news

News May 24, 2024

திருப்பதியில் ஜூன் 30 வரை விஐபி தரிசனம் ரத்து

image

கோடை விடுமுறையையொட்டி திருப்பதி கோயிலில் பக்தர்கள் கூட்டம் குவிந்து வருகிறது. இதன் காரணமாக, பக்தர்கள் நீண்ட நேரம் வரிசையில் நின்று தரிசனம் செய்து வருகின்றனர். இந்நிலையில், கூட்ட நெரிசலைத் தவிர்ப்பதற்காக ஜூன் 30ஆம் தேதி வரை வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய கிழமைகளில் VIP தரிசனம் ரத்து செய்யப்படுவதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும், எந்தவித பரிந்துரை கடிதங்களும் ஏற்கப்படாது எனவும் தெரிவித்துள்ளது.

News May 24, 2024

மோடி மீது இந்து மக்கள் அதிருப்தி: ரவிக்குமார் எம்.பி

image

இந்தியாவில் ஆட்சி மாற்றம் நிகழ்வதற்கான அறிகுறிகள் தெளிவாக உள்ளதாக விசிக எம்.பி ரவிக்குமார் தெரிவித்துள்ளார். தன்னை கடவுளின் அவதாரம் என்று சொல்லும் அளவுக்கு பிரதமர் மோடி பிதற்ற ஆரம்பித்துள்ளதாக விமர்சித்த அவர், இந்து மக்கள் மத்தியில் பிரதமரின் பேச்சு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக கூறினார். 6ஆம் கட்ட தேர்தல் நடைபெறும் 57 தொகுதிகளில், பாஜக 15 இடங்களில் கூட வெற்றி பெறாது என்றும் அவர் சூளுரைத்தார்.

News May 24, 2024

ராஜேஷ் தாஸ் ஜாமினில் விடுவிப்பு

image

முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ், சொந்த ஜாமினில் விடுவிக்கப்பட்டார். முன்னாள் மனைவி பீலா வீட்டின் காவலாளியை தாக்கிய புகாரில் இன்று காலை அவர் கைது செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து திருப்போரூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவருக்கு, ஜாமின் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார். முன்னதாக நீதிமன்றத்திற்கு செல்லும் முன் ராஜேஷ் தாஸுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

News May 24, 2024

பாக்., ஊடகவியலாளருக்கு ரெய்னா பதிலடி

image

ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024 தொடருக்கான தூதுவராக ஷாஹித் அப்ரிடி நியமிக்கப்பட்டுள்ளதை குறிப்பிட்டு, சுரேஷ் ரெய்னாவை பாக்., ஊடகவியலாளர் ஒருவர் தனது X பக்கத்தில் கிண்டல் செய்திருந்தார். அதற்கு பதிலளித்துள்ள ரெய்னா, தான் ஐசிசி தூதுவராக இல்லாவிட்டாலும், தன் வீட்டில் 2011 உலகக்கோப்பை இருப்பதாகவும், மொஹாலியில் நடந்த அரையிறுதிப் போட்டியில் தோற்றது தங்களுக்கு ஞாபகம் இருக்கும் எனவும் பதிலடி கொடுத்தார்.

News May 24, 2024

கார்த்திக் குறித்து பேச சுசித்ராவுக்கு தடை

image

நடிகர் கார்த்திக் குமார் குறித்து அவதூறு கருத்துகளை தெரிவிக்க பாடகி சுசித்ராவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. யூடியூப் சேனல் ஒன்றிற்கு பேட்டியளித்தபோது, கார்த்திக் பற்றி சுசித்ரா அவதூறாகப் பேசியதாக புகார் எழுந்தது. இதையடுத்து, தனது நற்பெயருக்கு களங்கம் விளைவிப்பதாகக் கூறி கார்த்திக் தொடர்ந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட், இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது.

News May 24, 2024

பாஜக பெரும்பான்மையை கடந்துவிட்டது: மோடி

image

இளைஞர்கள், பெண்களின் பிரதிநிதியாக கங்கனா ரனாவத் தேர்தலில் களம் காண்பதாக பிரதமர் தெரிவித்துள்ளார். மண்டி தொகுதியில் கங்கனாவை ஆதரித்து பிரசாரம் செய்த அவர், 5 கட்டத் தேர்தலில் பாஜக பெரும்பான்மையை கடந்து விட்டதாகவும், இமாச்சலில் பெறும் வெற்றி கேக் மீது செர்ரி பழத்தை வைப்பதற்கு ஒப்பானது என்றார். மக்களின் வாக்குகள் 500 ஆண்டுகால ஏக்கத்தை தீர்த்து, அயோத்தியில் கோயில் கட்ட வைத்தாகவும் அவர் தெரிவித்தார்.

News May 24, 2024

பாட புத்தகங்களை பெற்றுச் செல்ல உத்தரவு

image

பள்ளி மாணவர்களுக்கு தேவையான பாட புத்தகங்களை பெற்றுச் செல்ல தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பான சுற்றறிக்கையில், மாவட்டந்தோறும் உள்ள குடோன்களுக்கு, தலைமை ஆசிரியர்கள் நேரில் சென்று உரிய ஆவணங்களை சமர்ப்பித்து, தேவையான அளவு புத்தகங்களை எடுத்துச் செல்லலாம் எனக் கூறப்பட்டுள்ளது. மேலும், மழையால் புத்தகங்கள் நனையாமல் பார்த்துக் கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News May 24, 2024

விராட் கோலியை விமர்சித்தாரா ராயுடு?

image

அரையிறுதியில் தோல்வியடைந்த RCB குறித்து CSK முன்னாள் வீரர் அம்பத்தி ராயுடு X தளத்தில் பதிவிட்டுள்ளது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. RCBக்கு ஆதரவளித்துவரும் ரசிகர்களுக்கு வாழ்த்து தெரிவித்த அவர், தனிப்பட்ட சாதனைகளுக்காக விளையாடாமல் அணிக்காக விளையாடியிருந்தால், RCB பல கோப்பைகளை வென்றிருக்கும் என கூறியுள்ளார். இதையடுத்து அவர், மறைமுகமாக கோலியை விமர்சித்ததாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

News May 24, 2024

நமது பொருளாதாரத்தை உயர்த்த முதலீடு அவசியம்

image

சேமிப்பை பல்வேறு வழிகளில் முதலீடு செய்வதன் மூலம் நமது பொருளாதாரத்தை உயர்த்த முடியும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். சிலர் FD, RD மூலம் பணத்தைப் பாதுகாப்பாக சேமிக்க நினைப்பதாகவும், ஆனால், அதில் வரும் வட்டியை பணவீக்கமே விழுங்கிவிடும் எனவும் கூறுகின்றனர். பணவீக்கத்தை மிஞ்சும் படி, ஆண்டுக்கு குறைந்தது 10% ரிட்டர்ன் தரும் முதலீட்டை மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும் எனவும் அவர்கள் அறிவுறுத்துகின்றனர்.

News May 24, 2024

பாஜக அவதூறுகளை அள்ளி வீசுகிறது: நவீன் பட்நாயக்

image

பொய் சொல்லவும் ஒரு எல்லை இருப்பதாக பாஜகவை ஒடிஷா முதல்வர் நவீன் பட்நாயக் விமர்சித்துள்ளார். நல்ல உடல் நலத்துடன் அனைத்து தொகுதிகளிலும் பரப்புரை செய்துவரும் தன் மீது, பாஜக அவதூறு குற்றச்சாட்டுகளை அள்ளி வீசுவதாக அவர் குற்றம் சாட்டினார். முன்னதாக, நவீன் பட்நாயக் சுயமாக முடிவெடுக்கவில்லை என்றும், வி.கே.பாண்டின் அவரை இயக்குவதாகவும் பாஜக மூத்த தலைவர்கள் அவரை விமர்சித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!