India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஃப்ளெமிங் இந்திய அணியின் பயிற்சியாளராக வாய்ப்பில்லை என சிஎஸ்கே அணியின் சிஇஓ காசி விஸ்வநாதன் சூசகமாகத் தெரிவித்துள்ளார். ஃப்ளெமிங் நீண்ட நெடிய பெரிய கமிட்மெண்ட்களையெல்லாம் எடுத்துக் கொள்ளமாட்டார் என்று தான் நினைப்பதாக அவர் தெரிவித்தார். முன்னதாக, தோனி மூலம் பிசிசிஐ பயிற்சியாளர் பதவிக்கு ஃப்ளெமிங்கை அணுகியதாகக் கூறப்படுவதையும், அவர் ஒப்புக்கொள்ளவில்லை என்று தகவல் வெளியாகி இருந்தது.
முகூர்த்தம் மற்றும் வார விடுமுறையை முன்னிட்டு இன்று முதல் 3 நாள்களுக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது. சென்னையில் இருந்து மதுரை, நெல்லை, திருச்சி, கோவை உள்ளிட்ட நகரங்களுக்கு இன்று 535, நாளை 592 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு www.tnstc.in மற்றும் Mobile App மூலம் விரைவாக முன்பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கடந்த சில நாள்களாக ஏறுமுகத்தில் இருந்த ஆபரணத் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை தற்போது இறங்குமுகத்தில் இருக்கிறது. குறிப்பாக கடந்த 4 நாள்களில் மட்டும் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு₹2000, வெள்ளி விலை கிலோவிற்கு ₹3,100 குறைந்துள்ளது. மே 20ஆம் தேதி அதிகபட்சமாக ஒரு சவரன் தங்கம் ₹55,200க்கும், கிலோ வெள்ளி ₹1,00,100க்கும் விற்பனையானது.
பதிப்பகங்களுக்கு புதிய ஆர்டர் தராதது குறித்து நூலகத்துறை இயக்குநர் இளம் பகவத் விளக்கம் அளித்துள்ளார். முந்தைய நடைமுறையில், அட்டையை மட்டும் மாற்றிவிட்டு பழைய புத்தகத்தை விற்ற தவறுகள் நடந்தது, இதுபோன்ற தவறை சரி செய்ய புதிய நடைமுறை உருவாக்கப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்தார். இனி ஆண்டுக்கு ஒருமுறை அல்லாமல், 3 மாதங்களுக்கு ஒருமுறை புத்தகங்கள் கொள்முதல் செய்யப்படும் என்றும் அவர் கூறினார்.
ஆண்டுதோறும் பதிப்பகங்களிடம் ஜுலை மாதத்துக்குள் புதிய புத்தகங்களை ஆர்டர் செய்து, நூலகங்களுக்கு பொது நூலகத்துறை வழங்குவது வழக்கம். 16 பக்கத்துக்கு ரூ.3.75-ரூ.7 வரை கணக்கிட்டு புத்தகத்துக்கு பணம் வழங்கப்படுகிறது. இதனால் பதிப்பகங்களுக்கு நிலையான வருவாய் கிடைத்த நிலையில், 2020 முதல் ஆர்டர் அளிக்கப்படவில்லை என்றும், இதனால் பதிப்பகங்களின் வருவாய் பாதித்துள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
‘அமரன்’ படத்தின் படப்பிடிப்பு, இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளது. ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் இப்படத்தில், சிவகார்த்திகேயன் ராணுவ அதிகாரியாக நடித்துள்ளார். சில மாதங்களுக்கு முன்பு வெளியான இப்படத்தின் டீசர், ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. மேலும், படத்தை வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திரத் தினத்தன்று வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த 2 நாள்களில் மட்டும்₹1680 குறைந்துள்ளதால் நகைப் பிரியர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹800 குறைந்து ₹53,200க்கும், கிராமுக்கு ₹100 குறைந்து ₹6,650க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், ஒருகிராம் வெள்ளியின் விலை 50 காசுகள் குறைந்து கிராம் ₹96.50க்கும், கிலோ வெள்ளி ₹500 குறைந்து ₹96,500க்கும் விற்பனையாகிறது.
விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன், குடும்பத்தினர் 2009ம் ஆண்டு போரில் கொல்லப்பட்டதாக இலங்கை அரசு கூறி வருகிறது. இதை பிரபாகரன் ஆதரவாளர்கள் நம்ப மறுக்கும் நிலையில், டென்மார்க்கில் வசிக்கும் பிரபாகரனின் அண்ணன் மனோகரன் உள்ளிட்டோர் பிரபாகரன், குடும்பத்தினர் ஏற்கெனவே வீரச்சாவு அடைந்து விட்டதாகக் கூறி, கடந்த 18ஆம் தேதி வீரவணக்க நாள் நடத்தி, மரண சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தனர்.
பட்நாயக்கின் வலதுகரமாக இருக்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்த வி.கே.பாண்டியனை பாஜக டார்கெட் செய்திருக்கிறது. குறிப்பாக, ஒரு தமிழர் ஒடிஷாவை ஆளலாமா என்ற கேள்வி விவாதப்பொருளாக மாறியுள்ளது. இதற்கு அகமதாபாத்தைச் சேர்ந்த மோடி வாரணாசியில் போட்டியிடலாம், உத்தராகண்டைச் சேர்ந்த யோகி உ.பி.,யில் முதல்வராகலாம். ஆனால், வி.கே.பாண்டியன் ஒடிஷாவில் முக்கிய பதவிகளில் வரக்கூடாதா என நெட்டிசன்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
“குட், பேட், அக்லி” படப்பிடிப்பில் அஜித் நடித்து வருகிறார். இந்நிலையில், விடாமுயற்சி பட நிர்வாகத் தயாரிப்பாளர்கள் 2 பேர் அவரை சந்தித்து, படப்பிடிப்பை தொடங்குவது குறித்து பேசியதாகவும், அப்போது படக்குழுவினருக்கு கொடுக்க வேண்டிய பணத்தை செட்டில் செய்தால்தான் நடிப்பேன் என அஜித் கூறியதாகவும் கூறப்படுகிறது. இதனால் விடாமுயற்சி படப்பிடிப்பு தொடங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.
Sorry, no posts matched your criteria.