India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
15 மற்றும் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான தமிழக மகளிர் கிரிக்கெட் அணிக்கான தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ளது. அதன்படி, ஜூன் 4ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேர்முகத் தேர்வு நடைபெற உள்ளது. விருப்பம் உள்ள பெண்கள் www.tnca.in என்ற இணையதளத்தில் மே 30ஆம் தேதி வரை ஆதார், மின்னஞ்சல், மொபைல் எண் ஆகியவற்றைக் கொண்டு விண்ணப்பிக்கலாம்.
மாணவர்களின் கல்வி செயல்பாடுகளை தெரிந்துக் கொள்ள குறைந்த விலையில் ஸ்மார்ட் போன்களை வாங்க வேண்டும் என பெற்றோருக்கு பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. தற்போது வரை 80 லட்சத்து 30 ஆயிரம் பெற்றோர்களின் மொபைல் எண்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன. பள்ளித் திறப்புக்கு முன் மீதமுள்ள 50 லட்சம் எண்கள் உறுதி செய்ய வேண்டும் என்பதால், பெற்றோர்கள் ஸ்மார்ட் செல்போன்களை வாங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இயக்குநர் நெல்சன், ஜெயிலர் 2ஆம் பாகமான ‘ஹுக்கும்’ படத்தின் திரைக்கதை பணியைத் தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்தாண்டு வெளியான ஜெயிலர் திரைப்படம், உலகம் முழுவதும் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. அதன் வெற்றியைத் தொடர்ந்து, 2ஆம் பாகத்தை எடுக்கத் திட்டமிட்டுள்ளதாக நெல்சன் அறிவித்தார். அதற்கானப் பணிகளை தொடங்கியுள்ள அவர், கூலி படத்திற்கு பிறகு படப்பிடிப்பை தொடங்க உள்ளதாகக் கூறப்படுகிறது.
T20 உலகக் கோப்பைத் தொடருக்காக, இந்திய அணி நாளை நியூயார்க் புறப்பட உள்ளது. அமெரிக்கா, மேற்கிந்திய தீவுகளில் நடைபெறும் இத்தொடர், வரும் ஜூன் 2ஆம் தேதி முதல் தொடங்க உள்ளது. இதில், ரோஹித் ஷர்மா தலைமையில் இளம் வீரர்களைக் கொண்ட இந்திய அணி பங்கேற்க உள்ளது. ஜூன் 1ஆம் தேதி வங்கதேசத்துக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தையும், ஜூன் 5ஆம் தேதி அயர்லாந்துக்கு எதிரான முதல் லீக் போட்டியையும் இந்தியா எதிர்கொள்ள உள்ளது.
வீட்டுக் காவலாளியைத் தாக்கியதாக முன்னாள் மனைவி பீலா வெங்கடேசன் அளித்த புகாரில் முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸை போலீசார் கைது செய்தனர். விவகாரத்து வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், தனது வீட்டில் மின்சாரம் தடை செய்யப்பட்டதற்கு பீலா தான் காரணம் எனக் கூறி, வீட்டின் பூட்டை உடைத்து ராஜேஷ்தாஸ் அத்துமீறி உள்ளே நுழைந்து பிரச்னை செய்துள்ளார். இதுதொடர்பான புகாரில், போலீசார் அவரை கைது செய்துள்ளனர்.
பிரஜ்வால் விவகாரத்தில் மத்திய அரசு ஒத்துழைப்பு அளிக்கவில்லை என கர்நாடக அமைச்சர் பரமேஸ்வர் குற்றம் சாட்டியுள்ளார். பாலியல் குற்றச்சாட்டுக்குள்ளான மத சார்பற்ற ஜனதா தளம் எம்பி பிரஜ்வாலின் பாஸ்போர்ட்டை முடக்கி, அவரை இந்தியா கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கர்நாடக அரசு வலியுறுத்தியிருந்தது. இந்நிலையில், இதில் மத்திய அரசு அலட்சியம் காட்டுவதாக
கர்நாடக அரசு அதிருப்தி தெரிவித்துள்ளது.
தினேஷ் கார்த்திக்கின் தைரியமும், நேர்மையும் எனக்கு மிகவும் பிடிக்கும் என விராட் கோலி நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார். நேர்காணல் ஒன்றில் பேசிய அவர், 2022ஆம் ஆண்டு தான் சரியாக விளையாடாததால் தன்னம்பிக்கை இழந்து காணப்பட்டதாகவும், அப்போது தினேஷ் கார்த்திக் தன்னுடன் 2 முறை அமர்ந்து மிகவும் நேர்மையான விளக்கம் கொடுத்ததாகவும் கூறினார். மேலும், அவர் மனதில் தோன்றுவதை வெளிப்படையாக பேசுபவர் எனப் பாராட்டினார்.
காவி உடை திருவள்ளுவர் சர்ச்சையைத் தொடர்ந்து ஆளுநர் மாளிகைக்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. திருவள்ளுவர் தினம் என்ற பெயரில் காவி வண்ணத்தில் திருவள்ளுவர் படத்துடன் கூடிய அழைப்பிதழை ஆளுநர் மாளிகை வெளியிட்டிருந்தது. இதற்கு திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்திருந்தன. இந்நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அங்கு அதிக எண்ணிக்கையில் போலீஸ் குவிக்கப்பட்டுள்ளனர்.
புதுச்சேரியில் என்ஆர் காங்கிரஸ், பாஜக கூட்டணி அரசு ஆட்சியில் உள்ளது. இந்நிலையில் துணைநிலை ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன், கம்பன் விழாவில் பேசியபோது, சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளார். இதேபோல மருத்துவக் கல்லூரி விழாவில் பேசியபோது, புதுச்சேரியில் கஞ்சா புழக்கம் அதிகரித்து விட்டதாகப் பேசினார். இந்த பேச்சுக்களால் பாஜக மீது முதல்வர் ரங்கசாமி அதிருப்தி அடைந்திருப்பதாகக் கூறப்படுகிறது.
ஜி.வி.பிரகாஷ், காயத்ரி ஷங்கர் நடித்துள்ள ‘இடி முழக்கம்’ திரைப்படம், வாஷிங்டனில் நடைபெறும் 50ஆவது சியாட்டில் திரைப்பட விழாவிற்கு தேர்வாகியுள்ளது. சீனு ராமசாமி இயக்கிய இப்படம், ஏற்கெனவே புனேவில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவிற்கு தேர்வானது. மதுரையை மையமாகக் கொண்டு உருவான இப்படமானது, நீண்ட நாட்களாக திரைக்கு வராமலே உள்ளது. இப்படத்திற்கு, என்.ஆர்.ரகுநாதன் இசையமைக்க, வைரமுத்து வரிகள் எழுதியுள்ளார்.
Sorry, no posts matched your criteria.