news

News May 28, 2024

இருசக்கர வாகனங்களுக்காக சாலைகளில் தனி பாதை?

image

இந்தியாவில் நடக்கும் சாலை விபத்து, உயிரிழப்புகளுக்கு 44% இருசக்கர வாகன ஓட்டிகளும், 17% சாலை விபத்து, 19% உயிரிழப்புக்கு பாதசாரிகளும் காரணமாக கூறப்படுகிறது. இதற்குத் தீர்வு காண மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம், மாநில, கிராமப்புற சாலைகளில் இருசக்கர வாகனங்களுக்கு தனிப் பாதை, பாதசாரிகளுக்கு நடை மேம்பாலம், சுரங்கப் பாதை அமைக்க SAFE திட்டம் வகுத்து கருத்து கேட்டு வருகிறது.

News May 28, 2024

அதிமுகவில் கலகம் வெடிக்க போகிறது

image

முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் ஆதரவாளராக அறியப்படும் பெங்களூரு புகழேந்தி, வார பத்திரிகை ஒன்றிற்கு பேட்டியளித்துள்ளார். அதில் அவர், மக்களவைத் தேர்தலில் அதிமுக ஓரிடத்தில் கூட வெற்றி பெறாது என்றும், அப்படி தோற்றால் இபிஎஸ் உடன் இருக்கும் 10 தலைவர்கள் கலகம் செய்ய காத்திருக்கிறார்கள் என்றும் கூறியுள்ளார். தேர்தல் முடிவு வந்ததும் அதிமுகவில் 100% பிரச்னை வெடிப்பது உறுதி என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

News May 28, 2024

பசி பிணி போக்க உறுதிமொழி ஏற்போம்!

image

உலகளவில் 820 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் நீண்டகாலப் பட்டினியால் வாடுவதாக ஐ.நா (FAO) அமைப்பின் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. உயிர்கொல்லி நோய்களால் ஆண்டுதோறும் இறப்போரின் எண்ணிக்கையை காட்டிலும், பசிப் பட்டினியால் ஏற்படும் மரணங்களே அதிகம். உலக நோயான பசிப் பட்டினியை ஒழிக்கவும், அதற்கு மூலாதாரமான வறுமைக்கு நிலையானத் தீர்வுகளைக் கொண்டுவரவும் உலக பட்டினி தினமான இன்று உறுதியேற்போம்!

News May 28, 2024

பன்னீர்செல்வத்தை மதிக்காத பாஜக; கண்டுகாெள்ளாத மோடி

image

மக்களவைத் தேர்தலில் மிகவும் குறைவாக ஒரு தொகுதியை மட்டும் ஓபிஎஸ் தரப்புக்கு பாஜக ஒதுக்கியது. ஓபிஎஸ்சை ஆதரித்து மோடி பிரசாரம் செய்யவில்லை. அவரைச் சந்திக்கவும் ஓபிஎஸ்சுக்கு நேரம் தரப்படவில்லை. அதேநேரத்தில் பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான பிரஜ்வாலை ஆதரித்து கர்நாடகாவில் மோடி பிரசாரம் செய்தார். இதைக்கண்ட ஓபிஎஸ் ஆதரவாளர்களான புகழேந்தி உள்ளிட்டோர் பாஜக மீது கடும் அதிருப்தியில் உள்ளனர்.

News May 28, 2024

மக்கள் சேவையை மறந்து சர்ச்சைக்கு வித்திட்ட காக்கிகள்

image

அரசுப் பேருந்தில் போலீஸ்காரர் டிக்கெட் எடுக்க மறுத்ததால் மூண்ட சர்ச்சை முடிவுக்கு வந்ததாக இருதரப்பும் அறிவித்தது. எனினும், பேருந்தில் வாக்குவாதம் நடந்தபோதும், பேருந்துகளுக்கு Traffic போலீஸ் அபராதம் விதித்தபோதும், பாதிக்கப்பட்டது மற்ற பயணிகள்தான். மக்கள் சேவகர்கள் என்பதை மறந்த 2 பேர் மீதும் நடவடிக்கை எடுக்காமல் சர்ச்சை எழுவதற்கு 2 துறைகளும் காரணமாகி விட்டதாக மக்களிடையே அதிருப்தி ஏற்பட்டுள்ளது.

News May 28, 2024

இன்னும் 4 நாள்களில் டி20 உலகக் கோப்பை திருவிழா

image

டி20 உலகக் கோப்பை தொடர் இன்னும் 4 நாள்களில் தொடங்கவுள்ளது. அமெரிக்கா & மேற்கிந்தியத் தீவுகளில் நடக்கும் இந்த தொடரில் 20 அணிகள் 4 குழுக்களாக (தலா 5 அணி) களம் காணவுள்ளன. குழுவில் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் ‘சூப்பர்8’-க்கு முன்னேறும். அவை இரு குழுவாகப் பிரிக்கப்பட்டு, அதில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு தகுதிப்பெறும். அதில் வெல்லும் அணிகள் இறுதிப் போட்டியில் மோதும்.

News May 28, 2024

ஆர்.டி.இ., இலவச சேர்க்கைக்கு இன்று குலுக்கல்!

image

தமிழகத்தில் உள்ள தனியார் சுயநிதி பள்ளிகளில், ஆர்.டி.இ., திட்டத்தில் இலவச கல்விக்கு விண்ணப்பித்த மாணவர்களின் சேர்க்கைக்கு இன்று குலுக்கல் நடைபெறவுள்ளது. பள்ளிக் கல்வித் துறையின் உத்தரவின் அடிப்படையில், நலிவடைந்த பிரிவினருக்கான 25% இட ஒதுக்கீட்டின் கீழ் இணைய வழியில் பதிவு செய்த பெற்றோர்களின் முன்னிலையில் (விண்ணப்பித்த பள்ளியில்) குலுக்கல் முறையிலான சேர்க்கை நடக்கும். இந்த செய்தியை பகிருங்கள்.

News May 28, 2024

பாலிவுட்டில் ரிச்சா சத்தாவின் கசப்பான அனுபவம்

image

OTTயில் வெளியாகியுள்ள ‘ஹீராமண்டி’ என்ற வெப் தொடர் மக்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது. இதில் நடித்துள்ள ரிச்சா சத்தாவின் நடிப்பை பலரும் பாராட்டி வருகின்றனர். பாலிவுட்டில் தனக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவங்களை வெளியே கூறிய அவர், “புதிய படத்தில் நடிக்க கேஸ்டிங்கிற்கு அழைப்பார்கள். 4 ரவுண்டுகளில் செலக்ட் ஆகி இருப்பேன். ஆனால், கடைசியில் வாரிசு நடிகைகளுக்காக ஒதுக்கிவிடுவர்” என வேதனையுடன் தெரிவித்தார்.

News May 28, 2024

ஜெ.வை இந்து தலைவர் என பாஜக திடீரென கூறுவது ஏன்?

image

மக்களவைத் தேர்தல் பிரசாரத்தால் அனல் பறந்து ஓய்ந்த தமிழக அரசியல் களம், ஜெயலலிதாவை இந்து தலைவர் என அண்ணாமலை கூறியதால் மீண்டும் சூடு பிடித்துள்ளது. ஜெ.வை இந்து தலைவர் என அண்ணாமலை திடீரென கூறியது ஏன்? இதில் என்ன லாஜிக் உள்ளது? எனக் கேள்வி எழும் நிலையில், ஜெயலலிதா ஆதரவாளர்களை பாஜகவுக்கு ஈர்க்க இதுபோல கூறினாரா? அதிமுகவில் இந்து, இந்து அல்லாதோர் என பிளவு ஏற்படுத்த கூறினாரா? என சந்தேகமும் வருகிறது.

News May 28, 2024

வெள்ளி விலை 30% உயர்வு

image

சர்வதேச சந்தை, இந்திய சந்தை ஆகியவற்றில் இந்தாண்டில் தங்கம், வெள்ளி விலை அதிகரித்து வருகிறது. குறிப்பாக, தங்கம் விலையை விட வெள்ளி விலை அதிகமாக உயர்ந்துள்ளது. சர்வதேச சந்தையில் வெள்ளி விலை இந்தாண்டில் 30 சதவீதமும், தங்க விலை 20 சதவீதமும் உயர்ந்துள்ளது. வரும் மாதங்களில் வெள்ளி விலை தொடர்ந்து அதிகரித்து, இந்தாண்டின் இறுதியில் 1 கிலோ மீண்டும் ரூ.1 லட்சத்தை தாண்டும் எனக் கூறப்படுகிறது.

error: Content is protected !!