news

News May 29, 2024

ஜூன் 3க்குள் ஆர்.டி.இ. மாணவர் சேர்க்கையை உறுதி செய்யுங்க

image

கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் ஜூன் 3க்குள் 25% மாணவர் சேர்க்கையை உறுதி செய்ய அனைத்து தனியார் பள்ளிகளுக்கும் பள்ளிகல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. சேர்க்கை பெற்ற மாணவர்களின் விவரம் பெற்றோரின் செல்ஃபோன் எண்களுக்கு OTP அனுப்பப்பட்டு உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும், OTP எண் பெற்ற மாணவர்களின் பெற்றோர் ஜூன் 3க்குள் பள்ளிக்கு சென்று சேர்க்கையை உறுதி செய்ய வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது.

News May 29, 2024

சூர்யாவுக்கு வில்லனாகும் ‘உறியடி’ விஜய்?

image

சூர்யாவின் 44ஆவது படத்தில், உறியடி விஜய் குமார் வில்லனாக நடிக்க உள்ளதாக இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் இப்படத்திற்கு, சந்தோஷ் நாராயணன் இசையமைக்க உள்ளார். பீரியாடிக் கேங்க்ஸ்டர் மற்றும் காதல் கதைக்களத்தில் உருவாகும் இப்படத்தில், சூர்யா இரட்டை வேடங்களில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு வரும் ஜூன் மாதம் அந்தமானில் தொடங்க உள்ளதாகத் தெரிகிறது.

News May 29, 2024

குடிநீரை வீணாக்கினால் ₹2,000 அபராதம்

image

குடிநீரை வீணாக்கினால் ₹2,000 அபராதம் விதிக்கப்படும் என டெல்லி அமைச்சர் அதிஷி எச்சரிக்கை விடுத்துள்ளார். தண்ணீர் தொட்டிகளில் அதிகளவு நீரை சேமித்து வைத்தாலும், வாகனங்களை கழுவினாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இந்த புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. பெரிய அளவில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட கூடாது என்பதற்காக இந்த முன்னேற்பாடுகளை செய்வதாக டெல்லி அரசு கூறியுள்ளது.

News May 29, 2024

நவீன் பட்நாயக் உடல்நலம் குறித்து மோடி குற்றச்சாட்டு

image

ஒடிஷா முதல்வர் நவீன் பட்நாயக் உடல்நலம் குன்றியதற்கு அவரை பின்னால் இருந்து இயக்கும் லாபிதான் காரணம் என பிரதமர் மோடி பரபரப்பு குற்றச்சாட்டை கூறியுள்ளார். திரை மறைவில் அதிகாரத்தை ருசித்து வரும் சிலரது லாபி இதில் அடங்கி இருக்கிறதோ என சந்தேகம் எழுந்துள்ளது. ஒடிஷாவில் பாஜக ஆட்சி அமைந்ததும், தனி விசாரணை ஆணையம் அமைத்து, உடல்நலம் குன்றியதற்கான காரணம் குறித்து விசாரனை நடத்தப்படும் என அவர் அறிவித்துள்ளார்.

News May 29, 2024

மே 31, ஜூன் 1ஆம் தேதி சிறப்புப் பேருந்து

image

முகூர்த்தம், வார இறுதிநாள்களையொட்டி மே 31, ஜூன் 1ஆம் தேதி சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என TNSTC அறிவித்துள்ளது. சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து மே 31இல் 500 பேருந்துகளும் ஜூன் 1இல் 570 பேருந்துகளும், கோயம்பேட்டில் இருந்து மே 31, ஜூன் 1இல் 65 சிறப்புப் பேருந்துகளும், பெங்களூரு, திருப்பூர், ஈரோடு, கோவையில் இருந்து பல்வேறு இடங்களுக்கு 200 சிறப்புப் பேருந்துகளும் இயக்கப்படவுள்ளன.

News May 29, 2024

பயிற்சி ஆட்டம்: இலங்கையை வீழ்த்திய நெதர்லாந்து

image

இலங்கை அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தை நெதர்லாந்து அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. டி20 உலகக்கோப்பைக்கான பயிற்சி ஆட்டம் நடைபெற்று வருகிறது. முதலில் களமிறங்கிய நெதர்லாந்து 181/5 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக மைக்கேல் லெவிட் 55 ரன்களையும், கேப்டன் ஸ்காட் எட்வர்ட்ஸ் 27 ரன்களையும் சேர்த்தனர். இலங்கை அணி 18.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 161 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

News May 29, 2024

கோமாவில் உள்ள கணவரின் சொத்தை மனைவி விற்கலாம்

image

கோமாவில் உள்ள கணவரின் சொத்துகளை விற்க மனைவிக்கு அனுமதி அளித்து உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கணவரின் சொத்துக்களை கையாளும் வகையில் தன்னை பாதுகாவலராக நியமிக்க வேண்டும் என சசிகலா என்பவர் வழக்குத் தொடுத்தார். இதை விசாரித்த நீதிபதிகள் சுவாமிநாதன், பாலாஜி அடங்கிய அமர்வு, கேரள உயர்நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பை சுட்டிக்காட்டி, கணவரின் சொத்துக்களை கையாள மனைவிக்கு அனுமதியளித்து உத்தரவிட்டுள்ளது.

News May 29, 2024

சிரஞ்சீவி பட ஷூட்டிங்கில் அஜித்

image

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் ‘குட் பேட் அக்லி’ படப்பிடிப்பு ஹைதராபாத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நடிகர் சிரஞ்சீவியின் ‘விஷ்வம்பாரா’ படப்பிடிப்பும் அதே இடத்தில் நடந்து வந்த நிலையில், அஜித் அவரை நேரில் சந்தித்து வாழ்த்து கூறியுள்ளார். படப்பிடிப்பு தளத்தில் இருவரும் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும், அஜித் படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு நாளையுடன் நிறைவடைகிறது.

News May 29, 2024

பாகிஸ்தானை விட 2 மடங்கு அதிக நிதி வைத்துள்ள LIC

image

ஆயுள் காப்பீட்டு நிறுவனமான LIC-யின் பங்கு மதிப்பு, தொடர்ந்து அதிகரித்தபடி உள்ளது. தற்போதைய அதன் சந்தை மதிப்பு ₹51.21 லட்சம் கோடியைக் கடந்துள்ளது. இது கடந்த 2023ம் ஆண்டில் ₹43.97 லட்சம் கோடியாக இருந்தது. இந்த மதிப்பு ஒரே ஆண்டில் சுமார் ₹10 லட்சம் கோடி அதிகரித்துள்ளது. அண்டை நாடான பாகிஸ்தானின் பொருளாதாரத்துடன் ஒப்பிடுகையில், இது 2 மடங்கு அதிகம் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.

News May 29, 2024

முன்ஜாமின் கோரி பிரஜ்வால் மனு

image

பாலியல் புகாரில் சிக்கிய கா்நாடக எம்.பி பிரஜ்வால் முன்ஜாமின் கோரி மனு தாக்கல் செய்துள்ளார். வெளிநாட்டில் தலைமறைவாக உள்ள அவர், நாளை பெங்களூரு வரவுள்ள நிலையில், அவரை விமான நிலையத்தில் கைது செய்ய சிறப்பு புலனாய்வு குழுவினர் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியானது. இந்நிலையில், இந்த வழக்கில் கைது செய்யப்படுவதை தவிர்க்க, எம்.பி, எம்எல்ஏக்களுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் பிரஜ்வால் முறையிட்டுள்ளார்.

error: Content is protected !!