Qஇல், ‘ஆல்பபெட்’ நிறுவனம் ₹1.95 லட்சம் கோடியை வருவாயாக ஈட்டியுள்ளது
*காசா மசூதி மீது இஸ்ரேல் நடத்திய ஏவுகணை தாக்குதலில் 16 பேர் உயிரிழந்துள்ளனர்.
*ஷார்ஜா சேலஞ்சர் செஸ் தொடரில் இந்திய வீராங்கனை திவ்யா சாம்பியன் வென்றார்.

News May 24, 2024

நபிகள் நாயகனாரின் பொன்மொழிகள்

image

✍ அன்புதான் இறைவனின் உரைவிடம் என்பதை அறியாதே அறிவே இறைவனின் உறைவிடத்தை தேடி அலைகிறது. ✍உழைப்பாளியின் வியர்வை உலருவதற்கு முன் அவருடைய கூலியைக் கொடுத்து விடுங்கள். ✍இறைவன் நம் உருவத்தையே செல்வதையோ பார்ப்பதில்லை மாறாக உள்ளத்தையும் செயலையும் பார்க்கிறான். ✍நாம் யாருக்கும் மேலோரல்ல; நமக்கு யாரும் மேலோர் அல்ல. ✍மனிதனின் குற்றங்களில் பெரும்பாலானவை அவனது நாவிலிருந்து தான் பிறக்கின்றன.

News May 24, 2024

வேறு அணிக்காக விராட் கோலி விளையாட வேண்டும்

image

ஐபிஎல் தொடரில் கோப்பையை வெல்ல வேண்டுமெனில் விராட் கோலி வேறு அணிக்காக விளையாட வேண்டும் என்று இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன் அறிவுறுத்தியுள்ளார். டெல்லியில் பிறந்த கோலி DC அணிக்காக விளையாட வேண்டும் எனக் கூறிய கெவின், இந்த முடிவை அவர் எடுக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என்றார். அத்துடன், ரொனால்டோ தனது அணி விட்டுச் சென்று வேறு அணிக்காக விளையாடியுள்ளார் என விளக்கமளித்துள்ளார்.

News May 24, 2024

பஞ்சாயத்தை முடிவுக்கு கொண்டுவந்த டி.ஆர்

image

‘கொரோனா குமார்’ படத்தை முடித்துவிட்டுத்தான் நடிகர் சிம்பு அடுத்த படத்தில் நடிக்க வேண்டுமென வேல்ஸ் தயாரிப்பு நிறுவனம் கூறியது அனைவருக்கும் தெரிந்ததே. இந்த விவகாரம் மணிரத்னத்தின் ‘தக் லைஃப்’ படப்பிடிப்பு வரை சென்றதாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து, ஐசரி கணேஷிடம் பேச்சுவார்த்தை நடத்திய டி.ஆர், “சிம்பு அடுத்து உங்கள் படத்தில் நடிப்பார்” என்று எழுதிக் கொடுத்து பஞ்சாயத்தை முடிவுக்கு கொண்டுவந்துள்ளார்.

News May 24, 2024

ஜனநாயகத்தை காக்கும் போரில் மக்கள் பங்கேற்க வேண்டும்

image

ஜனநாயகத்தை காக்கும் போரில் டெல்லி மக்கள் பங்கேற்க வேண்டும் என வாக்காளர்களிடம் சோனியா காந்தி கேட்டுக்கொண்டுள்ளார். அவர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட வீடியோவில், இது மிகவும் முக்கியமான தேர்தல். நாட்டின் ஜனநாயகத்தை, அரசியலமைப்பை காப்பாற்றுவதற்கான தேர்தல். வேலையில்லா திண்டாட்டம், பணவீக்கம் மீதான தாக்குதல் போன்ற பிரச்சினைகளை முன்வைத்து இந்த தேர்தலை சந்திக்கிறோம் எனக் கூறியுள்ளார்.

News May 24, 2024

இன்றைய நல்ல நேரம்!

image

▶மே – 24 ▶வைகாசி – 11
▶கிழமை: வெள்ளி ▶திதி: பிரதமை
▶நல்ல நேரம்: காலை 09:30 – 10:30 வரை, மாலை 02:00 – 03:00 வரை
▶கெளரி நேரம்: காலை 12:00 – 01:30 வரை, மாலை 06:30 – 07:30 வரை
▶ராகு காலம்: பகல் 10:30 – 12:00 வரை
▶எமகண்டம்: காலை 03:00 – 04:30 வரை
▶குளிகை: காலை 07:30 – 09:00 வரை
▶சூலம்: மேற்கு ▶பரிகாரம்: வெல்லம்
▶சந்திராஷ்டமம்: ரேவதி, அசுபதி

error: Content is protected !!