India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
காந்தி தொடர்பான மோடியின் கருத்துக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கண்டனம் தெரிவித்துள்ளார். காந்தி படம் வெளியான பின்புதான் அப்படிப்பட்ட மனிதர் இருந்துள்ளார் என்று உலகில் பலருக்கு தெரிந்தது என பேட்டி ஒன்றில் மோடி கூறியிருந்தார். காந்தி படம் 1982இல் வெளியானது என்றும், 1930ஆம் ஆண்டிலேயே தண்டி யாத்திரை மூலம் காந்தி உலகறிந்த தலைவராக திகழ்ந்தார் என காங்கிரஸார் மோடிக்கு பதிலடி தந்துள்ளனர்.
அமெரிக்காவின் நியூயார்க் நகர மக்கள், மன்ஹாட்டன்ஹெஞ்ச் என்ற இயற்கையின் பிரம்மிக்கத்தக்க அழகை ஆண்டுக்கு இருமுறை கண்டு களிக்கின்றனர். அதாவது, மன்ஹாட்டன் கட்டட அமைப்புகளுக்கு இடையே சூரியன் அஸ்தமனமாவது போன்ற தோற்றம், அவர்களை பிரம்மிக்க வைக்கிறது. ஆண்டுதோறும் மே 28, ஜூலை 13ஆம் தேதிகளில் தோன்றும் இந்த நிகழ்வு, நேற்றும் அரங்கேறி தெருக்களை ரம்மியமான சூரிய கதிர்களால் நிரப்பியது.
அரசு, தனியார் உள்ளிட்ட அனைத்து பள்ளிகளிலும் மாணவர்கள் ஆதார் எண் பெறுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. நடப்பு கல்வியாண்டிலேயே மாணவர்கள் பயிலும் பள்ளியில் ஆதார் பதிவு தொடங்கப்படும் என்றும், பள்ளி தொடக்க நாளான ஜூன் 6ம் தேதி அனைத்து வட்டாரங்களிலும் முழுவீச்சில் செயல்படும் எனவும் அறிவித்துள்ளது.
காந்தி குறித்த பிரதமர் மோடியின் கருத்துக்கு ராகுல் கிண்டலாக பதிலளித்துள்ளார். காந்தி பற்றி அறிந்து கொள்ள ‘முழு அரசியல் அறிவியல்’ படித்த மாணவர் மட்டுமே அந்த படத்தை பார்க்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். முன்னதாக, காந்தி திரைப்படம் வெளியாகுவதற்கு முன்பு காந்தியை உலகில் யாருக்குமே தெரியாது என பேட்டி ஒன்றில் மோடி கூறியிருந்தார். மோடியின் இந்த கருத்துக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.
பலராலும் விரும்பி உண்ணப்படும் மாம்பழத்தில் உள்ள வைட்டமின் சி தோலை பாதுகாப்பதுடன், நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். மேலும், வைட்டமின் ஏ கண்பார்வையை மேம்படுத்துவதோடு, வைட்டமின் பி9 செல்களின் வளர்ச்சிக்கு உதவுவதாகவும், நார் சத்து செரிமானத்தை அதிகரிப்பதாகவும் தெரிவிக்கின்றனர். எனினும், உடல் அதிக சர்க்கரையை எரிக்கும் நேரமான காலையில் இதை சாப்பிட பரிந்துரைக்கின்றனர்.
தேர்தல் முடிவுகள் தெரிய வந்த அடுத்த கணமே, ராகுல் காந்தி செய்தியாளர்களை சந்தித்து மின்னணு வாக்கு இயந்திரங்கள் மீது பழி கூறுவார் என மத்திய அமைச்சர் அமித் ஷா விமர்சித்துள்ளார். உத்தர பிரதேசத்தின் தியோரியாவில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் உரையாற்றிய அவர், ராகுல் காந்தி விடுமுறைக்காக பாங்காக், தாய்லாந்து செல்ல ஜூன் 6ஆம் தேதிக்கு தற்போதே விமான டிக்கெட் புக் செய்திருப்பதாக கிண்டல் அடித்தார்.
பீகாரில் இன்று வெப்ப அலை தாங்காமல் பள்ளிகளில் குழந்தைகள் மயங்கி விழுந்த வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து, மாணவர்களின் பாதுகாப்பு நலன் கருதி, பீகாரில் அனைத்து பள்ளிகளுக்கும் நாளை முதல் ஜூன் 8ம் தேதி வரை அம்மாநில அரசு விடுமுறை அளித்துள்ளது. தமிழகத்தில் வெப்பம் அதிகரித்து வருவதால் தமிழக அரசு என்ன முடிவு செய்யப்போகிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
அன்றாடம் பயன்படுத்தும் பல மொபைல் செயலிகள், நமது செயல்பாடுகளை தரவுகளாக சேமித்து வைத்திருக்கின்றன. இந்த தரவுகளை அரசியல் தலைவர்கள் தேர்தல் நேரத்தில் கேட்டுப் பெறுவதாக கூறப்படுகிறது. ஒருவரின் மதம், தாய்மொழி, சமூக வலைதளங்களில் தனது நண்பர்களுக்கு எந்த மாதிரியாக தகவல்களை பகிர்கிறார், என்ன சாப்பிடுகிறார் என்பன போன்ற தரவுகளை கொண்டு வாக்காளர்களை கணிப்பதாக தேர்தல் உத்தி நிபுணரான ருத்விக் ஜோஷி கூறுகிறார்.
டி20 உலகக் கோப்பைத் தொடரை, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் மற்றும் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் காணலாம் என ஐசிசி அறிவித்துள்ளது. குறிப்பாக, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் தமிழ், ஹிந்தி, தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் ஒளிபரப்பப்பட உள்ளது. அதே சமயம், சைகை மொழியிலும் போட்டியை ஒளிபரப்ப சிறப்பு ஏற்பாடு செய்யப்படுள்ளது. அமெரிக்கா, மேற்கிந்திய தீவுகளில் நடைபெறும் இத்தொடர், வரும் ஜுன் 2ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது.
‘மெட்ரோ’, ‘கோடியில் ஒருவன்’ ஆகிய படங்களை இயக்கி கவனம் ஈர்த்த ஆனந்த கிருஷ்ணன், அடுத்ததாக ‘நான் வயலன்ஸ்’ என்ற படத்தை இயக்கியுள்ளார். பாபி சிம்ஹா, சிரிஷ், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்திற்கு, யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்நிலையில், இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை தனது X பக்கத்தில் வெளியிட்டுள்ள இயக்குநர் வெங்கட் பிரபு, படக்குழுவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.