news

News May 24, 2024

தீபக்ராஜா படுகொலை வழக்கில் 4 பேர் கைது

image

பசுபதிபாண்டியன் ஆதரவாளர் தீபக்ராஜா படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கியது. இச்சம்பவத்தால் தென்மாவட்டங்களில் பதற்றமான சூழல் நிலவிய நிலையில், கொலை தொடர்பாக சரவணன், ஐயப்பன், தம்பன், ஐயப்பன் ஆகிய 4 பேரை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். இதில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் நவீன் பெயர் இடம்பெறவில்லை. இதனால், அவர் கைது செய்யப்பட்டாரா? இல்லையா? என்று கேள்வி எழுந்துள்ளது.

News May 24, 2024

கர்தார்பூர் சாஹிப் பகுதியை கைப்பற்றியிருப்பேன்

image

பஞ்சாப் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்று மோடி பேசினார். அப்போது அவர், பிரிவினையின்போது சீக்கியர்களின் புனித பகுதியான கர்தார்பூர் சாஹிப் பாகிஸ்தானிடம் விடப்பட்டதால் 70 ஆண்டுகளாக அப்பகுதியை பைனாகுலரில் பார்க்கும் நிலை உள்ளதாகவும், 1970 போரின் போது தான் பிரதமராக இருந்திருந்தால், வங்கதேசப் போரில் சரணடைந்த 90,000 பாகிஸ்தான் வீரர்களை ஒப்படைத்து அப்பகுதியை கைப்பற்றியிருப்பேன் எனக் கூறினார்.

News May 24, 2024

INDIA கூட்டணிக்கு மக்களின் ஆசிர்வாதம்

image

INDIA கூட்டணிக்கு மக்களின் ஆசிர்வாதம் இருப்பதாக ஆர்ஜேடி கட்சித் தலைவரும், பிஹார் முன்னாள் துணை முதல்வருமான தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான INDIA கூட்டணிக்கு தொடர்ந்து நாளுக்கு நாள் ஆதரவு அதிகரித்து வருகிறது என்றும், 300 தொகுதிகளுக்கும் மேல் தங்களது கூட்டணி வெற்றி பெறும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.

News May 24, 2024

காலை 10 மணி வரை கனமழை

image

தமிழ்நாட்டில் காலை 10 மணி வரை 7 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. திருப்பூர், கோவை, தென்காசி, நெல்லை ஆகிய 4 மாவட்டங்களில் மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட், குமரி, புதுக்கோட்டை, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கான மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதனால், மேற்குத் தொடர்ச்சி மாவட்டச் சுற்றுலாத் தலங்களுக்கு செல்வோர் எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News May 24, 2024

கூடுதலாக 918 மருத்துவ மாணவர்கள் உருவாவார்கள்

image

நாட்டிலேயே தமிழகத்தில்தான் அதிக எண்ணிக்கையில் 71 மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. இதில் ஒவ்வொரு கல்லூரியிலும் தலா 153 பேர் வீதம், 11,000க்கும் அதிக மருத்துவக் கல்வி இடங்கள் உள்ளன. தற்போது 6 மாவட்டங்களில் புதிதாக கல்லூரிகள் தொடங்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் புதிதாக 918 மருத்துவ இடங்கள் உருவாகின்றன. இதனால், இனி ஒவ்வொரு ஆண்டும் சுமார் 12,000 மருத்துவ மாணவர்கள் தமிழ்நாட்டில் உருவாவார்கள்.

News May 24, 2024

வங்கதேசத்துக்கு எதிரான டி20 தொடரை வென்றது அமெரிக்கா

image

அமெரிக்கா சென்றுள்ள வங்கதேச அணி, அந்நாட்டு அணிக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. முதல் போட்டியில் அமெரிக்கா வென்ற நிலையில், 2வது போட்டி நேற்று நடந்தது. முதலில் பேட் செய்த அமெரிக்கா 144 ரன்கள் எடுத்தது. பிறகு பேட் செய்த வங்கதேச அணி, 138 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது. இதன்மூலம் 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்று, போட்டித் தொடரை அமெரிக்க அணி கைப்பற்றியது.

News May 24, 2024

நடிகைகள் உள்பட 86 பேர் கைதாகலாம்!

image

பெங்களூரு பண்ணை வீட்டில் நடந்த விருந்தில் போதைப்பொருள் பயன்படுத்திய தெலுங்கு நடிகைகள் ஹேமா, ஆஷி ராய் கர்நாடக போலீசாரால் கைது செய்யப்படலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது. பண்ணை வீட்டில் பிடிபட்ட 103 பேரின் ரத்த மாதிரிகள் குற்றப்பிரிவு போலீசாரால் சோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. அதில், நடிகைகள் ஹேமா, ஆஷி ராய் உள்ளிட்ட 86 பேர் போதைப்பொருள் பயன்படுத்தியது உறுதியாகியுள்ளது.

News May 24, 2024

பட்டாசு உற்பத்தியாளர்கள் இன்று முதல் ஸ்டிரைக்

image

இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக பட்டாசு, கேப் வெடி உற்பத்தியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. சமீபகாலமாக பல்வேறு பட்டாசு ஆலைகளில் ஏற்பட்ட வெடி விபத்தில் பலர் உயிரிழந்தனர். இதனைத் தடுக்க, அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில், சரவெடி உற்பத்தி பட்டாசு ஆலைகள் மீதான நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, வேலை நிறுத்தப்போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

News May 24, 2024

“DK ஒரு சாம்பியன்” நடிகர் சித்தார்த் புகழாரம்!

image

தினேஷ் கார்த்திக் குறித்து நடிகர் சித்தார்த் தனது இன்ஸ்டா ஸ்டோரியில் பகிர்ந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில், “சிறப்பாக சென்று வாருங்கள் நண்பா! நீங்கள் ஒரு மிகச்சிறந்த சாம்பியன். அனைத்து சாத்தியமான வழியிலும் ஒரு மிகச்சிறந்த வீரர்” என்று பதிவிட்டுள்ளார். தினேஷ் கார்த்திக் இந்தியாவுக்காக 24 டெஸ்ட் போட்டிகள், 94 ODI போட்டிகள், 60 டி20 போட்டிகள் என்று மொத்தம் 180 போட்டிகளில் ஆடியுள்ளார்.

News May 24, 2024

நாளை 6ஆவது கட்டத் தேர்தல்

image

மக்களவைக்கு 7 கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்பட்டு வருகிறது. இதில் 6ஆவது கட்டமாக நாளை 8 மாநிலங்களில் உள்ள 58 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இதையும் சேர்த்தால், 28 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் உள்ள அனைத்து தொகுதிகளுக்கும் நாளையுடன் வாக்குப்பதிவு நிறைவு பெறுகிறது. 6ஆவது கட்டத் தேர்தலில் அரசியல் கட்சியினர், சுயேச்சைகள் உள்பட மொத்தம் 889 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

error: Content is protected !!