India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ரிசர்வ் வங்கியின் வங்கிகளுக்கான விடுமுறை நாள் குறித்த அறிவிப்பின்படி, தமிழகத்தில் ஜூன் மாதம் 8 நாள்கள் வங்கிகள் இயங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகள், 5 ஞாயிற்றுக்கிழமைகள் மற்றும் ஜூன் 17ஆம் தேதி பக்ரீத் (பொதுவிடுமுறை) என 8 நாள்கள் வங்கிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மற்ற நாள்கள் வழக்கம்போல் வங்கிகள் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாலியல் புகாரில் சிக்கிய கா்நாடக எம்.பி பிரஜ்வால் முன்ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. வெளிநாட்டில் தலைமறைவாக உள்ள அவர், நாளை பெங்களூரு வரவுள்ள நிலையில், அவரை விமான நிலையத்தில் கைது செய்ய சிறப்பு புலனாய்வு குழுவினர் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியானது. இந்நிலையில், இந்த வழக்கில் கைது செய்யப்படுவதை தவிர்க்க, பிரஜ்வால் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்த நிலையில் அது நிராகரிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் மோடியின் தியான நிகழ்ச்சியை அனுமதிக்க கூடாது என தேர்தல் ஆணையத்துக்கு சிபிஎம் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கடிதம் எழுதியுள்ளார். தியான நிகழ்ச்சி தேர்தல் நடத்தை விதிகளுக்கு முரணானது என்ற அவர், வாக்கு அரசியல் செய்வதற்காகவே பிரமதர் மோடி குமரியில் தியானம் செய்ய இருப்பதாக அவர் விமர்சித்துள்ளார். விவேகானந்தர் மண்டபத்தில் மோடி, மே31 முதல் 2 நாள்களுக்கு இரவும் பகலாக தியானம் மேற்கொள்ள உள்ளார்.
தென் கொரியா எல்லைக்குள் வட கொரியா 260க்கும் மேற்பட்ட ராட்சத பலூன்களை அனுப்பியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குப்பைகள், கழிவுகள் உள்ளிட்ட சில பொருட்களை போடுவதற்காக அந்த ராட்சத பலூன்கள் அனுப்பப்பட்டதாகவும், அதில் இருந்த பொருட்களை ராணுவ வெடிமருந்து பிரிவினர் ஆய்வு செய்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பாதுகாப்பாக இருக்கும்படி அந்நாட்டு மக்களுக்கு தென் கொரியா அறிவுறுத்தியுள்ளது.
வாக்கு எண்ணிக்கையின் போது திமுகவினர் தில்லுமுல்லு நடத்துகிறார்களா? என்பதை கண்காணிக்க வேண்டும் என கட்சி முகவர்களுக்கு இபிஎஸ் அறிவுறுத்தியுள்ளார். வாக்குகளை களவாடி புறவாசல் வழியாகவே திமுக ஆட்சிக் கட்டிலில் ஏறியுள்ளதாக விமர்சித்த அவர், வாக்கு எண்ணிக்கையின் போது திமுகவின் மடை மாற்றும் முயற்சியை தடுக்க வேண்டும் என்றார். அதிமுகவுக்கு மக்கள் வெற்றியை வழங்குவார்கள் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
பருவநிலை மாற்றத்தால் ஆண்டுதோறும் இந்தியாவில் வெயில் அதிகரிக்கிறது. குறிப்பாக, டெல்லியில் இன்று வரலாறு காணாத வகையில், 52.3 டிகிரி செல்சியஸ் வெயில் பதிவாகியுள்ளது. வெயில் காலங்களில் நாட்டில் மின் தேவை அதிகரிப்பதோடு, குடிநீர் பற்றாக்குறைக்கும் வழி வகுக்கிறது. 2015 – 2022 காலக்கட்டத்தில் 3,812 பேர் வெப்ப அலையால் உயிரிழந்திருப்பதாக கூறும் உலக சுகாதார அமைப்பு, இது கவனிக்கத்தக்க பிரச்னையாக கருதுகிறது.
மக்களவைக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறும் நிலையில், இதுவரை 6 கட்டத் தேர்தல்களுக்கான வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ளன. 7ம் கட்டமாக 57 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு ஜூன் 1ம் தேதி நடக்க உள்ள நிலையில், அங்கு நாளையுடன் தேர்தல் பரப்புரை முடிவுக்கு வரவுள்ளது. தேர்தல் நடைபெறும் தொகுதிகளில் இருக்கும் வெளியூர், வெளிமாநிலங்களைச் சோ்ந்தவர்கள் நாளை 5 மணிக்கு மேல் இருக்கக்கூடாது.
உலகம் அழியும் வரை, உங்களை மக்கள் நினைவில் வைத்திருப்பார்கள் என்று எதிர்பார்க்கக் கூடாது என நடிகர் மம்முட்டி தெரிவித்துள்ளார். உங்களை மக்கள் எவ்வாறு நினைவு கூர நினைக்கிறீர்கள்? என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், மிக மிகச் சிறந்த மனிதர்களே நினைவு கூரப்படுவதாகவும், இருக்கும் ஆயிரம் நடிகர்களில் தானும் ஒருவன் என்பதால், மறைவுக்குப் பின் ஓராண்டுக்கு மேல் மக்களின் நினைவில் இருப்பேனா எனத் தெரியாது என்றார்.
காந்தி தொடர்பான மோடியின் கருத்துக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கண்டனம் தெரிவித்துள்ளார். காந்தி படம் வெளியான பின்புதான் அப்படிப்பட்ட மனிதர் இருந்துள்ளார் என்று உலகில் பலருக்கு தெரிந்தது என பேட்டி ஒன்றில் மோடி கூறியிருந்தார். காந்தி படம் 1982இல் வெளியானது என்றும், 1930ஆம் ஆண்டிலேயே தண்டி யாத்திரை மூலம் காந்தி உலகறிந்த தலைவராக திகழ்ந்தார் என காங்கிரஸார் மோடிக்கு பதிலடி தந்துள்ளனர்.
அமெரிக்காவின் நியூயார்க் நகர மக்கள், மன்ஹாட்டன்ஹெஞ்ச் என்ற இயற்கையின் பிரம்மிக்கத்தக்க அழகை ஆண்டுக்கு இருமுறை கண்டு களிக்கின்றனர். அதாவது, மன்ஹாட்டன் கட்டட அமைப்புகளுக்கு இடையே சூரியன் அஸ்தமனமாவது போன்ற தோற்றம், அவர்களை பிரம்மிக்க வைக்கிறது. ஆண்டுதோறும் மே 28, ஜூலை 13ஆம் தேதிகளில் தோன்றும் இந்த நிகழ்வு, நேற்றும் அரங்கேறி தெருக்களை ரம்மியமான சூரிய கதிர்களால் நிரப்பியது.
Sorry, no posts matched your criteria.