India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பாஜக அதிக வாக்குகள் வாங்கினால் கட்சியை கலைத்து விடுவதாக சீமான் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கூட்டணி கட்சிகளின் வாக்குகள் இல்லாமல், பாஜக மட்டும் நாம் தமிழர் கட்சியை விட அதிக வாக்குகளை வாங்கினால், கட்சியை கலைத்துவிடுவதாக அவர் சவால் விடுத்துள்ளார். கடந்த MP தேர்தலில் 37 தொகுதிகளில் போட்டியிட்ட நாதக 3.90% வாக்குகளும், அதிமுக கூட்டணியில் 5 தொகுதிகளில் போட்டியிட்ட பாஜக 3.62% வாக்குகளும் பெற்றது.
‘குட் பேட் அக்லி’ படத்தின் படப்பிடிப்பை அக்டோபர் மாதத்திற்குள் முடிக்க, படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு, தற்போது ஹைதராபாத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதன்பின், ‘விடாமுயற்சி’ படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டு, அடுத்தகட்ட படப்பிடிப்பை ஜப்பானில் நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
SRH-RR இடையேயான Qualifier 2 போட்டி, இன்றிரவு 7.30 மணிக்கு சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற உள்ளது. இப்போட்டிக்கான டிக்கெட் விற்பனை நேற்று தொடங்கிய நிலையில், பெரும்பாலான டிக்கெட்டுகள் விற்கப்படாமலே உள்ளன. கிரிக்கெட்டை கொண்டாடும் சென்னை , ஐபிஎல் ப்ளே-ஆஃப் போட்டியை காண ஆர்வம் காட்டாதது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு CSK அணி ப்ளே-ஆஃப் சுற்றுக்கு தேர்வாகததும் ஒரு முக்கிய காரணமாகக் கருதப்படுகிறது.
வங்கக்கடலில் நாளை புயல் உருவாவதால் ஆழ்கடலுக்கு சென்ற மீனவர்கள் கரைதிரும்பும்படி வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. புயல் உருவாவதையொட்டி மத்திய கிழக்கு வங்கக்கடல் உள்ளிட்ட பகுதிகளில் இன்று சூறாவளி மணிக்கு 50- 70 கி.மீ. வேகத்திலும், நாளை 60- 135 கி.மீ. வேகத்திலும், 26, 27 தேதிகளில் 90-135 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும் என்றும் வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் இன்று மதியத்திற்கு மேல் குமரி, நெல்லை, தென்காசி, விருதுநகர், தேனி, மதுரை, திண்டுக்கல், திருப்பூர், கோவை, நீலகிரி ஆகிய 10 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. அதே நேரம், வங்கக்கடலில் உருவான தாழ்வு மண்டலம் வடகிழக்கு திசையில் நகர்வதால், இன்று முதல் மே 28ஆம் தேதி வரை தமிழகத்தில் வெப்பநிலை (3 டிகிரி செல்சியஸ் வரை) படிப்படியாக உயரக்கூடும் எனவும் தெரிவித்துள்ளது.
நடிகர் விஜய்யின் பிறந்தநாளிற்கு இன்னும் ஒருமாதம் மட்டுமே உள்ள நிலையில், ரசிகர்கள் X பக்கத்தில் டிரெண்டிங் செய்து வருகின்றனர். வரும் ஜூன் 22ஆம் தேதி 50ஆவது பிறந்தநாள் காணும் விஜய்க்கு வாழ்த்துகள் தெரிவித்து, #VIJAYBdayFestin1Month எனும் ஹேஷ்டேக்கை டிரெண்ட் செய்து வருகின்றனர். இந்த ஹேஷ்டேக் இந்திய அளவில் முதலிடத்தில் உள்ளது. அன்று GOAT படத்தின் அப்டேட் வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
குற்றச்சாட்டுக்கு பயந்து முதல்வர் பதவியை ராஜினமா செய்தால் தவறான முன்னுதாரணமாகிவிடும் என டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். பணம் வாங்கிக் கொண்டு எந்த தவறையும் தான் செய்யவில்லை என்று கூறிய அவர், ஒருவேளை தவறு செய்திருந்தால் பாஜகவுக்கு சென்று தவறுகளை மறைத்திருக்கலாமே என்றார். எங்கெல்லாம் பாஜக தோற்கிறதோ அங்கெல்லாம் மாநில முதல்வர்களை பாஜக கைது செய்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
தினேஷ் கார்த்திக் கிரிக்கெட்டை விட்டுக் கொடுத்ததில்லை என அவரது மனைவி தீபிகா கண்ணீர் மல்க கூறினார். போட்டியில் சிறப்பாக விளையாடவில்லை என்றால், அவரை அணியில் இருந்து நீக்கிவிடுவார்கள். வீட்டில் 2, 3 நாள்கள் ஓய்வெடுத்து விட்டு மீண்டும் பயிற்சியைத் தொடங்கி விடுவார். நானும் ஒரு விளையாட்டு வீரர் தான், ஆனால், அவரிடத்தில் நான் இருந்திருந்தால் நிச்சயம் கிரிக்கெட்டை விட்டிருப்பேன்” எனத் தெரிவித்தார்.
ஆண்டுதோறும் மே 24ஆம் தேதி உலக சகோதரர்கள் தினம் கடைபிடிக்கப்படுகிறது. 2005ஆம் ஆண்டு அமெரிக்காவின் அலபாமா மாகாணத்தைச் சேர்ந்த சி.டேனியல் ரோட்ஸ் தான், முதல்முதலாக சகோதரர்கள் தினத்தை உருவாக்கினார். இது சகோதரர்களுக்கு இடையேயான பிணைப்பை மேலும் வலுப்படுத்தவும், சிறப்பாக்கவும் உதவும். சகோதரர், சகோதரிகளைக் கடந்து, உங்கள் நண்பர்களுக்கும் சகோதரர்கள் தின வாழ்த்துக்களைத் தெரிவித்து அன்பை வெளிப்படுத்துங்கள்.
கோடை விடுமுறை முடிந்து ஜூன் 6ம் தேதி பள்ளிகள் திறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், பள்ளிகளில் தூய்மைப் பணிகளை மேற்கொள்ளவும், கழிப்பறைகள் சரியாக இருக்கிறதா, தண்ணீர் தொட்டிகள் முறையாகப் பராமரிக்கப்பட்டுள்ளதா, வகுப்பறைகள் பாடம் நடத்த ஏதுவாக இருக்கிறதா உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்ய மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.