news

News May 29, 2024

தமிழக வீரர்கள் பயிற்சிக்கு 81 வெளிநாட்டு பயிற்சியாளர்கள்

image

ஒலிம்பிக் போன்ற சர்வதேச விளையாட்டுகளில் பதக்கம் வெல்ல ஏதுவாக, தமிழக விளையாட்டு வீரர்களுக்கு பயிற்சி அளிக்க 81 வெளிநாட்டு பயிற்சியாளர்கள் நியமிக்கப்பட்டு இருப்பதாக அரசு தெரிவித்துள்ளது. திமுக ஆட்சியில் விளையாட்டுத் துறையில் செயல்படுத்தப்பட்ட திட்டங்களை தமிழக அரசு பட்டியலிட்டுள்ளது. அதில், சென்னையில் உலகத் தரத்தில் விளையாட்டு நகரை அமைக்கும் பூர்வாங்க பணி தொடங்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

News May 29, 2024

அடுத்தடுத்து 4 பேர் வெட்டிக்கொலை

image

தமிழ்நாட்டில் கடந்த சில நாள்களாக கொலை குற்றங்கள் அதிகரித்துள்ளதால், சட்டம் ஒழுங்கு மிகப்பெரிய கேள்விக்குறியாகியுள்ளது. தமிழகத்தையே உலுக்கிய தீபக் ராஜா படுகொலை சம்பவம் அடங்குவதற்குள், தலைநகர் சென்னையில் நேற்று நள்ளிரவு அடுத்தடுத்து 4 பேர் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளனர். முதல்வர் ஸ்டாலின் கையில் இருக்கும் காவல்துறை என்ன செய்துக்கொண்டு இருக்கிறது என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

News May 29, 2024

ராமரின் பக்தர்களுக்கும், துரோகிகளுக்குமான தேர்தல்

image

டெல்லியை மீண்டும் ஆட்சி செய்ய போவது ராம பக்தர் தான் என உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். ராமர் கோயில் இந்தியாவின் அடையாளம் என்ற அவர், இந்த தேர்தல் ராம பக்தர்களுக்கும், ராம துரோகிகளுக்கும் இடையே நடக்கும் தேர்தல் எனக் கூறினார். ராமர் கோயில் கட்டப்பட்டிருக்க கூடாது என்றும், அது சரியான முறையில் கட்டப்படவில்லை எனவும் காங்கிரஸ், சமாஜ்வாதி கட்சிகள் கூறுவதாகவும் விமர்சித்தார்.

News May 29, 2024

ஆடியோ லேபிள் இருந்தால் இளையராஜா உரிமை கோரலாம்

image

‘குணா’ படத்தின் இசைக்கான ஆடியோ லேபிள் இளையராஜாவிடம் இருந்தால், அவர் தாராளமாக உரிமை கோரலாம் என நடிகர் விஜய் ஆண்டனி கூறியுள்ளார். செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், இசைக்கான ஆடியோ லேபிள் இளையராஜாவிடம் இல்லை என்றால், படத்தின் தயாரிப்பாளருக்கு தான் அதன் உரிமை உள்ளது என்றும், இருந்தாலும், ‘மஞ்சுமல் பாய்ஸ்’ படக்குழுவினர் மரியாதை நிமித்தமாக இளையராஜாவிடம் அனுமதி கேட்டிருக்கலாம் என்றும் தெரிவித்தார்.

News May 29, 2024

இங்கிலாந்து, பிரிட்டன் என்ன வித்தியாசம்?

image

இங்கிலாந்து, பிரிட்டன் தனித்தனி நாடுகளா? ஒரே நாடா? என்ற குழப்பம் உண்டு. அதை தெளிவுபடுத்தி கொள்வோம். இங்கிலாந்து, ஸ்காட்லாந்து, வேல்ஸ், வடக்கு அயர்லாந்து ஆகியவையே யுனைடெட் கிங்டம் ஆப் பிரிட்டன் என அழைக்கப்படுகிறது. 4 பகுதிகளுக்கும் சுயாட்சி அளிக்கப்பட்டுள்ளது. தனி நாடு உரிமை அளிக்கப்படவில்லை. இதனால் வெளிநாடுகளுடன் நேரடி தொடர்பு வைக்க முடியாது. கூட்டாட்சி அரசே வெளிநாடுகளுடன் பேசும்.

News May 29, 2024

மதவெறி பிடித்த பாஜக மிகவும் ஆபத்தானது: ஜெயக்குமார்

image

மதவெறி கொண்ட யானையை விட மதவெறி பிடித்த பாஜக மிகவும் ஆபத்தானது என்று ராமர் கோயில், பாபர் மசூதி விவகாரத்தில் ஜெ., பேசிய உரையை வெளியிட்டு ஜெயக்குமார் விமர்சித்துள்ளார். ஒற்றுமையும், ஒருமைப்பாடும் மிக்க தேசத்தை துண்டாட நினைப்பதை பாஜக விட்டுவிட வேண்டும் என்றும் மக்கள் பிரச்னைகளை பேசுவதே நாட்டின் நலம் என்பதை எத்தனை ஜென்மங்கள் கழித்து பாஜக உணரப் போகிறதோ எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

News May 29, 2024

‘மகாராஜா’ படத்தின் ட்ரெய்லர் நாளை வெளியீடு

image

விஜய் சேதுபதி நடித்துள்ள ‘மகாராஜா’ படத்தின் ட்ரெய்லர், நாளை மாலை 5 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. நிதிலன் சாமிநாதன் எழுதி, இயக்கும் இப்படத்தில் அனுராக் காஷ்யப், மம்தா மோகன்தாஸ், நட்டி, முனிஷ்காந்த், சிங்கம் புலி, பாரதிராஜா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இது, விஜய் சேதுபதியின் 50ஆவது படமாகும். படத்தின் ‘பர்ஸ்ட் லுக்’ போஸ்டர், சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.

News May 29, 2024

மின்சார கார்களுக்கான வாகனப் பதிவு நிறுத்தம்?

image

தமிழகத்தில் மின்சார கார்களுக்கான வாகனப் பதிவு நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எலக்ட்ரிக் வாகனங்களை பதிவு செய்ய வேண்டாம் என வட்டார போக்குவரத்து அலுவலகங்களுக்கு வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும், கடந்த திங்கள்கிழமை முதல் சுமார் 3,000 மின்சார கார்கள் பதிவு செய்யப்படவில்லை எனவும் கூறப்படுகிறது. அதேசமயம், இருசக்கர வாகனம் உள்ளிட்ட மற்ற மின்சார வாகனங்கள் பதிவு செய்யப்படுகின்றன.

News May 29, 2024

முதல் சுற்றில் பி.வி.சிந்து வெற்றி

image

சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் தொடரின் முதல் சுற்றுப் போட்டியில், இந்திய வீராங்கனை பி.வி.சிந்து வெற்றி பெற்றுள்ளார். டேனிஷ் வீராங்கனைக்கு எதிரான இப்போட்டியில், சிந்து அபாரமாக விளையாடி 21-12 என்ற புள்ளிக் கணக்கில் முதல் செட்டை கைப்பற்றினார். 2ஆவது செட்டில் இருவருக்கும் இடையே கடுமையான போட்டி நிலவிய நிலையில், 22-20 என்ற புள்ளிக் கணக்கில் சிந்து போராடி வெற்றி பெற்று 2ஆவது சுற்றுக்கு முன்னேறினார்.

News May 29, 2024

நாட்டின் பாதுகாப்பில் பாஜக விளையாடுகிறது: கார்கே

image

அக்னிபத் திட்டத்தின் மூலம் நாட்டின் பாதுகாப்பில் மோடி அரசு விளையாடி வருவதாக காங்கிரஸ் தலைவர் கார்கே விமர்சித்துள்ளார். இந்த திட்டத்தின் மூலம் ராணுவத்தில் புதிய ஆள்சேர்ப்பு எண்ணிக்கை 75 ஆயிரத்திலிருந்து 46 ஆயிரமாக குறைந்துள்ளதாக குற்றம் சாட்டிய அவர், நாட்டின் பாதுகாப்பில் எவ்வித சமரசத்துக்கும் இடம் தரக்கூடாது என்றார். காங்கிரஸ் ஆட்சியில் அக்னிபத் திட்டம் ரத்து செய்யப்படும் என உறுதி அளித்தார்.

error: Content is protected !!