India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் உள்ள காலபைரவர் கோயிலில் மத்திய அமைச்சர் அமித் ஷா இன்று சாமி தரிசனம் மேற்கொள்ள உள்ளார். இதற்காக வாரணாசியில் இருந்து தனி விமானம் மூலம் அவர் திருச்சி வருகிறார். தொடந்து, அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் காலபைரவர் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்யும் அவர், பின்னர் மாலை 5.20 மணிக்கு திருச்சி சென்று அங்கிருந்து திருப்பதிக்கு பயணம் செய்ய உள்ளார்.
உக்ரைனின் டொனெட்ஸ்க், லுஹான்ஸ்க் பகுதிகளில் ரஷ்யா ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியுள்ளது. இந்தத் தாக்குதலில் உக்ரைன் ராணுவத்தைச் சேர்ந்த 400 வீரர்கள் பலியானதாகவும், உக்ரைன் ராணுவம் பயன்படுத்திய 2 டாங்கிகள், 11 கவச வாகனங்கள் ஆகியவற்றை தாக்கி அழித்து விட்டதாகவும் ரஷ்ய ராணுவம் கூறியுள்ளது. இதுகுறித்து உக்ரைன் தரப்பில் உறுதிப்படுத்தப்படவில்லை.
சிறந்த புத்திசாலியாக விளங்க மூளை திறன் அபாரமாக இருப்பது அவசியம். அந்தத் திறனை அதிகரிக்க சில பயிற்சிகள் மருத்துவ ஆலோசகர்களால் பரிந்துரைக்கப்படுகிறது. 1) புதிர், சோடோக்கு விளையாட்டு விளையாடுதல் 2) வாசிப்பு பழக்கத்தை கடைபிடித்தல் 3) இசைக்கருவி பயிற்சி, வேற்று மொழி என எதையாவது புதிதாக கற்றல் 4) வேடிக்கையான மூளை விளையாட்டுகள் 5)நண்பர்களுடன் இனிமையாக பேசி விளையாடுதல் ஆகும்.
17 ஆண்டுகால டி20 உலகக் கோப்பை வரலாற்றில் அதிக ரன்கள் குவித்த முதல் 5 வீரர்கள் யார்-யாரென தெரிந்து கொள்வோம். இந்திய வீரர் கோலி, 27 போட்டிகளில் 1,141 ரன்கள் குவித்து முதலிடத்தில் உள்ளார். இலங்கை முன்னாள் வீரர் ஜெயவர்த்தனே (1,016 ரன்), வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் வீரர் கெய்ல் (965), இந்திய வீரர் ரோஹித் ஷர்மா (963), இலங்கை முன்னாள் வீரர் தில்ஷான் (897) அடுத்தடுத்து இடங்களில் உள்ளனர்.
ஊரகப் பகுதிகளில் சார் பதிவாளர் அலுவலகங்களில் பதிவு செய்யப்பட்டு வந்த பிறப்பு, இறப்பு விபரங்கள், தற்போது மருத்துவமனை வாயிலாக உள்ளாட்சி அமைப்புகளில் பதிவு செய்யப்படுகிறது. ஆனாலும், சார் பதிவாளர் அலுவலகங்களில் பதிவு செய்யப்பட்ட பிறப்பு, இறப்பு சான்று நகல்கள் தேவைப்படுவோர் எழுத்துப்பூர்வமாக விண்ணப்பித்து பெறலாம். என்ன காரணத்திற்காக கேட்கிறார்கள்? என்பதை தெரிந்து வழங்க கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
ஆவின் பாலகங்களில் காலாவதியான பால் பொருள்களை விற்பனை செய்ய நிர்வாகம்
கட்டாயப்படுத்துவதாக பால் முகவர்கள் சங்கம் தெரிவித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த ஓபிஎஸ், மக்கள் மீது அக்கறை இல்லாமல் வருமானம் வந்தால் போதும் என்று திமுக அரசு செயல்படுவதாகக் குற்றம்சாட்டினார். அத்துடன், இந்த விவகாரத்தில் முதல்வர் தனிக் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
தென்கிழக்கு ரயில்வே மண்டலத்தில் காலியாக உள்ள 1,202 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. Assistant Loco Pilot, Trains Manager பணிகளில் சேர ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். கல்வி தகுதி: 10ஆம் வகுப்பு, ITI, Diploma, Degree. வயது வரம்பு: 18 – 42. சம்பள வரம்பு: ₹5,200/- – ₹20,200/- விண்ணப்பிக்க கடைசி நாள்: ஜூன்12. மேலும் தகவல்களுக்கு <
டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக விராட் கோலி – ஜெய்ஸ்வால் ஜோடியை களமிறக்க வேண்டும் என்று முன்னாள் வீரர் வாசிம் ஜாபர் யோசனை கூறியுள்ளார். ஊடகமொன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், “அந்த தொடக்கத்தைப் பொறுத்து ரோஹித் ஷர்மா, சூர்யகுமாரை 3, 4ஆவது வரிசையில் பயன்படுத்திக் கொள்ளலாம். சுழற்பந்து வீச்சுக்கு எதிராக நன்றாக ஆடக்கூடிய ரோஹித்துக்கு அதில் சிக்கல் இருக்காது” என்றார்.
மருத்துவ காப்பீடு தொகை செட்டில்மெண்ட் தொடர்பாக IRDAI புதிய விதிகளை வகுத்துள்ளது. அதன்படி, காப்பீடு தொகையை ரொக்கமாக இல்லாமல் வங்கி கணக்கில் ஆன்லைனில் செலுத்தும் கோரிக்கை எழுந்தால், 1 மணி நேரத்தில் செட்டில் செய்ய வேண்டும். பிற கோரிக்கைகள் 3 மணி நேரத்தில் தீர்க்கப்பட வேண்டும். வாடிக்கையாளருக்கு காப்பீட்டை புதுப்பிக்க ஒரு மாத அவகாசம் அளித்து, பழைய பலனைத் தொடர வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.
HSBC வங்கிக்கு ரிசர்வ் வங்கி ₹36.4 லட்சம் அபராதம் விதித்துள்ளது. அந்நிய செலாவணி மேலாண்மை சட்டம் 1999இன் தாராளமயமாக்கப்பட்ட பணம் அனுப்பும் திட்ட விதிகளை பின்பற்றாமல் மீறி விட்டதாக HSBCக்கு விளக்கம் கேட்டு ரிசர்வ் வங்கி நோட்டீஸ் அனுப்பியிருந்தது. இதற்கு அந்த வங்கி நிர்வாகம் விளக்கம் அளித்திருந்தது. இந்நிலையில், HSBCக்கு அபராதம் விதித்து ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.