India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
2015ஆம் ஆண்டு இதே நாளில், மும்பை அணி 2ஆவது முறையாக ஐபிஎல் கோப்பையைக் கைப்பற்றியது. அந்த சீசனில், தொடர் தோல்விகளை சந்தித்து வந்த MI அணி, அடுத்த 10 போட்டிகளில் 9இல் வெற்றி பெற்று அதிரடியான கம்பேக்கை கொடுத்தது. இறுதிப்போட்டியில், 203 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய CSK அணியை, தங்களது அசாதாரண பந்துவீச்சால் 161 ரன்களுக்குள் சுருட்டி 41 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
சுயநலக்காரர்கள், சந்தர்ப்பவாதிகளால் கட்டமைக்கப்பட்டது தான் இந்தியா கூட்டணி என்று பிரதமர் மோடி கடுமையாக விமர்சித்துள்ளார். வகுப்புவாதம், ஜாதி பெருமை, குடும்ப நலன் பேசுபவர்களாக இந்தியா கூட்டணி தலைவர்கள் உள்ளனர். குறிப்பாக இந்தியத் தாயை அவமதிக்கும் செயலை காங்கிரஸ் கட்சி தொடர்ந்து செய்கிறது என விமர்சித்த அவர், வலுவான இந்தியாவை கட்டமைக்க மக்களின் ஆசிர்வாதம் எனக்கு தேவைப்படுகிறது எனத் தெரிவித்தார்.
பசியோடு இருப்போருக்கு கோபம் அதிகம் வருவதை பார்த்திருப்போம். இதற்கு பல காரணங்களை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். பசியோடு இருக்கையில் ரத்தத்தில் சர்க்கரை அளவு குறைவதால், ஹார்மோன் அட்ரிலின், கார்டிசோல் சுரந்து அதை சரி செய்யும், அப்போது எரிச்சல் ஏற்படும் என அவர்கள் கூறுகின்றனர். சர்க்கரை அளவு குறைகையில் மூளை நியூரோபெப்டைட் ஒய் ரசாயனத்தை சுரப்பதாலும் கோபம் வருவதாக தெரிவிக்கின்றனர்.
தமிழ்நாட்டில் 1 முதல் 12ஆம் வகுப்பு வரை ஜூன் 6ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. தேர்தல் முடிவு, வெப்பம் அதிகரிப்பு காரணமாக ஜூன் 10ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஜூன் 4ஆம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியான உடன் ஜூன் 6ஆம் தேதியே பள்ளிகள் திறக்கப்படவுள்ளன.
டி20 உலகக்கோப்பையை வெல்லும் அளவிற்கு இந்திய அணி பலமானதாக இல்லை என இங்கிலாந்து முன்னாள் வீரர் டேவிட் லாயிடு விமர்சித்துள்ளார். இந்திய அணியில் தற்போது இடம் பெற்றிருக்கும் வீரர்கள் அனைவரும் தரமான வீரர்கள் என்றாலும், அவர்கள் பேட்டிங் அல்லது பந்துவீச்சில் ரிஸ்க் எடுக்க யாருமே தயாராக இல்லை எனக் கூறினார். உலகக் கோப்பைக்கான இந்திய அணியை பல முன்னாள் வீரர்கள் பாராட்டிய நிலையில், இவர் விமர்சித்துள்ளார்.
சிலந்தி ஆற்றில் தடுப்பணை கட்டும் கேரளாவின் முடிவை ஏற்க முடியாது என்று முத்தரசன் தெரிவித்துள்ளார். தடுப்பணை குறித்தத் தகவல்களை தமிழக அரசிடம் கேரளா முன்பே கொடுத்திருக்க
வேண்டும் என்று கூறிய அவர், பிரச்னை பேசி தீர்க்கப்படும் வரை அணை கட்டும் பணியை நிறுத்தி வைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். தடுப்பணை பணிகளை நிறுத்தி வைக்க வேண்டும் என ஏற்கெனவே தமிழக முதல்வர், கேரள அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
வாக்குப்பதிவு தொடர்பான படிவம் 17சி இல் உள்ள தரவுகளை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யவும், சாவடிகள் வாரியாகப் பதிவான வாக்குப்பதிவு விகிதத்தை வெளியிடக் கோரியும் உச்சநீதிமன்றத்தில் மனு தொடரப்பட்டிருந்தது. இதை விசாரித்த உச்சநீதிமன்றம், தற்போது அதுதொடர்பான இடைக்கால உத்தரவை தங்களால் பிறப்பிக்க முடியாது என்றும், தேர்தல் செயல்பாடுகளில் நீதிமன்றம் குறுக்கிட விரும்பவில்லை என்றும் தெரிவித்தது.
ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டால், புயல் உருவாகக் கூடிய வானிலை சூழல் ஏற்பட்டுள்ளதாக அர்த்தம். துறைமுகங்கள் பாதிக்கப்படாமல், பலமாக காற்று வீசும் என்றும் பொருள். 2ஆம் எண் கூண்டு, யல் உருவானதைக் குறிக்கும். இந்த எச்சரிக்கையைக் கண்டால் கப்பல்கள் துறைமுகத்தை விட்டு வெளியேற்ற வேண்டும். 3ஆம் எண் கூண்டு, திடீர் காற்றோடு மழை பொழியும், வானிலையால் துறைமுகம் அச்சுறுத்தப்பட்டுள்ளது என பொருள்.
தொடர் மழை காரணமாக வரத்து குறைந்ததால் ₹340க்கு விற்பனையான ஒரு கிலோ பூண்டு ₹400ஆக அதிகரித்துள்ளது. இஞ்சி ₹220, பீன்ஸ் ₹215, பீட்ரூட் ₹80, பெரிய வெங்காயம் ₹45, கத்திரிக்காய் ₹80, முட்டைகோஸ் ₹50 கேரட் ₹90 முருங்கைக்காய் ₹80, உருளைக்கிழங்கு ₹85, தக்காளி ₹50க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், ஆப்பிள் ₹260, திராட்சை ₹120, மாம்பழம் ₹200, மாதுளை ₹250, கொய்யா பழம் ₹100க்கும் விற்பனையாகிறது.
கார்த்திக் நடிக்கும் 27ஆவது படத்தின் அப்டேட்டுகள் இன்று மாலை 5 மற்றும் 7 மணிக்கு வெளியாகவுள்ளதாகப் படக்குழு அறிவித்துள்ளது. பிரேம் குமார் இயக்கும் இந்தப் படத்தில் கார்த்திக்கிற்கு ஜோடியாக ஜோதிகாவும், முக்கிய கதாபாத்திரத்தில் அரவிந்த் சாமியும் நடிக்கின்றனர். படத்தின் பெயர் ‘மெய்யழகன்’ என்று வைக்கப்பட்டுள்ள நிலையில், இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Sorry, no posts matched your criteria.