news

News May 29, 2024

8 விருதுகளை அள்ளிய “விக்ரம்” படம்

image

ஜப்பானில் வசிக்கும் தமிழர்கள் இணைந்து ஆண்டுதோறும் ‘ஒசாகா’ திரைப்பட விழாவை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், தற்போது அவர்கள் 2022ஆம் ஆண்டுக்கான விருதுகளை அறிவித்துள்ளனர். இதில் சிறந்த நடிகர் – கமல் (விக்ரம்), சிறந்த நடிகை – கீர்த்தி சுரேஷ் (சாணிக்காயிதம்), சிறந்த இயக்குநர் – மணிரத்னம் (PS-1) ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதில் விக்ரம் படம் 8 விருதுகளையும், PS-1, 7 விருதுகளையும் வென்றுள்ளது.

News May 29, 2024

பிபவ் குமாருக்கு 3 நாள்கள் போலீஸ் காவல்

image

AAP மாநிலங்களவை உறுப்பினர் ஸ்வாதி மாலிவாலை தாக்கியதாக கூறப்படும் வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவாலின் உதவியாளர் பிபவ் குமார் கடந்த 18ஆம் தேதி கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் கடந்த திங்கள் கிழமை அவரது ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது அவரை 3 நாள்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி அளித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

News May 29, 2024

வரலாற்றில் இன்று: மே 29

image

* ஐக்கிய நாடுகளின் அமைதி காப்போருக்கான சர்வதேச நாள்
* 1867 – ஆஸ்திரிய – ஹங்கேரியப் பேரரசு அமைக்கப்பட்டது.
*1869 – இங்கிலாந்தில் பகிரங்க மரணதண்டனை தடை செய்யப்பட்டது.
* 1947 – இந்திய தரக்கட்டுப்பாட்டு நிறுவனம் அமைக்கப்பட்டது.
* 2005 – ஐரோப்பிய ஒன்றியம் விடுதலைப் புலிகளைத் தீவிரவாத அமைப்பாக அறிவித்துத் தடை செய்தது.

News May 29, 2024

மழையால் போட்டி ரத்து

image

இங்கிலாந்து – பாகிஸ்தான் இடையேயான மூன்றாவது டி20 கிரிக்கெட் போட்டி மழை காரணமாக டாஸ் கூட போடப்படாமல் ரத்து செய்யப்பட்டுள்ளது. இவ்விரு அணிகளுக்கிடையேயான முதல் போட்டி மழையால் ரத்து செய்யப்பட்ட நிலையில், இரண்டாவது போட்டியில் இங்கி., வெற்றிபெற்றது. நான்காவது மற்றும் கடைசி டி20 போட்டி நாளை இரவு ஓவல் மைதானத்தில் நடைபெற உள்ளது. அதில் இங்கி., வெற்றிபெறும் பட்சத்தில் தொடரைக் கைப்பற்றும்.

News May 29, 2024

அதிக வருமானம் ஈட்டும் ஹெலிகாப்டர் நிறுவனங்கள்

image

மக்களவைத் தேர்தலை வைத்து ஹெலிகாப்டர் போக்குவரத்து நிறுவனங்கள் அதிக லாபத்தை ஈட்டி வருகின்றன. முந்தைய ஆண்டுகளைக் காட்டிலும் இந்த ஆண்டு தேர்தலுக்கு அரசியல் கட்சிகள் அதிகமாக ஹெலிகாப்டரை பயன்படுத்தி வருவதன் காரணமாக வாடகை 50% உயர்த்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக ஹெலிகாப்டர் போக்குவரத்து நிறுவனங்கள் தற்போது வரை ₹350 – ₹400 கோடி லாபம் ஈட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

News May 29, 2024

தமிழகம் வருகை தரும் அமித் ஷா!

image

மக்களவை இறுதிக் கட்டத் தேர்தல் ஜூன் 1 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், மத்திய அமைச்சர் அமித் ஷா வரும் 30ஆம் தேதி தமிழ்நாட்டுக்கு வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒருநாள் பயணமாக தமிழகம் வரும் அவர், மதுரை மீனாட்சி அம்மன் கோயில், மற்றும் புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் உள்ள கோயிலில் வழிபாடு நடத்த உள்ளதாக கூறப்படுகிறது. அன்றைய தினம் பிரதமர் மோடியும் கன்னியாகுமரிக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது.

News May 29, 2024

தினம் ஒரு திருக்குறள்!

image

▶குறள் பால்: அறத்துப்பால் ▶இயல்: பாயிரவியல் ▶அதிகாரம்: வான்சிறப்பு ▶ எண்: 17 ▶குறள்: நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி தான்நல்கா தாகி விடின். ▶பொருள்: ஆவியான கடல்நீர் மேகமாகி அந்தக் கடலில் மழையாகப் பெய்தால்தான் கடல்கூட வற்றாமல் இருக்கும். மனித சமுதாயத்திலிருந்து புகழுடன் உயர்ந்தவர்களும் அந்தச் சமுதாயத்திற்கே பயன்பட்டால்தான் அந்தச் சமுதாயம் வாழும்.

News May 29, 2024

பாண்டிராஜ் இயக்கத்தில் ஜெயம் ரவி?

image

கிருத்திகா உதயநிதி இயக்கும் “காதலிக்க நேரமில்லை” படத்தில் நடித்து முடித்துள்ளார் ஜெயம் ரவி. இப்படத்தையடுத்து அவர், பாண்டிராஜ் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ‘அடங்கமறு’, ‘சைரன்’ ஆகிய படங்களை தயாரித்த ஹோம் மூவி மேக்கர்ஸ் இப்படத்தை தயாரிக்க உள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

News May 29, 2024

கனியாமூர் பள்ளி வழக்கு ஜூன் 15க்கு ஒத்திவைப்பு

image

கள்ளக்குறிச்சி கனியாமூர் பள்ளி மாணவி மர்மமாக இறந்த வழக்கை கள்ளக்குறிச்சி குற்றவியல் நீதிமன்றம் விசாரித்து வருகிறது. நேற்று இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள், சம்பவ நாளன்று பள்ளி நிர்வாகத்தினருக்கு காவலர்களுக்கும் இடையே நடந்த தொலைபேசி உரையாடல், சிசிடிவி காட்சிகளை மாணவியின் பெற்றோருக்கு வழங்க ஆணையிட்டது. மேலும், இதுவரை வழங்கப்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆராய உத்தரவிட்டு வழக்கு ஜூன் 15க்கு ஒத்திவைத்தனர்.

News May 29, 2024

பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

image

இன்று (மே 29) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள். பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 11 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க.

error: Content is protected !!