news

News May 29, 2024

அண்ணாமலைக்கு பதிலடி கொடுக்காத இபிஎஸ்

image

ஜெயலலிதாவை இந்து தலைவர் என அண்ணாமலையும், தமிழிசையும் திரும்பத் திரும்ப கூறி வருகின்றனர். அதிமுக பொதுச் செயலாளர் என்ற முறையில் இந்த கருத்துக்கு இபிஎஸ் பதிலடி தந்திருக்க வேண்டும். ஆனால் ஜெயக்குமார், ஆர்பி உதயகுமார் மட்டுமே கண்டனம் தெரிவித்துள்ளனர். இபிஎஸ் தொடர்ந்து மவுனம் காக்கிறார். இதைக் கண்ட அதிமுகவினர், பதிலடி தர இபிஎஸ் பயப்படுகிறாரா? என கேள்வி எழுப்புவதாகக் கூறப்படுகிறது.

News May 29, 2024

வெயிட்டிங் லிஸ்ட் டிக்கெட்டுடன் பயணிக்கலாமா? கூடாதா?

image

முன்பதிவு செய்தபோது வரும் வெயிட்டிங் லிஸ்ட் டிக்கெட்டுடன் ரயிலில் பயணிக்கலாமா? கூடாதா? என்ற சந்தேகம் பலருக்கு உண்டு. டிக்கெட் கவுண்டரில் தரப்படும் வெயிட்டிங் லிஸ்ட் டிக்கெட்டுடன் பயணிக்க முடியும். ஆனால் ஆன்லைன் வெயிட்டிங் லிஸ்ட் டிக்கெட்டுடன் பயணிக்க முடியாது. அதை மீறி பயணித்தால், டிக்கெட் இல்லாமல் ரயிலில் பயணிப்பவராகக் கருதப்பட்டு நடவடிக்கை எடுக்க ரயில்வே விதி வழிவகுத்துள்ளது.

News May 29, 2024

வெள்ளி விலை புதிய உச்சத்தை தொட்டது

image

சென்னையில் வெள்ளியின் விலை வரலாறு காணாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது. இன்று ஒரு கிராம் வெள்ளி ₹102.20க்கு விற்பனையாகிறது. கடந்த மாதம் 29ஆம் தேதி ₹87.50க்கு விற்கப்பட்ட ஒரு கிராம் வெள்ளி, ஒரே மாதத்தில் ₹14.7 அதிகரித்துள்ளது. சர்வதேச சந்தைகளில் தங்கம், வெள்ளி மாதிரியான உலோகங்களுக்கு ஏற்பட்டிருக்கும் தேவையே விலை உயர்வுக்கு காரணமாக பார்க்கப்படுகிறது.

News May 29, 2024

பாஜகவுடன் கூட்டு இல்லை என்று சொன்னவர் ஜெயலலிதா

image

ஜெயலலிதா பற்றி தவறான தகவல்களை கூறுவதை ஏற்க முடியாது என அதிமுக துணை பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார். பாஜகவினர் தேவைக்கு தங்களை பயன்படுத்த முயற்சிப்பதாகக் குற்றம்சாட்டிய அவர், தான் இருக்கும் வரை பாஜகவுடன் கூட்டு இல்லை என்று சொன்னவர் ஜெயலலிதா என்று நினைவுகூர்ந்தார். அத்துடன், இந்துத்துவா கொள்கைக்கும், அதிமுகவுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் அவர் கூறினார்.

News May 29, 2024

டி20 உலக கோப்பையை இதுவரை வென்ற அணிகள்

image

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட், 2007 முதல் நடைபெறுகிறது. இதில் 2007இல் இந்தியா கோப்பையை கைப்பற்றியது. 2009இல் பாகிஸ்தான், 2010இல் இங்கிலாந்து, 2012இல் வெஸ்ட் இண்டீஸ், 2014இல் இலங்கை, 2016இல் வெஸ்ட் இண்டீஸ், 2021இல் ஆஸ்திரேலியா, 2022இல் இங்கிலாந்து அணிகள் கோப்பை வென்றுள்ளன. அதிகபட்சமாக வெஸ்ட் இண்டீஸ், இங்கிலாந்து அணிகள் தலா 2 முறை கோப்பையை வென்றுள்ளன.

News May 29, 2024

விராட் கோலி ஒரு உலக நாயகன்

image

இந்திய கிரிக்கெட் அணி வீரர் விராட் கோலியை உலக நாயகன் என்று நியூசிலாந்து வீரர் ராஸ் டெய்லர் புகழ்ந்துள்ளார். சமூகவலைதளங்களால் கிரிக்கெட் வீரர்களின் வாழ்வில் ஏற்படும் தாக்கம் குறித்து பேட்டியளித்த டெய்லர், இன்ஸ்டா மற்றும் சமூகவலைதளம் மூலம் விளையாட்டு உலகில் கோலி உலக நாயகனாக திகழ்வதாகவும், பிரபல கால்பந்து வீரர்கள் ரொனால்டோ, மெஸ்சிக்கு இணையானவர் கோலி என்றும் தெரிவித்தார்.

News May 29, 2024

பிரபல யூடியூபர் ஸ்வேதா கைது

image

சென்னையில் காதல் குறித்த இளம்பெண்ணின் கருத்துக்களை அவரது அனுமதியின்றி ஒளிபரப்பியதன் காரணமாக யூடியூபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். Veera Talks Double X சேனலில் இளம்பெண்ணின் பேட்டியை அனுமதியின்றி ஒளிபரப்பியதால் அப்பெண் தற்கொலை முயற்சி செய்தார். இதனையடுத்து, பேட்டியெடுத்த ஸ்வேதா, ஒளிப்பதிவாளர் யோகராஜ், சேனல் உரிமையாளர் ராம் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

News May 29, 2024

பிரெஞ்சு ஓபன்: 2வது சுற்றுக்கு முன்னேறிய ஜோகோவிச்

image

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் ஜோகோவிச் 2வது சுற்றுக்கு முன்னேறி உள்ளார். ஆண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்று ஆட்டத்தில் முன்னணி வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச், பிரான்ஸ் வீரர் பியர்-ஹியூஸ் ஹெர்பர்ட்டை எதிர்கொண்டார். ஆரம்பம் முதலே அபாரமாக விளையாடிய ஜோகோவிச் 6-4, 7-6 (7-3), 6-4 என்ற செட் கணக்கில் ஹெர்பர்ட்டை வீழ்த்தினார். 2வது சுற்றில், ஸ்பெயின் வீரர் ராபர்டோ கார்பலேஸை அவர் எதிர்கொள்கிறார்.

News May 29, 2024

கூடுதலாக தேர்தல் அலுவலர்கள் நியமனம்

image

மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் 39 தொகுதிகளில் பதிவான வாக்குகளை எண்ணும் பணிக்காக கூடுதலாக உதவி தேர்தல் அலுவலர்களை நியமித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதற்காக, பல்வேறு அரசு துறைகளில் பணியாற்றும் அரசு அதிகாரிகள் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். அத்துடன், ஒவ்வொரு தொகுதிக்கும் 5 முதல் 20 பேர் வரை நியமிக்கப்பட்டுள்ளனர். ஜூன் 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.

News May 29, 2024

DEMAT கணக்கு: SBI வங்கி ஊழியர்களுக்கு புது கட்டுப்பாடு

image

SBI வங்கி தனது ஊழியர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், அவர்களின் ஸ்டாக் மார்கெட் நடவடிக்கைகளை கண்காணிக்க இருப்பதாகவும், ஆதலால், மேலதிகாரி அனுமதியின்றி, எஸ்பிஐ குழுமம் அல்லாத வேறு எந்த நிறுவனத்திலும் Demat கணக்கு அல்லது டிரெடிங் கணக்கு தொடங்கக் கூடாது எனத் தடை விதித்துள்ளது. முன் அனுமதியின்றி கணக்கு வைத்திருக்கும்பட்சத்தில், அதை 6 மாதத்திற்குள் மூடிவிடும்படியும் SBI உத்தரவிட்டுள்ளது.

error: Content is protected !!