news

News May 28, 2024

பஞ்சாப் அரசை கலைப்போம் என அமித் ஷா மிரட்டுகிறார்

image

பஞ்சாப் மாநில அரசை கலைப்போம் என அமித் ஷா மிரட்டுவதாக கெஜ்ரிவால் குற்றஞ்சாட்டிள்ளார். லூதியானாவில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் பேசிய அவர், ஜுன் 4ஆம் தேதி மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியானதும், பஞ்சாப் முதல்வர் பகவந்த் சிங் மானை பதவியை விட்டு நீக்க போவதாக அமித் ஷா மிரட்டுவதாகக் கூறினார். பஞ்சாபில் இலவச மின்சாரத் திட்டத்தை நிறுத்த பாஜக திட்டமிட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

News May 28, 2024

அடுத்த 3 நாள்களுக்கு வெப்ப நிலை அதிகரிக்கக் கூடும்

image

தமிழகத்தில் அடுத்த 3 நாள்களுக்கு வெப்பநிலை உயரக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அக்னி நட்சத்திரம் இன்றுடன் முடிவடைகிறது. இந்த நிலையில், தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அடுத்த 3 நாள்களுக்கு வழக்கத்தை விட வெயில் 2-3 டிகிரி செல்சியஸ் அதிகரித்து காணப்படும் எனவும், பகல் வேளையில் சில இடங்களில் அனல் காற்று வீசும் எனவும் வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

News May 28, 2024

சரிந்து வரும் வீரர்களின் எண்ணிக்கை? (2/2)

image

ராணுவ வீரர்களின் எண்ணிக்கை சரிவது உள்பட எதிர்காலத்தில் ஏற்படக் கூடிய பிரச்னைகளை, களையும் வழிகளை பாதுகாப்புத்துறை வல்லுநர்கள் ஆராய்ந்துள்ளனர். அதன் விளைவாக, அக்னிபத் திட்டத்தில் சில மாற்றங்களை மேற்கொள்ளவும் அரசுக்கு பரிந்துரைத்துள்ளனர். அதன்படி, ஒப்பந்தக் காலம் முடிந்ததும், ராணுவப் பணியாற்ற அனுமதிக்கப்படும் வீரர்களின் விகிதத்தை 50% ஆக அதிகரிக்க அரசு பரிசீலித்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

News May 28, 2024

சரிந்து வரும் வீரர்களின் எண்ணிக்கை? (1/2)

image

இந்திய ராணுவத்தில் சேருவோர் எண்ணிக்கை தொடர்ந்து சரிந்து வருவதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. 2022இல் அறிமுகப்படுத்தப்பட்ட அக்னிபத் திட்டம் காரணமாகவே இந்த சரிவு ஏற்பட்டுள்ளதாக படைத்துறை வல்லுநர்கள் கூறுகின்றனர். 4 ஆண்டுகால ஒப்பந்தப் பணியாளராக முப்படைகளில் சேர்த்து, குறுகிய காலத்தில் 75% பேரை விடுவிப்பதே ராணுவத்தில் சேரும் ஆர்வம் இளைஞர்களிடையே குறைந்துவரக் காரணமாக கூறப்படுகிறது.

News May 28, 2024

நடிகர் பகத் ஃபாசிலுக்கு ADHD குறைபாடு

image

பிரபல நடிகர் பகத் ஃபாசில் தனக்கு ADHD என்ற கவனக் குறைவு இருப்பதாக மனம் திறந்துள்ளார். 41 வயதாகும் அவருக்கு, சிறிய வயது முதலே இந்த பிரச்னை இருந்துள்ளது. மூளையில் ஏற்படும் இந்தவகை குறைபாட்டை குணப்படுத்த முடியாது. ஆனால், கட்டுக்குள் வைக்க முடியும். ADHDயால் பாதிக்கப்பட்டவர்கள், படிப்பு, வேலை ஆகியவற்றில் கவனம் செலுத்த முடியாது. இருப்பினும், பகத் முன்னணி நடிகராக இருப்பது பாராட்டத்தக்கது.

News May 28, 2024

‘காதலிக்க நேரமில்லை’ படத்தின் ஷூட்டிங் நிறைவு

image

ஜெயம் ரவி, நித்யா மேனன் நடிப்பில் கிருத்திகா உதயநிதி இயங்கிவந்த ‘காதலிக்க நேரமில்லை’ படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்தது. யோகிபாபு, டி.ஜே.பானு, ஜான் கொக்கைன் உட்பட பலர் நடிக்கின்றனர். ரெட் ஜெயன்ட் தயாரிக்கும் இந்த படத்திற்கு, ரஹ்மான் இசையமைக்கிறார். இந்த படம் அடுத்த மாதத்தில் வெளியாக அதிக வாய்ப்புள்ளதாக படக்குழுவினர் கூறியுள்ளனர். ஸ்ரீதர் இயக்கத்தில் 1964இல் இதே தலைப்பில் தமிழ்படம் ஒன்று ரிலீசானது.

News May 28, 2024

ED, CBI தொடர்பான புகாருக்கு ஆதாரம் உள்ளதா?

image

ஏஎன்ஐக்கு பல்வேறு விவகாரம் குறித்து மோடி பேட்டியளித்துள்ளார். அவரிடம், எதிர்க்கட்சிகளை ஒடுக்க ED, CBI, IT பயன்படுத்தப்படுவதாக கூறப்படும் குற்றச்சாட்டு குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, இந்த குற்றச்சாட்டுக்கு ஆதாரம் உள்ளதா? எனக் கேட்டார். மன்மோகனின் ஆட்சியில் ₹34 லட்சம் கைப்பற்றிய ED, தனது ஆட்சியில் ₹2,200 கோடியை மீட்டுள்ளதாகவும், இதற்கு தம்மை பாராட்ட வேண்டுமே தவிர இகழக்கூடாது என்றார்.

News May 28, 2024

கோலியை போல் ஒரு சிறந்த வீரரை பார்த்ததில்லை

image

விலைமதிப்பற்ற விஷயங்களை கோலியிடம் கற்றுக்கொண்டதாக இங்கிலாந்து வீரர் வில் ஜாக்ஸ் தெரிவித்துள்ளார். சேஸிங்கில் எப்படி அதிரடியாக ரன்களை குவிக்கலாம் என்பதை கோலியிடம் தெரிந்துகொண்டதாக கூறிய அவர், இருவரும் இணைந்து பார்ட்னர்ஷிப்பில் அதிக ரன்களை குவித்தது பெருமையாக இருப்பதாகவும் தெரிவித்தார். வில் ஜாக்ஸ், பெங்களூரு அணிக்காக நடப்பு ஐபிஎல் தொடரில் சில ஆட்டங்களில் விளையாடினார்.

News May 28, 2024

பட்நாயக் மீதான பாஜக விமர்சனம் எடுபடாது

image

ஒடிஷா முதல்வர் நவீன் பட்நாயக்கின் வயது குறித்த பாஜக விமர்சனம் எடுபடாதென அவரது வலதுகரமாகக் கருதப்படும் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி வி.கே. பாண்டியன் தெரிவித்துள்ளார். ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியில், பட்நாயக் மீது குற்றச்சாட்டு தெரிவிக்க எதுவும் இல்லாததால், அவர் வயது குறித்து பாஜக விமர்சிப்பதாகவும், இதற்கு தேர்தலில் மக்கள் தக்க பதிலடி கொடுப்பார்கள், 6ஆவது முறையாக நவீன் முதல்வராவார் என்றார்.

News May 28, 2024

பெற்ற மகளை பகடையாக்கிய பயங்கரம்

image

சென்னையில் பள்ளி மாணவிகளை வைத்து பாலியல் தொழில் நடத்தி வந்த நதியாவை போலீசார் கடந்த வாரம் கைது செய்தனர். அவர் அளித்துள்ள வாக்குமூலத்தில் திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்துள்ளன. பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் தனது மகளை வைத்து மற்ற மாணவிகளுக்கு வலை வீசியதாகவும், ஏழ்மை நிலையில் இருக்கும் மாணவிகளிடம் பக்குவமாகப் பேசி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாகவும் நதியா போலீசிடம் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!