India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கேரளாவின் திருச்சூரில் கடந்த வாரம் குழிமண்டி பிரியாணி சாப்பிட்ட 85 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்கள் சாப்பிட்ட ‘மயோனைஸ்’ சாஸில் நச்சுத் தன்மை இருந்ததாகவும், அதனால் சாப்பிட்டவர்களுக்கு உடல் நல பாதிப்பு ஏற்பட்டதாகவும் கேரள சுகாதாரத் துறை தெரிவித்திருந்தது. இந்நிலையில், சிகிச்சை பெற்றுவந்த ‘நுசைபா’ என்ற பெண் இன்று காலை உயிரிழந்தார்.
மாதவிடாய் குறித்த தவறான புரிதல்களை களையவும், சரியான விழிப்புணர்வை ஏற்படுத்தவும் உலக மாதவிடாய் சுகாதார தினம் இன்று (மே 28) கடைபிடிக்கப்படுகிறது. பாலின சமத்துவமின்மை, கலாசார தடைகள், தனிமைப்படுத்தல், மூட பழக்க வழக்கங்களால் சொல்லொண்ணா துயரத்திற்கு ஆளாகும் பெண்களின் வலியை புரிந்து கொள்வோம். மாதவிடாய்க்கு இணக்கமான புறச்சூழலை, தோழமை அணுகல் வழியே உருவாக்க முனைவோம்.
பிரதமரின் வீடு வழங்கும் திட்டத்தில் (PMAY) மோசடியில் ஈடுபட்ட 50 தமிழக அதிகாரிகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஏழைகளுக்கு வீடு வழங்கும் இத்திட்டத்தில் ஒரு பயனாளிக்கு ₹2,77,290 பணம் வழங்கப்பட்டு வருகிறது. 2016 – 2020 வரை தமிழகம் முழுவதும் பஞ்சாயத்து ராஜ் துறை அதிகாரிகள் இதில் பல கோடி பணம் மோசடி செய்துள்ளதை ஊழல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் கண்டறிந்து, நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
தமிழகத்தில் பள்ளிகள் ஜூன் 6ஆம் தேதி திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. ஆனால், புதிய வருடத்திற்கான இலவச பஸ் பாஸ்கள் வழங்க ஓரிரு மாதங்கள் ஆகலாம். இதனை கருத்தில் கொண்டு, பழைய பஸ் பாஸ் இருந்தலே அரசுப் பேருந்துகளில் மாணவர்கள் கட்டணமின்றி பயணிக்கலாம் என்று போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது. பாஸ் இல்லாதவர்கள், பள்ளி வழங்கிய அடையாள அட்டையை பயன்படுத்தலாம்.
தேர்தலில் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள திரிணாமுல் காங்கிரஸ் போராடி வருவதாக மோடி விமர்சித்துள்ளார். தேர்தலில் மிகப் பெரிய வெற்றியை பாஜக அடையும் என்ற அவர், மே.வங்க உயர்நீதிமன்ற தீர்ப்பில் உள்நோக்கம் கற்பிக்க முயலும் மம்தாவின் நடவடிக்கையை ஏற்க முடியாது என்று கூறினார். கடந்த 10 ஆண்டுகளில் வழங்கப்பட்ட ஓபிசி சான்றிதழ்களை ரத்து செய்த மே.வங்க உயர்நீதிமன்ற உத்தரவை மம்தா விமர்சித்திருந்தார்.
சட்ட விரோதமாக வெளிநாடுகளுக்கு பலரை அனுப்பியதாக யூடியூபர் பாபி கட்டாரியாவை குருகிராம் போலீசார் கைது செய்துள்ளனர். இன்ஸ்டாகிராம் மூலம் வேலையில்லாத இளைஞர்கள் மற்றும் பெண்களை அடையாளம் கண்டு, அவர்களை சட்ட விரோதமாக வெளிநாடுகளுக்கு அனுப்புவதை அவர் வழக்கமாக வைத்திருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. முன்னதாக, 2022 ஆண்டில் விமானத்தில் புகை பிடித்ததற்காக அவர் கைது செய்யப்பட்டார்.
ஆளுநர் ஆர்.என்.ரவியின் எக்ஸ் பக்க பதிவில், புதிய நாடாளுமன்றத்தில் செங்கோலை மோடி வைத்த பெருமைமிகு ஓராண்டு நிகழ்வை நாடே கொண்டாடுகிறது. செங்கோல் உருவான இடமும், புனித மண்ணுமான தமிழகத்தில் வாழ்வோருக்கு இது ஒரு சிறப்பான நாள், தமிழர்களின் பெருமையை இருட்டடிப்பு செய்யாமல், நாட்டின் உயரிய பீடத்தில் நிலைநிறுத்தியதற்காக மோடிக்கு தமிழக மக்கள் நன்றியுள்ளவர்களாக இருப்பார்கள் என்று கூறியுள்ளார்.
சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை மீண்டும் ₹100ஐ கடந்து ₹101க்கு விற்பனையாகிறது. நேற்று ₹97.50க்கு விற்கப்பட்ட ஒரு கிராம் வெள்ளி, ஒரே நாளில் ₹3.50 உயர்ந்து ₹101 ஆனது. அதேபோல, ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹160 உயர்ந்து ₹53,920க்கு விற்கப்படுகிறது. நேற்று ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ₹6,720க்கு விற்பனையான நிலையில் இன்று ₹20 உயர்ந்து ₹6,740க்கு விற்பனையாகிறது.
டெல்லி மருத்துவமனையில் நேரிட்ட தீ விபத்தில் 7 குழந்தைகள் பலியானது குறித்து காவல்துறையின் FIR மூலம் புது தகவல் வெளியாகியுள்ளது. அதில், தீ விபத்து நடைபெற்ற மருத்துவமனையின் வெளியேயும், உள்ளேயும் 27 ஆக்சிஜன் சிலிண்டர்கள் கேட்பாரற்று கிடந்ததாகவும், 5 சிலிண்டர்கள் வெடித்து சிதறியதாகவும், தீ விபத்து முன்னெச்சரிக்கை கருவி, நீர் தெளிப்பான் இல்லை, அஜாக்கிரதையாக இருந்துள்ளனர் என்று கூறப்பட்டுள்ளது.
ஸ்டேட்டஸில் ஒரு நிமிடம் வரை நீளமான வீடியோக்களைப் பகிரும் வகையிலான புதிய அப்டேட் (ஆண்ட்ராய்டு 2.24.7.6) ஒன்றை வாட்ஸ்அப் விரைவில் அறிமுகப்படுத்தவுள்ளது. தற்போது வரை 30 வினாடிகள் வரையிலான வீடியோக்களை மட்டுமே ஸ்டேட்டஸில் பகிர முடியும். அதனை ஒரு நிமிடம் வரையிலான வீடியோவாக பகிர அனுமதிக்க பீட்டா திட்டமிட்டுள்ளது. இதற்கான பணிகள் நடந்து வருவதாகவும், விரைவில் இது அறிமுகமாகும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
Sorry, no posts matched your criteria.