India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியர்கள், காவல்துறையினர் இடையிலான மோதல் போக்கை தடுத்து நிறுத்துமாறு முதல்வர் ஸ்டாலினுக்கு அரசுப் போக்குவரத்துக் கழகம் கடிதம் எழுதியுள்ளது. அரசுப் பேருந்தில் சென்ற காவலரிடம் டிக்கெட் எடுக்குமாறு நடத்துனர் வலியுறுத்திய நிகழ்வு பூதாகரமானது. இதனால், விதிகளை மீறும் அரசுப் பேருந்துகளுக்கு போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்து வருவது குறிப்பிடத்தக்கது.
கிர்கிஸ்தான் தலைநகர் பிஷ்கேக்கில் சர்வதேச மாணவர்களைக் குறிவைத்து ஒரு கும்பல் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனைத் தொடர்ந்து, இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம் போன்ற நாடுகள், தங்கள் நாட்டைச் சேர்ந்த மாணவர்கள் பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தியுள்ளன. இந்நிலையில், பாகிஸ்தான் உள்ளிட்ட ஆசிய நாடுகளை சேர்ந்த நூற்றுக்கணக்கான மாணவர்கள் அச்சத்தில் கிர்கிஸ்தானை விட்டு தொடர்ந்து வெளியேறி வருகின்றனர்.
ஜூன் 4ஆம் தேதி இந்தியாவில் நிச்சயம் ஆட்சி மாற்றம் நிகழும் என காங்கிரஸ் எம்.பி சசி தரூர் கூறியுள்ளார். எத்தனை தொகுதிகளில் I.N.D.I.A கூட்டணி வெல்லும் என்று தற்போது கூற முடியாது என்ற அவர், கூட்டணிக்கு நாடு முழுவதும் ஆதரவு அலை வீசி வருவதாக தெரிவித்தார். பாஜக வேட்பாளர்கள் தங்களின் உற்சாகத்தை இழந்துள்ளதாகவும், அது தேர்தல் முடிவில் நிச்சயம் எதிரொலிக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் ஹைதராபாத் அணி 6 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 68 ரன்கள் எடுத்துள்ளது. அதிரடியாக ஆடிய அபிஷேக் ஷர்மா 12, திரிபாதி 32 ரன்களிலும், மார்க்ரம் 1 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். சிறப்பாக பந்துவீசிய போல்ட் 3 விக்கெட்டுகளையும் தூக்கினார். பொறுமையாக ஆடிவரும் டிராவில் ஹெட் 16*, க்ளாஸன் 1* ரன்களுடன் களத்தில் உள்ளனர்.
பாஜக 400 இடங்களை பெற வாய்ப்பு இல்லை என கார்கே தெரிவித்துள்ளார். கர்நாடகாவில், காங்கிரஸ் 4 தொகுதிகளில் வெல்லும் என பாஜக அமைச்சர் கூறுவதாக தெரிவித்த அவர், கடந்த 2019இல் அங்கு 1 தொகுதியில் வென்ற காங்கிரஸ், அதிக மாநிலங்களில் வென்றால் பாஜக எப்படி 400 தொகுதிகளை பெறும் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். தமிழகம், கேரளா உள்ளிட்ட இடங்களில் காங்கிரஸ் கூட்டணி அதிக இடங்களில் நிச்சயம் வெல்லும் எனவும் கூறினார்.
பூரி ஜெகன்நாதர் கோயில் சாவி விவகாரத்தில் பிரதமர் மோடி தமிழர்களை திருடர்கள் என பொய் பழி சுமத்துவதாக முதல்வர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்திருந்தார். இந்நிலையில், பிரதமர் மோடி பேசியதை புரிந்துகொள்ளாமல், முதல்வர் தவறான விஷயத்தை திணிக்க முயற்சிப்பதாக எல்.முருகன் விமர்சித்துள்ளார். மேலும், இந்த விவகாரத்தில் பிரதமர் மோடி எந்த இடத்திலும், தமிழ்நாட்டையே, தமிழர்களையோ குறிப்பிடவில்லை எனவும் அவர் கூறினார்.
அரசுப் பேருந்தில் காவலரிடம் டிக்கெட் எடுக்க கோரிய சம்பவம் வைரலானதை தொடர்ந்து, விதிகளை மீறும் அரசுப் பேருந்துகளுக்கு போக்குவரத்து காவலர்கள் அபராதம் விதிப்பது அதிகரித்துள்ளது. இந்நிலையில், அரசுப் பேருந்துகளில் காவலர்கள் கட்டணம் இன்றி பயணம் செய்யும் திட்டத்தின் நிலை குறித்து தேர்தல் நன்னடத்தை விதிகள் முடிந்த பிறகு அதிகாரிகளுடன் ஆலோசித்து தெளிவுபடுத்துவதாக அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
சிலந்தி ஆற்றின் நடுவே கேரளா தடுப்பணை கட்டுவதற்கு தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் தடை விதித்துள்ளது. எந்த கட்டுமானமாக இருந்தாலும், உரிய அனுமதியை பெறாமல் மேற்கொள்ள முடியாது என்று தெரிவித்துள்ள பசுமை தீர்ப்பாயம், அனுமதி பெற்றிருந்தால் அதனை தங்களிடம் சமர்ப்பிக்கும் படியும் உத்தரவிட்டுள்ளது. உள்ளூர் மக்களின் தண்ணீர் தேவைக்காகவே தடுப்பணை கட்டுவதாக கூறிய கேரளாவின் வாதத்தை பசுமை தீர்ப்பாயம் நிராகரித்தது.
சவுக்கு சங்கர் வழக்கில் அதிகாரமிக்க சிலர் அழுத்தம் கொடுத்ததாக உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். அழுத்தம் காரணமாகவே சவுக்கு சங்கர் மீதான இறுதி விசாரணை இன்று நடைபெற்றதாவும் அவர் தெரிவித்தார். யார் அழுத்தம் கொடுத்தார்கள்? அவர்களின் பெயர் உள்ளிட்ட எதையும் அவர் கூறவில்லை. முன்னதாக, சவுக்கின் மீதான குண்டர் சட்டத்தை அவர் ரத்து செய்த நிலையில், மற்றொரு நீதிபதி அதை ஏற்கவில்லை.
குண்டாஸை ரத்து செய்யும்படி சவுக்கு சங்கர் தொடர்ந்த வழக்கில் இரு நீதிபதிகள் அமர்வு மாறுபட்ட தீர்ப்பை வழங்கியுள்ளது. நீதிபதி ஜி.ஆர் சுவாமிநாதன் குண்டர் தடுப்பு சட்டம் தவறாக பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து அதனை ரத்து செய்தார். மற்றொரு நீதிபதியான பாலாஜி, குண்டர் சட்டத்தை ரத்து செய்ய மறுத்துவிட்டார். இதனால், இந்த வழக்கை 3ஆவது நீதிபதி விசாரிக்க தலைமை நீதிபதிக்கு இருவரும் பரிந்துரை செய்துள்ளனர்.
Sorry, no posts matched your criteria.