news

News May 24, 2024

புதிய வரலாறு படைப்பாரா நவீன் பட்நாயக்?

image

ஒடிஷா தேர்தலில் நவீன் பட்நாயக் வென்றால் இந்தியாவின் நீண்ட கால முதல்வர் என்ற சாதனையை அவர் படைப்பார். இதுவரை 5 முறை ஆட்சி அமைத்துள்ள அவர், இதுவரை முதல்வராக 24 வருடம் 79 நாள்கள் இருந்துள்ளார். சிக்கிம் முதல்வராக 5 முறை இருந்துள்ள பவன் குமார் சாம்லிங், முதல்வராக 24 வருடம் 165 நாள்கள் இருந்துள்ளார். இந்த முறை நவீன் மீண்டும் வெற்றி பெற்றால், அந்த சாதனையை அடுத்து சில மாதங்களில் அவர் முறியடிப்பார்.

News May 24, 2024

வரலாற்று உச்சத்தில் அந்நியச் செலாவணி கையிருப்பு

image

இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு தொடர்ந்து 3ஆவது வாரமாக அதிகரித்து, வரலாற்று உச்சத்தை பதிவு செய்துள்ளது. அதன்படி, $4.54 பில்லியன் அதிகரித்து, $648.7 பில்லியன் என்ற உச்சத்தை எட்டியுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. தங்கத்தின் கையிருப்பு $1.24 பில்லியன் அதிகரித்து, $57.19 பில்லியனாக உள்ளது. Special Drawing Rights பொறுத்தமட்டில், $113 மில்லியன் அதிகரித்து, $18.16 பில்லியனாக உள்ளது.

News May 24, 2024

புனே கார் விபத்தில் ஓட்டுநர் பகீர் வாக்குமூலம்

image

புனே கார் விபத்தில் தம்பதி உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனிடையே, சிறுவன் காரை இயக்கவில்லை, அவரது வீட்டில் பணிபுரியும் டிரைவர்தான் காரை ஓட்டியதாகத் தகவல்கள் வெளியானது. இந்நிலையில், விலைமதிப்பற்ற பரிசைத் தருவதாகக் கூறி சிறுவனின் தந்தை தன்னிடம் பேரம் பேசி குற்றத்தை ஒப்புக்கொள்ள வைத்ததாக போலீசார் விசாரணையில் ஓட்டுநர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

News May 24, 2024

ராஜஸ்தான் அணிக்கு 176 ரன்கள் இலக்கு

image

ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 175 ரன்கள் எடுத்துள்ளது. சிறப்பாக ஆடிய க்ளாஸன் 50, டிராவிஸ் ஹெட் 34, திரிபாதி 37 ரன்கள் எடுத்தனர். RR அணி சார்பில் சிறப்பாக பந்துவீசிய சந்தீப் ஷர்மா 2, போல்ட், ஆவேஷ் கான் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். இதையடுத்து RR அணிக்கு 176 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

News May 24, 2024

சம்மன் வந்தால் பதிலளிப்பேன்: அப்பாவு

image

ஜெயக்குமார் மரணம் தொடர்பான வழக்கில், சம்மன் வந்தால் பதிலளிப்பேன் என சபாநாயகர் அப்பாவு கூறியுள்ளார். நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார், சில நாள்களுக்கு முன் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இறப்பதற்கு முன், அவர் எழுதிய கடிதத்தில் சிலரது பெயர்கள் இடம் பெற்றிருந்தது. அதன் அடிப்படையில், அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News May 24, 2024

சிலந்தி ஆற்றில் தடுப்பணை: சிவ்தாஸ் மீனா ஆலோசனை

image

தமிழக நீர்வளத்துறை அதிகாரிகளுடன், தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா ஆலோசனை மேற்கொண்டார். சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை மற்றும் முல்லைப் பெரியாறு பகுதியில் புதிய அணை கட்ட கேரள அரசு தீவிரம் காட்டி வருகிறது. இந்த விவகாரத்தில் எடுக்க வேண்டிய மேல் நடவடிக்கை குறித்து, அதிகாரிகளுடன் அவர் ஆலோசனை நடத்தினார். முன்னதாக கேரளாவின் தடுப்பணை கட்டும் முடிவுக்கு பசுமைத் தீர்ப்பாயம் தடை விதித்துள்ளது.

News May 24, 2024

ஒன்றரை வயதில் கின்னஸ் சாதனையை படைத்த சிறுவன்

image

ஆப்பிரிக்காவின் கானாவைச் சேர்ந்த ஏஸ் லியாம் நானா சாம் அன்க்ரா என்ற சிறுவன் இளம் ஓவியர் என்ற உலக கின்னர் சாதனை படைத்து அசத்தியுள்ளார். ஏராளமான ஓவியங்களை வரைந்துள்ள அவர், 9 ஓவியங்களை கண்காட்சியில் விற்றுள்ளார். ஓவியம் மீதான ஏஸ் லியாமின் ஆர்வத்தை 6 மாத குழந்தையாக இருந்தபோதே கண்டறிந்ததாக, அவரது தயார் தெரிவித்துள்ளார். ஏஸ் லியாமின் தற்போதைய வயது ஒரு வருடம் 152 நாள்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

News May 24, 2024

பிரசாந்த் கிஷோர் பாஜகவின் ஏஜென்ட்: அகிலேஷ்

image

தேர்தல் வியூக வகுப்பாளரான பிரசாந்த் கிஷோர், பாஜகவின் ஏஜென்ட் என ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ் விமர்சித்துள்ளார். சமீப காலமாக பாஜகவிற்கு ஆதரவாக பிரசாந்த் கிஷோர் கருத்து தெரிவிப்பது குறித்து பேசிய அவர், தேர்தல் வியூகத்தின் ஒரு பகுதியாக பிரசாந்த் கிஷோருக்கு பாஜக நிதியளிப்பதாக குற்றம் சாட்டினார். அடுத்தடுத்த கட்ட தேர்தலில் பாஜக தோற்று வருவதால், பிரசாந்த் கிஷோரின் உதவியை நாடியுள்ளதாக அவர் தெரிவித்தார்.

News May 24, 2024

ஜூன் மாதம் ₹5000 வழங்குகிறார் விஜய்?

image

10, +2 பொதுத் தேர்வில் தொகுதி வாரியாக முதல் 3 இடங்களை பிடித்த மாணவர்களுக்கு, நடிகர் விஜய் தலா ₹5000 பரிசு வழங்க உள்ளார். இது தொடர்பாக தவெக நிர்வாகிகள் கூறும்போது, மாணவர்களின் பட்டியல் தயாராக உள்ளதாகவும், ஜூன் மாதம் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர். கடந்த ஆண்டு 10, +2 பொதுத் தேர்வில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவர்களுக்கு, நடிகர் விஜய் ₹5000 வழங்கியது குறிப்பிடத்தக்கது.

News May 24, 2024

மோதல் போக்கை தடுத்து நிறுத்துங்கள்

image

அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியர்கள், காவல்துறையினர் இடையிலான மோதல் போக்கை தடுத்து நிறுத்துமாறு முதல்வர் ஸ்டாலினுக்கு அரசுப் போக்குவரத்துக் கழகம் கடிதம் எழுதியுள்ளது. அரசுப் பேருந்தில் சென்ற காவலரிடம் டிக்கெட் எடுக்குமாறு நடத்துனர் வலியுறுத்திய நிகழ்வு பூதாகரமானது. இதனால், விதிகளை மீறும் அரசுப் பேருந்துகளுக்கு போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்து வருவது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!