news

News May 28, 2024

இந்திய சுதந்திர போராட்டம் இருட்டடிப்பு: ஆளுநர்

image

தமிழக கல்லூரிகளின் பாடத் திட்டம் திராவிட இயக்க கதைகளால் நிரம்பியுள்ளதாக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். ஊட்டியில் நடைபெற்ற பல்கலைக்கழக துணைவேந்தர்களின் மாநாட்டில் பேசிய அவர், பிஏ உள்ளிட்ட கல்லூரி பாடத்திட்டத்தில் சுதந்திரப் போராட்டம் முற்றிலும் இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளதாக கூறினார். இதனால், தமிழர்களை தேசிய நீரோட்டத்தில் இருந்து பிரித்துவிட்டதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

News May 28, 2024

UPI சேவையில் அதானி நிறுவனம்?

image

GPAY, Phonepe-க்கு போட்டியாக UPI சேவையில், அதானி நிறுவனம் களமிறங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் UPI பேமெண்ட் முறை அதிகரித்துள்ளது. குறிப்பாக, GPAY, Phonepe அதிகளவில் பயன்பாட்டில் உள்ளது. இந்த நிலையில், UPI சேவையில் களமிறங்க முடிவு செய்துள்ள அதானி நிறுவனம், அது தொடர்பாக வங்கிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாக, அவருக்கு நெருங்கிய வட்டாரங்களில் இருந்து தகவல் வெளிவந்துள்ளது.

News May 28, 2024

சிறப்பு பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவுத் திட்டம்

image

தமிழகத்தில் உள்ள சிறப்பு பள்ளிகளில் ஜூன் 1 முதல் மதிய உணவுத் திட்டம் செயல்படுத்தப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. தொண்டு நிறுவனங்கள் சார்பில் நடத்தப்படும் 175 சிறப்பு பள்ளிகளில் 5725 மாணவர்கள் உள்ளனர். இவர்களுக்கு, சத்துணவு மையத்தில் இருந்து உரிய நேரத்தில் மதிய உணவு கொண்டுச் சென்று வழங்கவும், இதற்கான பொறுப்பாளர்களை சம்பந்தப்பட்ட துறை மூலம் நியமிக்கவும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

News May 28, 2024

அண்ணாமலையே வெல்ல முடியாது: திமுக

image

தமிழக பாஜகவில் உட்கட்சி பூசல் நிலவுவதாக திமுக செய்தித் தொடர்பாளர் டிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் அளித்த பேட்டியில், தமிழ்நாட்டில் 40 தொகுதிகளிலும் பாஜக வெல்லும் என அண்ணாமலை நம்பிக்கை தெரிவிப்பதாகவும், ஆனால் உட்கட்சி பூசலால் அவரே கோவையில் வெற்றி பெறுவது கடினம் என செய்திகள் வருவதாகவும் தெரிவித்தார். மேலும், பாஜக 10 ஆண்டுகளில் எதையும் செய்யவில்லை எனவும் குற்றம் சாட்டினார்.

News May 28, 2024

காதலியிடம் ஜிஎஸ்டி கேட்ட காதலன்

image

ஆதித்யா என்ற நபர், காதலிக்கு தான் செய்த செலவுகளை மொத்தமாக Excel sheetஇல் குறித்து வந்த வினோத சம்பவம் அரங்கேறியுள்ளது. கணக்காளரான (CA) அவர், 7 மாதங்களாக காதலிக்கு செய்த செலவுகளை நோட் செய்து வந்துள்ளார். ஒரு கட்டத்தில் காதல் பிரிந்த நிலையில், இந்த Excel sheetஐ காதலிக்கு அனுப்பி அதிர்ச்சி கொடுத்துள்ளார். இதில், சுவாரஸ்யம் என்னவென்றால் பிறந்த நாள் பரிசுக்கு அவர் 18% ஜிஎஸ்டியை சேர்த்ததுதான்.

News May 28, 2024

தீயாய் தயாரான ராயன் பின்னணி இசை

image

தனுஷ் இயக்கி, நடித்துள்ள ‘ராயன்’ படத்திற்கான போஸ்ட் புரொடெக்‌ஷன் பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன. இதனிடையே, ப்ரொமோஷன் பணிகளை தொடங்கியுள்ள படக்குழு, ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவான 2 பாடல்களை வெளியிட்டது. இந்நிலையில், இப்படத்தின் பின்னணி இசைக்கான பணிகளை ஏ.ஆர்.ரஹ்மான் முடித்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்களை தனது X பக்கத்தில் வெளியிட்டுள்ள தனுஷ், புயல் வந்துக் கொண்டிருப்பதாக பதிவிட்டுள்ளார்.

News May 28, 2024

டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார் சைதை துரைசாமி

image

நிமோனியா காய்ச்சல் காரணமாக மூச்சுத்திணறல் ஏற்பட்டு அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சென்னை முன்னாள் மேயர் சைதை துரைசாமி, சிகிச்சைக்கு பின் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். மருத்துவ பரிசோதனையில் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இனி எந்த பிரச்னையும் இல்லை என்றாலும் 20 நாள்கள் வீட்டில் ஓய்வெடுக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

News May 28, 2024

அமெரிக்காவில் இந்திய வீரர்கள் ஜாலி ரெய்டு

image

உலகக் கோப்பை டி20 தொடரில் விளையாடும் இந்திய அணி தற்போது அமெரிக்காவில் முகாமிட்டுள்ளது. பயிற்சிக்கு இடையில் கிடைக்கும் நேரத்தில், இந்திய அணி வீரர்கள் ஜாலியாக அமெரிக்காவை சுற்றிப் பார்த்து ரசித்து வருகின்றனர். அந்த வகையில், இளம் வீரர்கள் சூர்யகுமார், ஷிவம் துபே, அர்ஷ்தீப் சிங் ஆகியோர் ஊரைச் சுற்றிப் பார்த்ததுடன் கையில் ஜூஸுடன் போஸ் கொடுத்து புகைப்படம் பதிவிட்டுள்ளனர். இது தற்போது வைரலாகி வருகிறது.

News May 28, 2024

வங்கி கணக்கில் ஜூலை 5ஆம் தேதி ₹8,500 செலுத்தப்படும்

image

ஏழை மக்களின் வங்கி கணக்குகளில் கோடிக்கணக்கான ரூபாயை டெபாசிட் செய்ய இருப்பதாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். வாரணாசியில் பிரசாரம் செய்த அவர், மகாலட்சுமி திட்டத்தின் கீழ் ஏழை குடும்பங்களில் உள்ள பெண்களின் பட்டியலை தயாரிக்க இருப்பதாகவும், அவர்களின் வங்கி கணக்கில் ஜூலை 5ஆம் தேதி ₹8,500 வரவு வைக்கப்படும் எனவும் தெரிவித்தார். இதன் மூலம், நாட்டின் அனைத்து ஏழை பெண்களும் பயன்பெற இருப்பதாக தெரிவித்தார்.

News May 28, 2024

ரிசர்வ் வங்கியின் புதிய விதியால் என்ன நடக்கும்?

image

கட்டுமானத் துறைக்கு கடன் வழங்கும் வங்கிகள் 5% பாதுகாப்புத் தொகை தர வேண்டும் என RBI கூறியுள்ளது. இந்த முறையில், SBI வங்கி RBI-க்கு தற்போது ₹32,000 கோடி வழங்கும் நிலையில், புதிய விதி அமலானால் மேலும் ₹9000 கோடி ஒதுக்கும் சூழல் உண்டாகும். இதனால், கையிருப்புத் தொகை குறையும் என்பதால் வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் கடன் தொகையும் குறைய வாய்ப்புள்ளதால், புதிய விதியை கைவிட வங்கிகள் கோரிக்கை விடுத்துள்ளன.

error: Content is protected !!