India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ரியல் எஸ்டேட், உள்கட்டமைப்புக்கான கடன் வழங்கும் வங்கிகள் 5% பாதுகாப்பு தொகை தர வேண்டும் என சமீபத்தில் RBI அறிவித்தது. இந்த விதி அமலாக உள்ள நிலையில், இதனால் கடன் வழங்குவது பெரிய அளவில் குறையும் என வங்கிகள் அச்சம் தெரிவித்துள்ளன. குறிப்பாக, உள்கட்டமைப்பு திட்டங்களுக்கான ஏலத்தில் பங்கேற்போரின் ஆர்வம் குறையும் எனக் கூறியுள்ள SBI உள்ளிட்ட வங்கிகள், புதிய விதியில் தளர்வு அளிக்க கோரிக்கை விடுத்துள்ளன.
போதை ஆசாமிகள் காவல்துறையினரை தாக்கும் சம்பவங்கள் கவலையளிப்பதாக இபிஎஸ் தெரிவித்துள்ளார். திமுக அரசும், இதை தடுக்க வேண்டிய காவல்துறையினரும் விழிபிதுங்கி நிற்பதாக குற்றம் சாட்டியுள்ள அவர், இதனால், வியாபாரிகளும், பொதுமக்களும் அச்சத்தில் இருப்பதாக கூறியுள்ளார். காவல்துறையை கையில் வைத்திருக்கும் முதல்வர், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
தொழில்நுட்பம் வேகமாக வளர்ந்து வரும் சூழலில், சைபர் மோசடிகளும் அதிகரித்துள்ளன. இந்நிலையில், சைபர் மோசடிகள் குறித்த கண்காணிப்பை மத்திய அரசு அதிகரித்துள்ளதாகவும், கடந்த ஆண்டில் மட்டும் சுமார் 27 லட்சம் புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் மத்திய அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். நாட்டில் உள்ள 99.5% காவல் நிலையங்கள் குற்றவியல் கண்காணிப்பு நெட்வொர்க் உடன் இணைக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
யூடியூப் நிறுவனத்திற்கு விளம்பரங்கள் மூலமே அதிக வருவாய் கிடைக்கிறது. இந்நிலையில், சில பயனாளர்கள் Ad Blocker செயலிகளை பயன்படுத்துவது அந்நிறுவனத்திற்கு தலைவலியாக மாறியது. Ad Blocker போன்ற மூன்றாம் தரப்பு செயலிகளை பயன்படுத்த வேண்டாம் என பயனர்களை வலியுறுத்தி வந்த யூடியூப், ஒரு கட்டத்தில் அவர்கள் முழு வீடியோவை பார்க்க முடியாத படி செய்தது. தற்போது, ஆடியோவை மியூட் செய்யும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது.
கொரோனாவை போல் உலகில் அடுத்த பெருந்தொற்றை தவிர்க்க முடியாது என்று இங்கி., முன்னாள் தலைமை அறிவியல் ஆலோசகர் சர் பேட்ரிக் வாலன்ஸ் எச்சரித்துள்ளார். தொற்று பரவினால் ஆபத்தாக மாறிவிடும். எனவே, தொற்றை கண்டறியும் முறை, தடுப்பூசி, சிகிச்சை முறை ஆகியவை தயாராக இருந்தால் தொற்றின் பாதிப்பை வெகுவாக குறைக்க முடியும். ஜி7 மற்றும் ஜி20 நாடுகள் இந்த விவகாரத்தில் தீவிரம் காட்ட வேண்டும் என எச்சரித்துள்ளார்.
2019இல் பாஜக 303 தொகுதிகளில் வென்ற நிலையில், அதில் 77 தொகுதிகளில் 1 லட்சத்துக்கும் குறைவான வாக்கு வித்தியாசத்திலேயே வென்றது. குறிப்பாக, 40 தொகுதிகளில் மிக சொற்பமான வாக்கு வித்தியாசத்தில் பாஜகவினர் எம்பிக்களானார்கள். இதனால், இந்த குறிப்பிட்ட தொகுதிகளை தக்க வைக்க பாஜக போராடி வருகிறது. இந்த தொகுதிகளில் பாஜக தனது வெற்றியை மீண்டும் உறுதி செய்தால் தான், மெஜாரிட்டி என்ற அவர்களின் எண்ணம் நிறைவேறும்.
நாமக்கல் கோழிப் பண்ணைகளில் முட்டை விலை குறைந்ததால், அதன் தாக்கம் சில்லறை விலையிலும் எதிரொலித்துள்ளது. கடந்த சில நாள்களாகவே ஏறுமுகத்தில் இருந்த முட்டை விலை, தற்போது சரிவை சந்தித்துள்ளது. ஒரு வாரத்திற்கு முன்பு மொத்த விலையில் 5 ரூபாய் 80 காசுகளாக இருந்த ஒரு முட்டை விலை, தற்போது 5 ரூபாய் 20 காசுகளாக குறைந்துள்ளது. இதன் காரணமாக, வீட்டுச் செலவு சற்று குறையும் என இல்லத்தரசிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
விஜய் சேதுபதியின் 50ஆவது படமான ‘மகாராஜா’ படம் தொடர்பான முக்கிய அறிவிப்பு ஒன்றை நாளை வெளியிட உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. ‘குரங்கு பொம்மை’ படத்தை இயக்கிய நித்திலன் சாமிநாதன் இயக்கும் மகாராஜா படத்தை சுதன் சுந்தரன், ஜெகதீஷ் பழனிச்சாமி தயாரிக்கின்றனர். பான் இந்தியா படமாக உருவாகும் இந்த படத்தில் அனுராக் காஷ்யப், பாரதிராஜா, சிங்கம் புலி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். அஜனீஷ் லோக்நாத் இசையமைத்துள்ளார்.
கார் விபத்து அனுபவம் தனது வாழ்க்கையை முற்றிலும் மாற்றிவிட்டதாக இந்திய கிரிக்கெட் அணி வீரர் ரிஷப் பண்ட் தெரிவித்துள்ளார். 2022இல் விபத்தில் சிக்கிய பண்ட், அதிலிருந்து மீண்டு தற்போது டி20 உலகக் கோப்பை அணியில் இடம் பிடித்துள்ளார். இந்த நிலையில் பழைய நிகழ்வை நினைவுகூர்ந்த அவர், கடவுளின் கருணையால் உயிரோடு இருப்பதாகவும், விபத்துக்கு பிறகு 7 மாதங்கள் வரை வலி தாங்காமல் அவதிப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
நடந்து முடிந்த 6ஆம் கட்ட மக்களவைத் தேர்தலில் 63.37% வாக்குகள் பதிவானதாக இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 6 மாநிலங்கள், டெல்லி உள்பட 2 யூனியன் பிரதேசங்களில் உள்ள 58 தொகுதிகளில், மே 25ஆம் தேதி 6ஆம் கட்ட வாக்குப் பதிவு நடைபெற்றது. இதைத் தொடர்ந்து ஜூன் 1ஆம் தேதி, 7ஆவது மற்றும் கடைசி கட்டமாக 57 தொகுதிகளில் மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
Sorry, no posts matched your criteria.